• English
    • Login / Register

    Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியாகும் தேதி இதுதானா ?... மேலும் பல கூடுதல் விவரங்கள் இங்கே

    ஹூண்டாய் கிரெட்டா க்காக டிசம்பர் 06, 2023 04:11 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 122 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    அதே நாளில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவின் விலையை ஹூண்டாய் அறிவிக்க வாய்ப்புள்ளது.

    Hyundai Creta facelift

    • இரண்டாம் தலைமுறை கிரெட்டா இந்தியாவில் 2020 -ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.இது இப்போது அப்டேட்டுக்கு தயாராக உள்ளது.

    • புதிய கிரில், பெரிய 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்படலாம்.

    • இதன் கேபினில் வித்தியாசமான டேஷ்போர்டு டிசைன் மற்றும் சீட் அப்ஹோல்ஸ்டரி இருக்கலாம்.

    • டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவற்றையும் பெறலாம்.

    • தற்போதைய பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் மாற்றங்கள் சாத்தியமில்லை; வெர்னாவின் டர்போ-பெட்ரோல் யூனிட் இதிலும் கொடுக்கப்படலாம்.

    • 10.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா இந்தியாவில் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வந்தது, மேலும் ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் 2023 -ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து வடிவம் பெற்று வருகிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவி இந்தியாவில் ஜனவரி 16 ஆம் தேதி அறிமுகமாகலாம் என்ற தகவல் எங்களுக்கு இப்போது கிடைத்துள்ளது.

    இந்த காரில் என்ன வசதிகள் இருக்கும் என்பதற்கான விரைவான பார்வை இங்கே:

    ஒரு புதிய முன்பக்கம்

    Hyundai Creta facelift spied

    சில காலத்திற்கு முன்பு சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுப்பிக்கப்பட்ட மாடலில் இருந்து இது ஒரு தனித்துவமான வடிவமைப்பை பெறும். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சோதனை மாதிரியானது புதிய LED ஹெட்லைட்கள் மற்றும் DRL கள் கொடுக்கப்பட்டிருப்பதை காட்டியது. ஹூண்டாய் புதிய குரோம் ஸ்டுடிங்குடன் புதிய வடிவத்துடன் முன் கிரில் மற்றும் முன் மற்றும் பின்புறத்தில் மாற்றியமைக்கப்பட்ட பம்பர்களையும் கொண்டிருக்கலாம்.

    2024 கிரெட்டாவின் பக்கவாட்டு தோற்றம் தற்போதைய மாடலை விட கிட்டத்தட்ட மாறாமல் இருக்கிறது, பெரிய 18-இன்ச் அலாய் வீல்கள் பின் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை ஹூண்டாய் அல்காஸரிடமிருந்து கடன் வாங்கப்பட்டவையாகும். ஸ்பிளிட் மற்றும் கனெக்டட் LED டெயில்லைட்கள் மற்றும் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்களுடன் புதிய எஸ்யூவியை நாம் பார்க்கலாம்.

    கேபின் மற்றும் அம்சங்கள் பற்றிய விவரம்?

    ஹூண்டாய் வித்தியாசமான டேஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரியை கொடுப்பதன் மூலம் உட்புறத்தில் உள்ள விஷயங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Hyundai Creta facelift front camera

    உபகரணங்களை பொறுத்தவரை, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவில் 360 டிகிரி கேமரா, டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே (ஒருவேளை அல்காஸரில் இருந்து 10.25 இன்ச் யூனிட் பெறப்படலாம்), சூடான முன் இருக்கைகள் மற்றும் டேஷ்கேம் ஆகியவை சேர்க்கப்படலாம். தற்போதைய மாடலில் உள்ள அதே 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவை பெரும்பாலும் தொடர்ந்து கொடுக்கப்படலாம்.

    அப்டேட்டட் ஹூண்டாய் கிரெட்டா புதிய ஹூண்டாய் வெர்னாவில் உள்ளதைப் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லேன்-கீப் அசிஸ்ட், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை இதில் அடங்கும். இது 6 ஏர்பேக்குகள் (ஒருவேளை ஃபேஸ்லிஃப்ட்டுடன் ஸ்டாண்டர்டாக இருக்கலாம்), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவையும் கிடைக்கும்.

    டர்போ-பெட்ரோல் ஆப்ஷன் மீண்டும் கொடுக்கப்படலாம்

    2024 ஹூண்டாய் கிரெட்டா பலவிதமான பவர்டிரெய்ன்களுடன் கிடைக்கும், அவற்றின் விவரங்கள்:

    விவரக்குறிப்பு

    1.5 லிட்டர் N.A. பெட்ரோல்

    1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்

    1.5 லிட்டர் டீசல்

    பவர்

    115 PS

    160 PS

    116 PS

    டார்க்

    144 Nm

    253 Nm

    250 Nm

    டிரான்ஸ்மிஷன்

    6-ஸ்பீடு MT, CVT

    6-ஸ்பீடு MT/ 7-ஸ்பீடு DCT

    6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT

    கிரெட்டாவிற்கான 1.4-லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆப்ஷனுக்கு பதிலாக இப்போது நன்கு அறியப்பட்ட 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது, இது ஏற்கனவே சிறிது காலத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது.

    மேலும் படிக்க: ஒரு காலண்டர் ஆண்டின் இறுதியில் புதிய கார் வாங்குவதன் அனைத்து நன்மைகள் மற்றும் தீமைகள்

    விலை மற்றும் போட்டியாளர்கள்

    Hyundai Creta facelift rear

    ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் ஆரம்ப விலை ரூ.10.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

    பட ஆதாரம்

    மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆட்டோமெட்டிக்

    was this article helpful ?

    Write your Comment on Hyundai கிரெட்டா

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience