Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டுக்கு முன்னதாகவே டீலர்ஷிப்களை சென்றடைந்துள்ளது
published on ஜனவரி 12, 2024 05:51 pm by shreyash for ஹூண்டாய் கிரெட்டா
- 216 Views
- ஒரு கருத்தை எழுதுக
அட்லஸ் ஒயிட் எக்ஸ்ட்டீரியர் ஷேடில் உள்ள 2024 ஹூண்டாய் கிரெட்டா ஒரு டீலர்ஷிப்பில் காணப்பட்டது. மேலும் ஃபுல்லி லோடட் வேரியன்ட்டாக இருக்கலாம் என தெரிகின்றது.
-
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவிற்கான முன்பதிவு ரூ.25,000 -க்கு தொடங்கியுள்ளது.
-
கனெக்டட் ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை வெளிப்புறத்தில் உள்ள மாற்றங்கள்.
-
உள்ளே, இது டூயல் இன்டெகிரேட்டட் டிஸ்பிளேஸ் மற்றும் புதிய வடிவிலான கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவற்றைப் பெறுகிறது.
-
டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ADAS மற்றும் டூயல் ஜோன் ஏசி ஆகியவை அடங்கும்.
-
3 இன்ஜின்கள் மற்றும் 5 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும்.
-
விலை ரூ.11 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஹூண்டாய் கிரெட்டா அதன் அப்டேட்டட் வடிவமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட கேபின் போன்ற விவரங்களுடன் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. டோக்கன் தொகையான ரூ.25,000 -க்கு இதன் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன, ஜனவரி 16 ஆம் தேதி விலை அறிவிக்கப்படும். அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாகவே, 2024 கிரெட்டாவின் சில யூனிட்கள் டீலர்ஷிப்களை அடைந்துள்ளன.
அப்டேட் செய்யப்பட்ட முன்பக்க மற்றும் பின்பக்க தோற்றம்
டீலர்ஷிப்பில் காணப்பட்ட யூனிட் அட்லஸ் ஒயிட் எக்ஸ்ட்டீரியர் ஷேடில் ஃபினிஷ் செய்யப்பட்டது ஆகும். அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -க்கான ரேடார் முன்பக்க பம்பரில் காணப்படுவதால், இது எஸ்யூவி -யின் ஹையர் வேரியன்ட்டாக இருக்கலாம் எனத் தோன்றியது. அதன் முன்பக்கம் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது இப்போது புதிய வடிவிலான கிரில்லை (புதிய வென்யூவில் இருப்பதை போன்றது) மற்றும் பானெட் அகலம் முழுமைக்கும் இன்வெர்ட்டட் L-வடிவ சிக்னேச்சர் LED DRL ஸ்ட்ரிப்பை கொண்டுள்ளது. ஹெட்லைட்கள் இப்போது ஸ்கொயர் ஹவுசிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக சில்வர் ஸ்கிட் பிளேட் இந்த காருக்கு ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தை கொடுக்கின்றது.
இதையும் பார்க்கவும்: புதிய மஹிந்திரா XUV400 EL Pro வேரியன்ட் 15 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
புதிய அலாய் வீல்களும் சேர்க்கப்பட்டுள்ளன, 2024 கிரெட்டாவின் பக்கவாட்டு தோற்றம் ஒட்டுமொத்தமாக மாறாமல் உள்ளது. பின்புற வடிவமைப்பைப் பற்றி பார்க்கும் போது, ஃபேஸ்லிஃப்டட் எஸ்யூவி ஆனது, முன்புறத்தில் காணப்படும் அதே இன்வெர்ட்டட் L- வடிவ சிக்னேச்சர் கனெக்டட் LED டெயில்லேம்ப்களை கொண்டுள்ளது. அதன் பின்புற பம்பர் வடிவமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது, மேலும் இப்போது ஒரு சில்வர் ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்கவும்: Tata Punch EV டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சென்டர் கன்சோலை பெறுகின்றது
புதிய கேபின் & அம்சங்கள்
2024 ஹூண்டாய் கிரெட்டாவில் முழுமையாக புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது, இது இப்போது டூயல் இன்டெகிரேட்ட்ட ஸ்கிரீன் செட்டப்பை கொண்டுள்ளது (10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே). ஹூண்டாய் அதன் உடன்பிறப்பான கியா செல்டோஸில் காணப்படுவது போல், டூயல்-ஜோன் செயல்பாட்டுடன் (முதல் முறையாக) டச்-எனபில்டு கன்ட்ரோல்களுடன் கூடிய புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனலையும் வழங்குகிறது. பயணிகள் பக்கத்தில் உள்ள டாஷ்போர்டின் மேல் பகுதியில் இப்போது பியானோ பிளாக் பேனல் உள்ளது, அது பக்கவாட்டு ஏசி வென்ட்டை கனெக்ட் செய்கிறது.
2024 கிரெட்டாவில் 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 8-வே பவர்-அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் உள்ளன. இதில் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா மற்றும் 19 லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இப்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டில் வெளிச்செல்லும் மாடலின் பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை ஹூண்டாய் அப்படியே கொடுக்கின்றது: 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (115 PS / 144 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT, மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவற்றில் கிடைக்கிறது. இன்ஜின் (116 PS / 250 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட்டுடன், ஹூண்டாய் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS / 253 Nm) ஆப்ஷனுடன் எஸ்யூவி -யை வழங்குகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 ஹூண்டாய் கிரெட்டாவின் விலை ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் ஹோண்டா எலிவேட் போன்றவற்றுடன் இது போட்டியை தொடரும்
மேலும் படிக்க: கிரெட்டா ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful