• English
  • Login / Register

Hyundai Creta N Line மற்றும் Hyundai Creta: இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன ?

published on மார்ச் 13, 2024 03:06 pm by ansh for ஹூண்டாய் கிரெட்டா என் லைன்

  • 28 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கிரெட்டா N லைன் டர்போ இன்ஜினுக்கான மேனுவல் ஆப்ஷனுடன் சேர்த்து உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் பல காஸ்மெட்டிக் ஸ்போர்ட்டி மாற்றங்களை கொண்டுள்ளது. இருப்பினும் இது ஒரு குறிப்பிட்ட வகை வாடிக்கையாளர்களை மட்டுமே ஈர்க்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஏன் என்பதை பார்க்கலாம்:

Hyundai Creta N Line vs Hyundai Creta: Differences Explored

இப்போது ஹூண்டாய் கிரெட்டாவின் ஸ்போர்ட்டியர் N லைன் வேரியன்ட் இந்தியாவிலும் கிடைக்கிறது. வழக்கமான எஸ்யூவி-யுடன் ஒப்பிடும்போது கிரெட்டா N லைன் நிறைய மாற்றங்களைக் கொண்டுள்ளது. இது வழக்கமான கிரெட்டாவில் கிடைக்கும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கிறது. கிரெட்டா N லைன் மற்றும் அதன் நிலையான வெர்ஷனுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை இங்கே பார்க்கலாம். மேலும் வடிவமைப்பில் தொடங்கி பல்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு எது பொருத்தமானது என்பதையும் கண்டறியலாம்.

எக்ஸ்டீரியர் டிசைன்

Hyundai Creta N Line Front
Hyundai Creta Front

ஹூண்டாய் அதன் மற்ற N லைன் கார்களான i20 மற்றும் வென்யூ போன்றவற்றில் உள்ள அதே அணுகுமுறையை கிரெட்டா N லைனிலும் பின்பற்றியுள்ளது. இது N லைன் கார் என்பதை காட்டும் கலர் ஆப்ஷன்கள், பானட்டிற்குப் பதிலாக கிரில்லில் வைக்கப்பட்ட ஹூண்டாய் லோகோ, புதிய கிரில் சிவப்பு பிரேக் காலிப்பர்களுடன் கூடிய பெரிய 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் பெரிதாக்கப்பட்ட ரூஃப்-இன்டெக்ரேட்டட் ரியர் ஸ்பாய்லர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதலாக ஹூண்டாய் முழுவதும் "N லைன்" பேட்ஜிங் மற்றும் சிவப்பு ஆக்ஸென்ட்களையும் கொடுத்துள்ளது. கிரெட்டாவின் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களை நினைவூட்டும் டூயல்-டிப் எக்ஸ்ஹாஸ்டும் உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த அம்சங்கள் கிரெட்டா N லைனுக்கு அதன் வழக்கமான கிரெட்டாவுடன்  ஒப்பிடும்போது ஒரு  ஸ்போர்டியர் தோற்றத்தை அளிக்கிறது.

Hyundai Creta N Line Rear
Hyundai Creta Rear

இருப்பினும் வழக்கமான கிரெட்டா அதன் தனித்துவமான டிசைன் மற்றும் தனித்தன்மையைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது குறிப்பாக முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. அதன் கனெக்டட் LED DLR-கள், கனெக்டட் டெயில்லைட்கள் புதிய கிரில் மற்றும் ஒட்டுமொத்த ஸ்குவாரிஷ் டிசைன் இது நவீன கவர்ச்சியுடன் மிகவும் நேர்த்தியான தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

வெவ்வேறு கேபின்கள்

Hyundai Creta N Line Cabin

கிரெட்டா மற்றும் கிரெட்டா N லைன் இடையே மற்றொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு அவற்றின் சிறந்த கேபின் அனுபவத்தில் உள்ளது. கிரெட்டா N லைன் அதன் ஸ்போர்ட்டி அம்சத்தை இன்டீரியரில் மேலும் மேம்படுத்தியுள்ளது. குறிப்பாக டாஷ்போர்டு மற்றும் அப்ஹோல்ஸ்டரியில் ரெட் கலர் இன்செர்ட்களுடன் ஆல் பிளாக் கேபினை வடிவமைத்துள்ளது. இந்த சிவப்பு இன்செர்ட்கள் N லைன்-குறிப்பிட்ட கியர் நாப் மற்றும் ஸ்டீயரிங் வீலிலும் தெளிவாகத் தெரியும். கூடுதலாக இந்த வெர்ஷன் "N" பிராண்டிங் கொண்ட ஸ்போர்ட்டி லெதரெட் சீட்களைக் கொண்டுள்ளது.

டாஷ்போர்டில் ஸ்போர்ட்டியான சிவப்பு நிற சிறப்பம்சங்களை நீங்கள் பார்க்கலாம். ரெட் ஆம்பியன்ட் லைட்ஸ் கேபினின் உணர்வை மேலும் மேம்படுத்துகிறது.

Hyundai Creta Cabin

வழக்கமான கிரெட்டாவில் கேபின் வடிவமைப்பு சீரானதாக உள்ளது ஆனால் வொயிட் ஷேடில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய மற்றும் விசாலமான தோற்றத்தை அளிக்கிறது. இது N லைன் வேரியன்ட்டில் காணப்படும் ரெட் கலர் ஹைலைட்ஸ் மற்றும் "N" பிராண்டிங் இல்லாமல் லெதரெட் சீட்களை கொண்டுள்ளது.

புதிய வசதிகள் ஏதும் இல்லை

Hyundai Creta N Line Screens

கிரெட்டா N லைன் வழக்கமான கிரெட்டாவின் டாப்-எண்ட் வேரியன்ட்களில் உள்ள அதே வசதிகளை அப்படியே கொண்டுள்ளது. இந்த வரிசையில் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஒரு பனோரமிக் சன்ரூஃப், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவை உள்ளன. இருப்பினும் பேஸ்-ஸ்பெக் கிரெட்டா N லைன் N8-இல் கூடுதல் வசதியாக டூயல் கேமரா டேஷ் கேமராவை கொண்டுள்ளது. இந்த பாதுகாப்பு உபகரணமானது வாகனம் ஓட்டும் போது சாலை மற்றும் கேபின் இரண்டையும் ரெகார்ட் செய்வதற்கு உங்களை அனுமதிக்கிறது விபத்து ஏற்பட்டால் பயனளிக்கும் வீடியோ மற்றும் ஆதாரம் இதன் மூலமாக கிடைக்கும்.

மேலும் படிக்க: Hyundai Creta N Line மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு

பாதுகாப்பைப் பொறுத்தவரை கிரெட்டா N லைன் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்றவற்றை வழங்குகிறது. இது லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இன்ஜின் ஆப்ஷன்கள்

விவரங்கள்

 
ஹூண்டாய் கிரெட்டா N லைன்

 
ஹூண்டாய் கிரெட்டா

 

இன்ஜின்

 

1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்

 

1.5 லிட்டர் பெட்ரோல் / 1.5 லிட்டர் டீசல் / 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்

 

பவர்

 

160 PS

 

115 PS/ 116 PS/ 160 PS

 

டார்க்

 

253 Nm

 

144 Nm/ 250 Nm/ 253 Nm

 

டிரான்ஸ்மிஷன்

 

6MT 7DCT

 

6MT CVT/ 6MT 6AT/ 7DCT

கிரெட்டா N லைன் பிரத்தியேகமாக ஒற்றை இன்ஜின் ஆப்ஷனை வழங்குகிறது இது இந்த செக்மென்ட்டின் மிகவும் சக்திவாய்ந்த 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆகும். இதற்கு நேர்மாறாக வழக்கமான கிரெட்டா இதே இன்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளது ஆனால் இது DCT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வருகிறது.

மேலும் படிக்க: Hyundai Creta N Line மற்றும் டர்போ-பெட்ரோல் போட்டியாளர்கள்: கிளைம்டு மைலேஜ் ஒப்பீடு

இருப்பினும் வழக்கமான கிரெட்டா 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனையும் வழங்குகிறது ஒவ்வொன்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வருகிறது.

 

விலை

 

ஹூண்டாய் கிரெட்டா 

 

ஹூண்டாய் கிரெட்டா N லைன் (அறிமுகம்)

 

ரூ.11 லட்சம் முதல் ரூ.20.15 லட்சம் வரை



ரூ.16.82 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் வரை

ஹூண்டாய் கிரெட்டா N லைன் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்: N8 மற்றும் N10. வழக்கமான கிரெட்டாவை போலல்லாமல் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை டாப்-ஸ்பெக் வேரியன்ட்டில் பிரத்தியேகமாக வழங்குகிறது. N லைன் வெர்ஷன் அதன் இரண்டு வேரியன்ட்களிலும் இந்த இன்ஜின் ஆப்ஷன் கிடைக்கும். கிரெட்டா N லைன் வழக்கமான ஹூண்டாய் கிரெட்டாவின் வேரியன்ட்டை விட விலை ரூ. 30000 வரை கூடுதலாக வருகின்றது. கூடுதலாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் டர்போ-பெட்ரோல் இன்ஜினை மிகவும் குறைவான விலையில் வழங்குகிறது.

தீர்ப்பு

Hyundai Creta N Line

எனவே நீங்கள் எதை வாங்க வேண்டும்? ஒரு அற்புதமான சாலை பயணம் டைனமிக் கேபின் சூழல் வேண்டுமா ?. மேலும் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் இணைக்கப்பட்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் கூடிய ஸ்போர்ட்டி தோற்றமுடைய காம்பாக்ட் எஸ்யூவி -யை நீங்கள் விரும்பினால் ஹூண்டாய் கிரெட்டா N  லைன் சந்தேகத்திற்கு இடமின்றி உங்களுக்கான சிறந்த தேர்வாகும். இது டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் செக்மென்ட்டில் முன்னணி செயல்திறனை வழங்குகிறது மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் ஈர்க்கக்கூடிய அனுபவத்தை வழங்குகிறது. கியா செல்டோஸ் போன்ற பிற ஆப்ஷன்கள் இதேபோன்ற பவர்டிரெய்ன் செட்டப்புகளை வழங்கக்கூடும் என்றாலும் கிரெட்டா N லைன் தனித்துவமாக தனித்து நிற்கிறது. அதன் பிரத்யேகமான கவர்ச்சியுடன் நீங்கள் சாலையில் கம்பீரமாக தனித்து நிற்பதை இது உறுதி செய்கிறது.

Hyundai Creta

இருப்பினும் ஸ்போர்ட்டி தோற்றம் அல்லது டிரைவிங் டைனமிக்ஸ் போன்றவை உங்களின் முதன்மை ஆப்ஷனாக இல்லாவிட்டால் DCT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கும் டிரைவிங் வசதிக்கு நீங்கள் முன்னுரிமை அளித்தால் வழக்கமான கிரெட்டாவைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். இது விலை குறைவாக இருப்பது மட்டுமல்லாமல் நிறைய இன்ஜின் ஆப்ஷன்களையும் வழங்குகிறது. மேலும் இது N லைன் மாடலில் ஒரே மாதிரியான அம்சங்களுடன் நவீன மற்றும் பிரீமியம் வடிவமைப்பை கொண்டுள்ளது.

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா N லைன் ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai கிரெட்டா என் லைன்

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience