Hyundai Creta EV காரின் லாஞ்ச் டைம்லைன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
ஹூண்டாய் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கிரெட்டா EV -யின் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.
-
கிரெட்டா EV ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா ICE –யை அடிப்படையாகக் கொண்டது.
-
குளோஸ்டு கிரில், புதிய அலாய் வீல்கள் மற்றும் கனெக்டட் லைட்ஸ் ஆகியற்றின் வடிவமைப்பில் மாற்றங்கள் இருக்கலாம்.
-
கேபின் ஒரே மாதிரியான செட்டப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்படலாம்.
-
இரட்டை 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் செட்டப் பற்றிய விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை; 400 கி.மீ.க்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
2025 ஆண்டின் தொடக்கத்தில் இது அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது; விலை ரூ.20 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
ஹூண்டாய் கிரெட்டா EV ஆண்டு இறுதிக்குள் உற்பத்தி தொடங்கப்பட்டு வரவிருக்கும் என்பதை 2024 ஏப்ரல் மாதத்தில் உறுதிப்படுத்தினோம். இப்போது ஆல் எலக்ட்ரிக் ஹூண்டாய் கிரெட்டா 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இதை இது ஜனவரி மற்றும் மார்ச் 2025 க்கு இடையில் என எடுத்துக் கொள்ளலாம். இந்திய சந்தைக்கு ஹூண்டாய் அறிமுகப்படுத்த தயாராகி வரும் நான்கு புதிய EV -களில் இதுவும் ஒன்று. இதுவரை நமக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களும் இங்கே:
வழக்கமான கிரெட்டாவை விட இந்த காரின் வடிவமைப்பில் உள்ள வேறுபாடுகள்
ஹூண்டாய் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஏற்கனவே பல முறை வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் சில சந்தர்ப்பங்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது புதிய வடிவமைப்பின் கூடுதல் விவரங்களை காட்டுகிறது. முக்கிய வெளிப்புற மாற்றங்களில் குளோஸ்டு கிரில், ட்வீக் செய்யப்பட்ட பம்பர் மற்றும் ஏரோடைனமிக்காக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் ஆகியவை கொடுக்கப்படலாம். இன்டர்னல் கம்பஸ்ஷன் இன்ஜின் (ICE) கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் காணப்பட்ட அதே டூயல் எல்-வடிவ LED DRL -களை இது இன்னும் கொண்டுள்ளது. இதேபோன்ற கனெக்டட் LED டெயில் லைட் செட்டப் மற்றும் புதிய வடிவிலான பின்புற பம்பரைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கேபினுக்குள் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்
முந்தைய ஸ்பை ஷாட்டின் அடிப்படையில், கிரெட்டா EV ஆனது அதன் ICE காரை போன்ற அதே கேபின் அமைப்பைக் கொண்டிருக்கும், அதே டூயல்-டோன் கேபின் தீம் மற்றும் டூயல்-இன்டெகிரேட்டட் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் உட்பட அனைத்து விஷயங்களும் கொடுக்கப்படலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஸ்பை ஷாட் புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை அனைத்து எலக்ட்ரிக் கிரெட்டாவுடன் வழங்கப்படலாம் என்பதை காட்டுகிறது.
போர்டில் உள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம்
ஹூண்டாய் 10.25-இன்ச் தொடுதிரை, 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (அனைத்து வேரியன்ட்களிலும்), 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க: உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) 2024 நிகழ்வில் நெக்ஸ்ட்-ஜென் ஆப்பிள் கார்ப்ளே அறிமுகப்படுத்தப்பட்டது
கிரெட்டா EV எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்
கிரெட்டா EV -யின் பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பற்றிய விவரங்கள் இன்னும் குறைவாகவே இருந்தாலும், அது 400 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை கொண்டிருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். ஹூண்டாய் அதன் உலகளாவிய வரிசையில் உள்ள பல EV -கள் மற்றும் இந்தியாவில் அதன் சில EV போட்டியாளர்களைப் போலவே பல பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் இதை வழங்க முடியும். இருப்பினும், இது ஒரே ஒரு மோட்டார் செட்டப் உடன் மட்டுமே வழங்கப்படும். இது குறைந்த விலை மற்றும் அதிக ரேஞ்ச் -க்கு ஏற்றதாக இருக்கும் .
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டி
ஹூண்டாய் கிரெட்டா EV -யின் ஆரம்ப விலை ரூ 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV மற்றும் டாடா கர்வ்வ் EV மற்றும் மாருதி eVX வரவிருக்கும் கார்களுடன் போட்டியிடும். மேலும் டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.
கூடுதலான கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடர்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆன்ரோடு விலை