Hyundai Creta EV காரின் இன்ட்டீரியர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
ஆல்-எலக்ட்ரிக் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் டேஷ்போர்டு ஸ்டாண்டர்டு வெர்ஷன் காரை போலவே உள்ளது. சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
- ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் ஆனது ICE-பவர்டு மாடலின் டேஷ்போர்டு செட்டப்பை கடன் வாங்கியுள்ளது.
-
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் ஆனது ICE-பவர்டு மாடலின் டேஷ்போர்டு செட்டப்பை கடன் வாங்கியுள்ளது.
-
ஆனால் புதிதாக ஒரு புதிய மூன்று-ஸ்போக் ஸ்டீயரிங், ஒரு பிளாக் மற்றும் வொயிட் கேபின் தீம் மற்றும் பர்ப்பிள் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவை உள்ளன.
-
டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், டிஜிட்டல் கீ, போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை சிறந்த அம்சங்களாகும்.
-
6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் லெவல்-2 ADAS ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
-
கிரெட்டா எலக்ட்ரிக் ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் வெர்ஷன்களுடன் 135 PS மற்றும் 171 PS இ-மோட்டார்களை பெறுகிறது.
-
ஜனவரி 17 ஆம் தேதி ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் விலை விவரங்கள் அறிவிக்கப்படும்.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வரவிருக்கும் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளது. இது வரும் ஜனவரி 17 ஆம் தேதி ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஹூண்டாய் இந்தியா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் சிறந்த வசதிகள் மற்றும் பவர் டெலிவரி புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. கிரெட்டா EV -க்கான முன்பதிவுகளையும் ஹூண்டாய் இந்தியா திறந்துள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்: உட்புற விவரங்கள்
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் டேஷ்போர்டு அமைப்பு ஒட்டுமொத்தமாக பார்க்கையில் ICE-பவர்டு மாடலில் உள்ளதை போன்றே உள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற முக்கியமான செயல்பாடுகளைக் கன்ட்ரோல் செய்வதற்கு டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் பிஸிக்கல் ஹேண்டில்களுடன் டேஷ்போர்டு அதிநவீனமாக தெரிகிறது. இருப்பினும் இது எலக்ட்ரிக் பதிப்பு என்பதால் அதைத் தனித்து காட்ட சில வேறுபாடுகள் உள்ளன.
புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஸ்டீயரிங் வரிசையில் டிரைவ் செலக்டருடன் இருப்பது முக்கியமான வித்தியாசம் ஆகும். கீழ் சென்டர் கன்சோல் மாற்றியமைக்கப்பட்டு இப்போது டிரைவ் மோட் செலக்டர் கொடுக்கப்பட்டுள்ளது, கப் ஹோல்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்கிற்கான சுவிட்ச் ஆகியவையும் உள்ளன. கடைசியாக எலக்ட்ரிக் கிரெட்டாவில் உள்ள டேஷ்போர்டு ICE மாடலின் கிரே கலர் மற்றும் வொயிட் கலருக்கு பதிலாக பர்ப்பிள் ஆம்பியன்ட் லைட்களுடன் பிளாக் மற்றும் வொயிட் கலரில் ஆம்பர் கலர் ஆம்பியன்ட் லைட்கள் உள்ளன.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரில் இருக்கும் சிறந்த வசதிகள்
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் வசதிகள் ICE-பவர்டு காரை உள்ளதை போலவே உள்ளது. டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, கனெக்டட் கார் டெக்னாலஜி, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், பவர்டு ஓட்டுனர் இருக்கை, 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் , ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றுடன் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவை தவிர கூடுதலாக கிரெட்டா எலக்ட்ரிக் காரில் பணம் செலுத்துதல் போன்ற சில புதிய வசதி வசதிகளும் உள்ளன. இதன் மூலம் நீங்கள் இன்ஃபோடெயின்மென்ட் திரையில் இருந்து வாகனத்தின் சார்ஜிங்கிற்கு பணம் செலுத்தலாம். இது டிஜிட்டல் கீ உடன் வருகிறது, ஆகவே ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வாகனத்தை லாக் செய்யலாம் அல்லது திறக்கலாம்.
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக இது லெவல்-2 ADAS உடன் வருகிறது, இது ரேடாரை பயன்படுத்தி முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து தானாகவே வேகத்தை குறைக்கும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இந்த 10 படங்களில் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரைப் பாருங்கள்
காரின் பவர் டெலிவரி புள்ளி விவரங்கள்
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கும்: 42 kWh மற்றும் லாங் ரேஞ்ச் 51.4 kWh யூனிட். சிறிய பேட்டரி 135 PS அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டார் உடனும், அதே நேரத்தில் பெரிய பேட்டரி அதிக சக்தி வாய்ந்த 171 PS இ-மோட்டார் உடனும் இணைக்கப்படும். விரிவான விவரங்கள் இங்கே:
|
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் |
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் லாங் ரேஞ்ச் |
பவர் (PS) |
135 PS |
171 PS |
பேட்டரி பேக் |
42 kWh |
51.4 kWh |
ARAI கிளைம்டு ரேஞ்ச் |
390 கி.மீ |
473 கி.மீ |
ஹூண்டாய் கிரெட்டா EV ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் மற்றும் DC சார்ஜரை பயன்படுத்தி வெறும் 58 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். 11 கிலோவாட் ஹோம் பாக்ஸ் சார்ஜர் மூலம் டாப்-அப் செய்தால், 10 முதல் 100 சதவீதம் வரை ரீசார்ஜ் செய்ய நான்கு மணிநேரம் எடுக்கும்.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்: விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் விலை சுமார் ரூ.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கலாம். இது டாடா கர்வ், MG ZS EV, மஹிந்திரா பிஇ 6 மட்டுமில்லாமல் வரவிருக்கும் மாருதி இ விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகியவற்றுக்கும் போட்டியாக இருக்கும்
இதே போன்ற கட்டுரையை வாசிக்க: Hyundai Creta EV -க்கான முன்பதிவுகள் தொடக்கம்
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.