Hyundai Creta N மற்றும் Kia Seltos GTX Line: படங்களில் ஒப்பீடு

published on மார்ச் 15, 2024 07:22 pm by shreyash for ஹூண்டாய் கிரெட்டா என் லைன்

  • 25 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இரண்டு எஸ்யூவி -களும் ஸ்போர்டியர் பம்பர் டிசைன்களை கொண்டுள்ளன. மற்றும் அவற்றின் வழக்கமான வேரியன்ட்களை காட்டிலும் ஆல் பிளாக் இன்டீரியர் உடன் வருகின்றன.

Hyundai Creta N Line and Kia Seltos GT Line

ஹூண்டாய் கிரெட்டா N லைன் கிரெட்டாவின் ஸ்போர்டியர் பதிப்பாக சமீபத்தில் வெளியிடப்பட்டது உள்ளேயும் வெளியேயும் ரெட் கலர் இன்செர்ட்களுடன் ஸ்போர்டியர் முன்பக்கம், ஆல் பிளாக் உட்புற தீம். கிரெட்டா N லைன் ஆனது கியா செல்டோஸ் GT Line -க்கு நேரடி போட்டியாக உள்ளது. இது அதன் டெக் லைன் வேரியன்ட்களில் ஸ்போர்டியர் முன் மற்றும் பின்புற பம்பர் வடிவமைப்பு மற்றும் அனைத்து பிளாக் இன்ட்டீரியரையும் கொண்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் வசதிகளின் அடிப்படையில் இரண்டு எஸ்யூவி -களையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்.

முன்பக்கம்

Hyundai Creta N Line Front
Kia Seltos GT Line Front

முன்பக்கத்தில் தொடங்கி ஹூண்டாய் கிரெட்டா N லைன் மற்றும் கியா செல்டோஸ் GT Line ஆகிய இரண்டும் அந்தந்த வழக்கமான வேரியன்ட்களை காட்டிலும் ஸ்போர்ட்டியர் டிசைன்களுடன் வருகின்றன. இருப்பினும் கிரெட்டா N லைன் என்பதால் முன் கிரில்லில் அதிக விரிவான மாற்றங்கள் இருக்கின்றன. இதில் N லைன் பேட்ஜ் உள்ளது. மேலும் கிரெட்டா N லைனில் உள்ள முன்பக்க பம்பரின் கீழ் பகுதியும் கூடுதல் ஹைலைட்ஸை கொடுக்கும் வகையில் ரெட் கலர் இன்செர்ட்களை பெறுகிறது.

இரண்டு எஸ்யூவி -களும் LED DRL -களுடன் LED ஹெட்லைட்களை பெறுகின்றன. கிரெட்டா N லைன் குவாட்-பீம் LED ஹெட்லைட் அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் ஃபாக் விளக்குகள் கொடுக்கப்படவில்லை. செல்டோஸ் ஐஸ் கியூப் LED ஃபாக் லைட்ஸ் உடன் வருகிறது.

மேலும் பார்க்க: Hyundai Creta N Line வேரியன்ட் வாரியான வசதிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்

பக்கவாட்டு தோற்றம்

Hyundai Creta N Line Side
Kia Seltos Gt Line Side

பக்கவாட்டிலும் கிரெட்டா N லைன் வழக்கமான வேரியன்ட்களை விட அதிகமாக தோற்றத்தில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. சைடு ஃபெண்டரில் ஒரு N லைன் பேட்ஜ் உள்ளது அதேசமயம் செல்டோஸின் பக்கவாட்டிலும் GT லைன் பேட்ஜ் எதுவும் தெரியவில்லை. கிரெட்டாவின் ஸ்போர்டியர் எடிஷன் பாடி கலர் டோர் ஹேண்டில்களுடன் வருகிறது. அதேசமயம் செல்டோஸ் GT லைனில் குரோம்-ஃபினிஷ் செய்யப்பட்ட டோர் ஹேண்டில்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக கிரெட்டா N லைன் பக்க சில்லில் ரெட் சிறப்பம்சங்களை உள்ளடக்கியது. அதன் ஸ்போர்ட்டி தோற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் வழக்கமான கிரெட்டாவிலிருந்து வேறுபடுவதற்கு உதவுகிறது. செல்டோஸுக்கு மாறாக கிரெட்டா N லைனில் உள்ள ORVM -கள் முற்றிலும் பிளாக் கலரில் உள்ளன.

Hyundai Creta N Line Alloys
Kia Seltos GT Line Alloys FT

ஹூண்டாய் கிரெட்டா N லைன் மற்றும் கியா செல்டோஸ் இரண்டும் 18 இன்ச் அலாய் வீல்களுடன் வருகின்றன. இருப்பினும் கிரெட்டா N லைன் ரெட் பிரேக் காலிப்பர்கள் மற்றும் சக்கரங்களின் சென்ட்ரல் கேப்களில் 'N' பேட்ஜிங்குடன் மிகவும் தனித்து தெரிகின்றது.

மேலும் பார்க்க: Hyundai Creta N Line காரின் கலர் ஆப்ஷன்கள் பற்றிய முழுமையான விவரம் இங்கே

பின்புறம்

Hyundai Creta N Line Rear
Seltos GT Line Rear

இங்குள்ள இரண்டு எஸ்யூவி -களும் பின்புறத்தில் கனெக்டட் LED ஹெட்லைட்களை பெறுகின்றன. கிரெட்டா N லைன் அதன் டெயில்கேட்டில் ‘N லைன்’ பேட்ஜை பெறுகிறது. இதேபோல் செல்டோஸின் டெயில்கேட் 'GT Line' பேட்ஜையும் பெறுகிறது. மீண்டும் ஸ்போர்ட்டியர் கிரெட்டா பின்புற பம்பரில் ரெட் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இரண்டிலும் இந்த காம்பாக்ட் எஸ்யூவி -கள் டூயல் டிப் எக்ஸாஸ்ட் உடன் வருகின்றன. ஆனால் செல்டோஸ் தான் சரியான ஸ்பிளிட் எக்ஸாஸ்ட்டை கொண்டுள்ளது அதே நேரத்தில் கிரெட்டா N லைன் ஒரே ஒரு எக்ஸாஸ்ட்டை சேர்த்துள்ளது. எது சிறப்பாகத் தெரிகிறது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம்.

இன்ட்டீரியர்

Hyundai Creta N Line Interior
Kia Seltos GT Line Interior

கிரெட்டா N லைன் மற்றும் செல்டோஸ் GT லைன் இரண்டும் ஆல் பிளாக் நிற உட்புற தீம் கொண்டுள்ளது. இருப்பினும் இது ஹூண்டாய் எஸ்யூவி -தான் டாஷ்போர்டில் ரெட் இன்செர்ட்களுடன் ஒரு படி மேலே செல்கிறது. கிரெட்டா N லைனில் உள்ள ஸ்டீயரிங் வீல் என்பது 3-ஸ்போக் N லைன்-ஸ்பெசிஃபிக் யூனிட் N லைன் பேட்ஜ் உடன் வழக்கமான கிரெட்டாவில் உள்ள ஸ்டீயரிங் வடிவமைப்பிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. செல்டோஸ் GT லைன் அதன் ஸ்டீயரிங் வீலில் 'GT Line' முத்திரையையும் கொண்டுள்ளது. இரண்டு எஸ்யூவி -களும் மெட்டல் பெடல்களை கொண்டுள்ளன. மேலும் கிரெட்டா N லைன் கியர் லீவரில் N லைன் பிராண்டிங்கை கொண்டுள்ளது.

Creta N Line Seats
Kia Seltos Gt Line Seats

கிரெட்டாவின் ரெட் ஸ்டிச் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் இரண்டு எஸ்யூவி -க்களும் ரெட் கலர் ஸ்டிச் உடன் கூடிய ஆல்-பிளாக் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியை கொண்டுள்ளன. கிரெட்டா N லைன் இருக்கைகளில் 'N' சிம்பல் உடன் அதன் பிராண்டிங்கை மேலும் ஹைலைட் செய்து காட்டுகின்றது. அதேசமயம் செல்டோஸ் GT லைனின் ஹெட்ரெஸ்ட்கள் 'GT Line' பிராண்டிங்கை கொண்டுள்ளன.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

ஹூண்டாய் கிரெட்டா N லைன் மற்றும் கியா செல்டோஸ் GT லைன் இரண்டும் டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காக மற்றும் மற்றொன்று டிரைவருக்கான டிஸ்ப்ளேவுக்காக) 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் உள்ளன. பாதுகாப்பைப் பொறுத்தவரை இரண்டு எஸ்யூவி -களும் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களின் முழு தொகுப்பையும் வழங்குகின்றன.

இங்கே ஒரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் கிரெட்டா N லைன் வழக்கமான கிரெட்டாவை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் அதில் பெரிதளவில் வசதிகளில் எந்த வித வித்தியாசமும் இல்லை. இருப்பினும் செல்டோஸ் GTX லைன் வேரியன்ட் டாப்-ஸ்பெக் டெக் லைன் வேரியன்ட்டை விட அதிக அம்சங்களைக் கொண்ட எஸ்யூவி -யின் டாப்-எண்ட் வேரியன்ட் ஆகும்.

பவர்டிரெய்ன் & டிரான்ஸ்மிஷன்

கிரெட்டா N லைன் மற்றும் செல்டோஸ் GT லைன் இரண்டும் ஒரே 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS / 253 Nm) மூலம் இயக்கப்படுகிறது. இரண்டுமே 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT ஆட்டோமேட்டிக்) பெறுகின்றன. இருப்பினும் கிரெட்டா N லைன் மட்டும் "சரியான" 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனின் ஆப்ஷனுடன் வருகிறது.

கியா செல்டோஸின் GT லைன் வேரியன்ட்களும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் (116 பிஎஸ் / 250 என்எம்) 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது.

விலை

ஹூண்டாய் கிரெட்டா N லைன்

கியா செல்டோஸ் GT Line

ரூ.16.82 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் (அறிமுகம்)

ரூ.19.38 லட்சம் முதல் ரூ.19.98 லட்சம்

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்

இந்த இரண்டு செயல்திறன் சார்ந்த எஸ்யூவி -களும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் GT மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா N லைன் ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹூண்டாய் கிரெட்டா n Line

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience