Hyundai Creta N Line காரின் கலர் ஆப்ஷன்கள் பற்றிய முழுமை யான விவரம் இங்கே
published on மார்ச் 13, 2024 01:48 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா என் லைன்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
கிரெட்டா N லைன் கார் புதிதாக இரண்டு எக்ஸ்க்ளூஸிவ் கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது. இது வழக்கமான கிரெட்டா எஸ்யூவி உடன் கிடைக்காது.
-
கிரெட்டா N லைன் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாவது N லைன் மாடலாகும்.
-
மோனோடோன் வண்ணங்கள்: டைட்டன் கிரே மேட், அபிஸ் பிளாக் மற்றும் அட்லஸ் ஒயிட்.
-
டூயல்-டோன் ஷேடுகள்: தண்டர் புளூ, ஷேடோ கிரே மற்றும் அட்லஸ் ஒயிட், அனைத்தும் பிளாக் ரூஃப் உடன் கிடைக்கும்.
-
6-ஸ்பீடு MT மற்றும் 7-ஸ்பீடு DCT ஆப்ஷன்களுடன் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் மட்டுமே கிடைக்கிறது.
-
போர்டில் உள்ள அம்சங்களில் டூயல் கேமரா டேஷ்கேம், டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
விலை ரூ.16.82 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது.
இந்தியாவில் புதிதாக விற்பனைக்கு வந்துள்ள ஹூண்டாய் கிரெட்டா N லைன் காரின் விலை மற்றும் கலர் ஆப்ஷன்கள் பற்றிய முழுமையான விவரங்களை ஹூண்டாய் இப்போது வெளியிட்டுள்ளது. இது i20 N லைன் மற்றும் வென்யூ N லைனை தொடர்ந்து இந்தியாவில் ஹூண்டாயின் மூன்றாவது N லைன் மாடலாகும். நீங்கள் இந்த காரை முன்பதிவு செய்ய திட்டமிட்டிருந்தால் இந்த காரில் கிடைக்கும் கலர் ஆப்ஷன்களை பற்றிய விவரங்கள் இங்கே:
மோனோடோன் ஆப்ஷன்கள்
-
டைட்டன் கிரே மேட்
-
அபிஸ் பிளாக்
-
அட்லஸ் ஒயிட்
டூயல்-டோன் ஆப்ஷன்கள்
-
தண்டர் ப்ளூ வித் அபிஸ் பிளாக் ரூஃப்
-
ஷேடோ கிரே வித் அபிஸ் பிளாக் ரூஃப்
-
அட்லஸ் வொயிட் வித் அபிஸ் பிளாக் ரூஃப்
ஹூண்டாய் ஒரு N லைன் காரை மேட் ஃபினிஷ் ஆப்ஷனுடன் வழங்குவது இதுவே முதல் முறையாகும். அபிஸ் பிளாக் மற்றும் அட்லாஸ்ட் ஒயிட் வித் அபிஸ் பிளாக் ரூஃப் உள்ளிட்டவற்றின் மாடலுடன் கிரெட்டா N லைனின் சில ஷேடுகளும் ஷேர் செய்யப்படுகின்றன. அபிஸ் பிளாக் ரூஃப் பெயிண்ட் ஆப்ஷனுடன் கூடிய தண்டர் ப்ளூ நிறம் கிரெட்டா N லைனுக்கு மட்டுமே பிரத்தியேகமானது. ஆனால் மற்ற N லைன் மாடல்களிலும் இதை பார்க்க முடியும். கிரெட்டா N லைனின் இந்த அனைத்து கலர் ஆப்ஷன்களிலும் எஸ்யூவி -களும் வெளிப்புறத்தில் ரெட் கலர் ஹைலைட்ஸை பெறுகின்றன.
கிரெட்டா N லைன் பவர்டிரெய்ன்
விவரங்கள் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
160 PS |
டார்க் |
253 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* |
கிளைம்டு மைலேஜ் |
18 கிமீ/லி, 18.2 கிமீ/லி |
*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
தொடர்புடையது: Hyundai Creta N Line மற்றும் டர்போ-பெட்ரோல் போட்டியாளர்கள்: கிளைம்டு மைலேஜ் ஒப்பீடு
கிரெட்டா N லைன் காரிலுள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு
ஹூண்டாய் கிரெட்டா N லைனில் டூயல்-கேமரா டேஷ்கேம், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்ஸ், டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்), பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றுடன் வருகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.
மேலும் பார்க்க: ஹூண்டாய் கிரெட்டா N லைன் vs ஹூண்டாய் கிரெட்டா: வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன
கிரெட்டா N லைன் விலைகள் மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டா N லைன் காரின் விலை ரூ.16.82 லட்சத்தில் இருந்து ரூ.20.30 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது. இது கியா செல்டோஸ் GTX+ மற்றும் எக்ஸ்-லைன், மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி லைன் மற்றும் ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கும் போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா N லைன் ஆன் ரோடு விலை