சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Hyundai Creta EV இந்தியாவில் மீண்டும் சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது… புதிய விவரங்கள் தெரிய வந்துள்ளன

published on பிப்ரவரி 08, 2024 03:28 pm by shreyash for ஹூண்டாய் கிரெட்டா

ஹூண்டாய் கிரெட்டா EV -யானது 400 கிமீ தூரம் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஹூண்டாய் கிரெட்டா EV ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவை அடிப்படையாகக் கொண்டது.

  • சோதனைக் காரில் புதிய அலாய் வீல்களை பார்க்க முடிந்தது, அதே நேரத்தில் டாஷ்போர்டையும் பார்க்க முடிந்தது.

  • இது டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவற்றைப் பெறும்.

  • 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • விலை ரூ.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம்.

ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் கிரெட்டா புதிய தோற்றம் மற்றும் புதிய வசதிகளுடன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, கிரெட்டா EV என நாம் நினைக்கும் கார் ஒன்று உருவம் மறைக்கப்பட்டு சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்பை ஷாட்களில் இருந்து, ஹூண்டாய் கிரெட்டா EV கிரெட்டா ஃபேஸ்லிஃப்டை அடிப்படையாகக் கொண்டது என்பது உறுதியாகியுள்ளது.

புதிய விவரங்கள்

கிரெட்டா EV -யின் சோதனைக் காரின் உருவம் முழுவதுமாக மறைக்கபட்டிருந்தாலும், அதன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) காருடன் உள்ள ஒற்றுமை நன்றாகவே தெரிகின்றது. . இந்த சோதனை காரை ஒரு EV -யாக வேறுபடுத்தி காட்டுவது அதன் அலாய் வீல்கள் ஆகும், இவை வழக்கமான கிரெட்டாவில் வழங்கப்பட்டுள்ள வீல்களில் இருந்து வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் EV க்கு ஏற்ற ஏரோடைனமிக் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

இதையும் பார்க்கவும்: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் i20 ஸ்போர்ட்ஸ் (O) வேரியண்ட் இந்த 10 நிஜத்தில் எப்படி இருக்கிறது என்பது இங்கே.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ஸ்பை ஷாட்டில் பார்த்தபடி, வழக்கமான கிரெட்டாவை போலவே, கிரெட்டா EV டூயல் 10.25-இன்ச் டிஜிட்டல் ஸ்கிரீன்களுடன் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று டிரைவருக்காகவும்) புதுப்பிக்கப்பட்ட டேஷ்போர்டைக் கொண்டிருக்கும். எலக்ட்ரிக் எஸ்யூவியில் டூயல்-ஜோன் ஏசி, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகிய வசதிகளும் கொடுக்கப்படலாம்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB) போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்

கிரெட்டா EV -யின் பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பற்றிய விவரங்கள் தற்போது குறைவாக இருந்தாலும், கிரெட்டா EV -யானது 400 கிமீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என என எதிர்பார்க்கிறோம்.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு விலை

ஹூண்டாய் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் கிரெட்டா EV -யை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். இதன் விலை ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ZS EV மற்றும் இந்த டாடா கர்வ்வ் EV ஆகிய கார்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். மஹிந்திரா XUV400 EV மற்றும் டாடா நெக்ஸான் EV ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

பட ஆதாரம்

மேலும் படிக்க: கிரெட்டா ஆன் ரோடு விலை

s
வெளியிட்டவர்

shreyash

  • 45 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஹூண்டாய் கிரெட்டா

Read Full News

explore மேலும் on ஹூண்டாய் கிரெட்டா

ஹூண்டாய் கிரெட்டா

Rs.11 - 20.15 லட்சம்* get சாலை விலை
டீசல்21.8 கேஎம்பிஎல்
பெட்ரோல்17.4 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.10.99 - 15.49 லட்சம்*
Rs.14.74 - 19.99 லட்சம்*
Rs.7.99 - 11.89 லட்சம்*
Rs.6.99 - 9.24 லட்சம்*
Rs.60.95 - 65.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை