• English
  • Login / Register

Hyundai Creta N Line வேரியன்ட் வாரியான வசதிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்

published on மார்ச் 13, 2024 05:11 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா என் லைன்

  • 38 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கிரெட்டா N லைன் N8 மற்றும் N10 என்ற இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. ஆனால் ஒரே ஒரு டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.

Hyundai Creta N Line

ஸ்டாண்டர்டு கிரெட்டா எஸ்யூவியின் ஸ்போர்டியர் எடிஷனான ஹூண்டாய் கிரெட்டா N லைன் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் முன்பதிவு பிப்ரவரி 2024 மாத பிற்பகுதியில் திறக்கப்பட்டது. ஹூண்டாய் இதை இரண்டு வேரியன்ட்களில் வழங்குகிறது: N8 மற்றும் N10. அதன் வேரியன்ட் வாரியான அறிமுக விலை விவரங்கள் பின்வருமாறு:

வேரியன்ட்

விலை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா)

N8 MT

ரூ.16.82 லட்சம்

N8 DCT

ரூ.18.32 லட்சம்

N10 MT

ரூ.19.34 லட்சம்

N10 DCT

ரூ.20.30 லட்சம்

*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

ஸ்போர்ட்டியர் கிரெட்டாவை நீங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த வேரியன்ட்களில் ஒவ்வொன்றும் என்ன வசதிகளை கொண்டுள்ளது என்பதை கீழே பார்க்கலாம்:

தனித்துவமான வசதிகள்

N8

N10 (N8 -க்கு மேல்)

வெளிப்புறம்

  • ரெட் பிரேக் காலிப்பர்களுடன் 18-இன்ச் அலாய் வீல்கள்

  • பம்ப்பர்களிலும் பக்கவாட்டு ஓரங்களிலும் ரெட் நிற ஹைலைட்ஸ்

  • N லைன் பேட்ஜ்கள்

  • ஆட்டோ-LED ஹெட்லைட்கள்

  • கனெக்டட் LED DRL ஸ்ட்ரிப்

  • கனெக்டட் LED டெயில்லைட்கள்

  • ORVM -களில் LED டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள்

  • ரூஃப் ரெயில்ஸ் 

  • பிளாக் கிரில்

  • பாடி கலர்டு எக்ஸ்ட்டீரியர் டோர் ஹேண்டில்ஸ்

  •  பிளாக் ORVMகள்

  • பின்புற ஸ்பாய்லர்

  • டூயல் டிப் எக்ஸாஸ்ட்

  • ஷார்க் ஃபின் ஆண்டெனா

  • விவரம் கிடைக்கவில்லை

உட்புறம்

  • ரெட் ஆக்ஸன்ட்கள் கொண்ட ஆல் பிளாக் கேபின் தீம்

  • N பிராண்டிங் கொண்ட லெதரைட் இருக்கைகள்

  • லெதரைட்-சுற்றப்பட்ட ஸ்டீயரிங்

  • கியர் ஷிஃப்டருக்கான லெதரெட் ஃபினிஷ் மற்றும் டோர் பேட்ஸ் 

  • ஆக்ஸலரேஷன் மற்றும் பிரேக் பெடல்களுக்கான மெட்டல் ஃபினிஷ் 

  • அனைத்து பயணிகளுக்கும் உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஹெட்ரெஸ்ட்கள்

  • உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • பின்புற பார்சல் ட்ரே

  • ஸ்டோரேஜ் உடன் கூடிய முன் மைய ஆர்ம் ரெஸ்ட்

  • கப்ஹோல்டர்களுடன் பின்புற மைய ஆர்ம்ரெஸ்ட்

  •  
  • 60:40 ஸ்பிளிட் ஃபோல்டு பின் இருக்கை

  • சன்கிளாஸ் ஹோல்டர்

  • ரெட் ஆம்பியன்ட் லைட்ஸ் 

  • 8 வே பவர்டு டிரைவர் சீட்

  • ஆட்டோ-டிம்மிங் IRVM வித் ஹாட் கீஸ்

  • பின் இருக்கை ஹெட்ரெஸ்ட் குஷன்

கம்ஃபோர்ட் மற்றும் வசதி

  • 2-படி சாய்ந்த பின் இருக்கை

  • பின்புற ஜன்னல் சன்ஷேட்

  • பனோரமிக் சன்ரூஃப்

  • பின்புற வென்ட்களுடன் கூடிய டூயல் ஜோன் ஏசி

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங்

  • டிரைவிங் மோட்ஸ்* (இகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்)

  • டிராக்‌ஷன் கன்ட்ரோல் மோட்கள்* (ஸ்நோ, மட் மற்றும் சேண்ட்)

  • பேடில் ஷிஃப்டர்கள்*

  • க்ருஸ் கன்ட்ரோல் 

  • புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்

  • எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் அண்ட் ஃபோல்டபிள் ORVM கள் வித் ஆட்டோஃ போல்டு

  • டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட்

  • கூல்டு க்ளோவ் பாக்ஸ் 

  • முன்பக்க/பின்பக்க USB Type-C சார்ஜிங் போர்ட்கள்

  • 12V பவர் சாக்கெட்

  • நான்கு பவர் விண்டோஸ் 

  • பூட் லைட்ஸ்

  • செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்

  • ஸ்டீயரிங் -கில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ மற்றும் கால் கன்ட்ரோல்கள்

  • டே/நைட் ஐஆர்விஎம்

  • வெல்கம் ஃபங்ஷன் கொண்ட படில் லேம்ப்ஸ்

  • வாய்ஸ்-ஆக்டிவேட்டட் பனோரமிக் சன்ரூஃப்

  • வென்டிலேட்டர் முன் இருக்கைகள்

  • 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே

இன்ஃபோடெயின்மென்ட்

  • 8 இன்ச் டச் ஸ்கிரீன்

  • ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

  • புளூடூத் கனெக்ட்டிவிட்டி

  • 6-ஸ்பீக்கர் சவுண்ட சிஸ்டம்

  • வாய்ஸ் ரெக்ககனைசேஷன்


  • 10.25 இன்ச் டச் ஸ்கிரீன்

  • 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம்

  • கனெக்டட் கார் டெக்னாலஜி

  • அலெக்ஸா கனெக்டிவிட்டி

பாதுகாப்பு

  • 6 ஏர்பேக்ஸ்

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (

  • (ESC)

  • வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM)

  • ஹில்-ஸ்டார்ட் உதவி

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

  • ஆல் டிஸ்க் பிரேக்குகள்

  • அனைத்து பயணிகளுக்கும் 3-பாயிண்ட் சீட்பெல்ட்கள்

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • வாஷர் மற்றும் டிஃபோகர் கொண்ட பின்புற வைப்பர்

  • டூயல் கேமரா டேஷ்கேம் (N8 மட்டும்)

  • ரிவர்ஸிங் கேமரா வித் கைடில்நெஸ் 

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்


  • ADAS ( கொலிஷன் அவாய்டன்ஸ், லேன் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல்* மற்றும் பிற)

  • 360 டிகிரி கேமரா

  • முன் பார்க்கிங் சென்சார்கள்

*DCT வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்

Hyundai Creta N Line Screens

கிரெட்டா N லைன் வழக்கமான கிரெட்டாவின் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் டூயல் கேமரா டேஷ்கேமுடன் கிட்டத்தட்ட அதே வசதிகளைக் கொண்டுள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள பொதுவான வசதிகளில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 360-டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் இங்குள்ள ரேஞ்ச்-டாப்பிங் N10 டிரிம் -க்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. N10 DCT வேரியன்ட்டில் ADAS வசதி சேர்க்கப்பட்டிருப்பதால் வழக்கமான க்ரூஸ் கன்ட்ரோலுக்கு பதிலாக அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோலை பெறுகிறது.

 டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்ன் மட்டும்

ஹூண்டாய் கீழே குறிப்பிட்டுள்ளபடி இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் ஒரே ஒரு டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்குகிறது:

விவரங்கள்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

160 PS

டார்க்

253 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT

கிளைம்டு மைலேஜ்

18 கிமீ/லி 18.2 கிமீ/லி

விலை என்ன?

Hyundai Creta N Line rear

ஹூண்டாய் கிரெட்டா N லைன் வழக்கமான கிரெட்டாவுடன் ஒப்பிடும் போது ரூ.16.82 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் வரையிலான (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) அறிமுக விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.  இது கியா செல்டோஸ் GTX+ மற்றும் எக்ஸ்-லைன், மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி லைன் மற்றும் ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கும் போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: Hyundai Creta N Line மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு

மேலும் படிக்க: கிரெட்டா N லைன் ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai கிரெட்டா என் லைன்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience