சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Hyundai Creta EV காரின் இன்ட்டீரியர் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது, இந்த முறை டூயல் ஸ்கிரீனை பார்க்க முடிகிறது

published on ஜூலை 03, 2024 05:47 pm by samarth for ஹூண்டாய் கிரெட்டா ev

ஸ்பை ஷாட்கள் புதிய ஸ்டீயரிங் வீலுடன் வழக்கமான கிரெட்டா -வில் இருப்பதை போன்ற கேபின் தீம் இருப்பதை காட்டுகின்றன.

  • கிரெட்டா EV கார் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவை அடிப்படையாகக் கொண்டது.

  • இரண்டு 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS உடன் கிரெட்டா EV -யை ஹூண்டாய் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • குளோஸ்டு கிரில், புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய வடிவிலான பம்பர்களை தவிர வெளியில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை.

  • பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் செட்டப் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இது 400 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 2025 ஆண்டில் தொடக்கத்தில் இது அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது; விலை ரூ.20 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

ஹூண்டாய் கிரெட்டா EV இப்போது சில காலமாக தயாரிப்பில் உள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட கிரெட்டா EV -வின் புதிய ஸ்பை ஷாட்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன. இந்த படங்களில் அதன் உட்புறத்தை தெளிவாகப் பார்க்க முடிகிறது.

உட்புறத்தில் உள்ள மாற்றங்கள்

மேலே உள்ள படத்தில் காணப்படுவது போல கிரெட்டா EV ஆனது டூயல்-டோன் தீம் மற்றும் இன்டெகிரேட்டட் டூயல்-டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் உட்பட அதன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜினின் (ICE) அதே கேபின் செட்டப்பை கொண்டிருக்கும். இருப்பினும் ஸ்பை ஷாட்கள் முன்பு காணப்பட்ட சோதனைக் கார்களில் பரவலாக பார்க்கப்பட்ட ஆல்-எலக்ட்ரிக் கிரெட்டாவிற்கென பிரத்தியேகமான புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் இருப்பதை காட்டுகின்றன. கிரெட்டா EV ஆனது அதன் டிரைவ் செலக்டரை, சென்டர் கன்சோலுக்கு பதிலாக, ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால், கூடுதல் பிரீமியத்தில் அயோனிக் 5 ஹூண்டாய் நிறுவனத்தின் EV -யில் பார்த்ததைப் போன்றே கிடைக்கிறது.

சற்றே மாற்றியமைக்கப்பட்ட வெளிப்புறம்

வெளிப்புறத்தை பொறுத்தவரையில் பக்கவாட்டை நெருக்கமாகப் பார்த்தால் புதிய அலாய் வீல் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. கிரெட்டா EV வழக்கமான மாடலில் இருந்து அதே அனைத்து LED லைட்களுடன் தொடர வாய்ப்புள்ளது. ஹூண்டாய் அதை சற்றே மாற்றியமைக்கப்பட்ட பம்பர்களுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். குளோஸ்டு-ஆஃப் கிரில், ட்வீக் செய்யப்பட்ட பம்பர் மற்றும் அதே L-வடிவ LED DRLகள் ஆகியவற்றின் வடிவமைப்பிலும் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Hyundai Creta EV காரின் லாஞ்ச் டைம்லைன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு

கிரெட்டா EV ஆனது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற அதன் பெரும்பாலான வசதிகளை அதன் ICE உடன்பிறப்பிடம் இருந்து கடன் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றைப் பெறலாம்.

கிரெட்டா EV எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்

கிரெட்டா EV -யின் பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பற்றிய விவரங்களை ஹூண்டாய் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இது ஒரு பெரிய பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 400 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும். கிரெட்டா EV ஆனது DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் மற்றும் மல்டி-லெவல் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் கொடுக்கப்படலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஹூண்டாய் கிரெட்டா EV -யின் ஆரம்ப விலை ரூ 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV மற்றும் டாடா கர்வ்வ் EV உடன் போட்டியிடும். மற்றும் இது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 ஆகிய கார்களுக்கு ஒரு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடரவும்

பட ஆதாரம்

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆன் ரோடு விலை

s
வெளியிட்டவர்

samarth

  • 16 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on Hyundai கிரெட்டா ev

Read Full News

explore மேலும் on ஹூண்டாய் கிரெட்டா ev

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.17.49 - 21.99 லட்சம்*
Rs.13.50 - 15.50 லட்சம்*
Rs.12.49 - 17.19 லட்சம்*
Rs.1.30 சிஆர்*
Rs.60.97 - 65.97 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை