ICE மாடலை விட கூடுதல் வசதிகளை பெறும் Hyundai Creta EV
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் க்காக ஜனவரி 10, 2025 05:51 pm அன்று anonymous ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 39 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் கிரெட்டா EV -க்கான சில அளவுகளின் விவரங்களையும் அறிவித்துள்ளது. மேலும் இது 22 லிட்டர் ஃபிராங்க் உடன் வருகிறது.
-
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் கார் ஓட்டுநர் சீட்களுக்கான பாஸ் மோட் மற்றும் மெமரி ஃபங்ஷன்களுடன் பவர்டு கோ-டிரைவர் சீட்களையும் கொண்டுள்ளது.
-
இது 433-லிட்டர் பூட் மற்றும் 22-லிட்டர் ஃப்ரங்க் (பானெட்டின் அடியில்) உடன் வரும்.
-
கிரெட்டா எலக்ட்ரிக் காரின் இது ஸ்டாண்டர்டான காரின் வீல்பேஸ் போலவே 2,610 மிமீ ஆக உள்ளது.
-
ஜனவரி 17 ஆம் தேதி ஆட்டோ எக்ஸ்போ 2025 ஆண்டில் விலை விவரங்கள் அறிவிக்கப்படும்.
ஜனவரி 17 ஆம் தேதி பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் கூடுதல் விவரங்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கிரெட்டா எலக்ட்ரிக் காரை 25,000 ரூபாய்க்கு டோக்கன் தொகை செலுத்தி ஆன்லைனில் அல்லது டீலர்ஷிப்பில் முன்பதிவு செய்யலாம். ஹூண்டாய் கிரெட்டா EV எக்ஸிகியூட்டிவ், ஸ்மார்ட், பிரீமியம் மற்றும் எக்ஸெலன்ஸ் என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கும்.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்: வீல்பேஸ் மற்றும் ஃப்ரங்க் விவரங்கள்
ஹூண்டாய் கிரெட்டாவின் வீல்பேஸ் நீளம் இது 2,610 மிமீ ஆக உள்ளது. வழக்கமான கிரெட்டாவிலும் இதே அளவு உள்ளது. மீதமுள்ள அளவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் இது 4,330 மிமீ நீளம், 1,790 மிமீ அகலம் மற்றும் 1,635 மிமீ உயரம் கொண்ட வழக்கமான கிரெட்டாவை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கிரெட்டா எலக்ட்ரிக்கின் பூட் ஸ்பேஸ் 433 லிட்டர் ஆக இருக்கும் என தெரிகிறது, இதுவும் ICE-பவர்டு காரில் உள்ளதை போலவே உள்ளது. அதனுடன் கிரெட்டா எலக்ட்ரிக் 22-லிட்டர் ஃப்ராங்க் இதில் கிடைக்கும். இது உங்கள் சார்ஜிங் கேபிள் அல்லது பிற பொருள்களை ஸ்டோரேஜ் செய்ய பயனுள்ளதாக இருக்கும்.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரில் கிடைக்கும் கூடுதல் வசதிகள்
கிரெட்டா எலக்ட்ரிக்கின் மேலும் சில வசதிகளையும் ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. ஸ்டாண்டர்டு காரை விட வசதிகள் இதில் அதிகமாக கிடைக்கும். அதில் பாஸ் மோடு உடன் கூடிய 8-வழி பவர்டு கோ-டிரைவர் சீட், டிரைவரின் பவர்டு இருக்கைக்கான மெமரி ஃபங்ஷன் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி காரைப் பூட்ட அல்லது திறக்க உதவும் டிஜிட்டல் கீ ஆகியவை அடங்கும். கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், வழக்கமான மாடலில் காணப்படும் பிஸிக்கல் பட்டன்களுக்கு பதிலாக டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல்கள் டச்-பேஸ்டு யூனிட்டாக கொடுக்கப்படும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவையும் இந்த காரில் கிடைக்கும் கூடுதலான வசதிகள் ஆகும்.
பற்றி படிக்க: ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் போட்டியாளர்கள்: பவர் டெலிவரி புள்ளிவிவரங்கள் ஒப்பீடு
6 ஏர்பேக்குகள், EBD கூடிய ABS, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் லெவல்-2 ஏடிஏஎஸ் ஆகியவை காரின் பாதுகாப்புக்காக உள்ளன.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வழங்கப்படும். இரண்டும் வெவ்வேறாக ட்யூன் செய்யப்பட்ட இ-மோட்டார்களை கொண்டுள்ளன. விவரங்கள் இங்கே:
விவரங்கள் |
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் |
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் லாங் ரேஞ்ச் |
பவர் (PS) |
135 PS |
171 PS |
பேட்டரி பேக் |
42 kWh |
51.4 kWh |
கிளைம்டு ரேஞ்ச் |
390 கி.மீ |
473 கி.மீ |
லாங் ரேஞ்ச் பதிப்பு 0-100 கிமீ வேகத்தை வெறும் 7.9 வினாடிகளில் எட்டிவிடும். மேலும் பேட்டரி பேக் வேகமான சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்யும். இதன் மூலமாக பேட்டரியை 58 நிமிடங்களில் 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
புதிய ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை ரூ.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இது டாடா கர்வ்வ் EV, மஹிந்திரா BE 6, MG ZS EV ஆகியவற்றோடு மட்டுமில்லாமல் வரவிருக்கும் மாருதி சுஸூகி இ விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகியவற்றுக்கும் போட்டியாக இருக்கும்.
மேலும் பார்க்க: ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் ரெகுலர் ஹூண்டாய் கிரெட்டா: இன்ட்டீரியர் வேறுபாடுகள்
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.