டீலர்ஷிப்களை வந்தடைந்தது புதிய Hyundai Creta EV
published on ஜனவரி 20, 2025 09:35 pm by dipan for ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
- 5 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாயின் இந்திய வரிசையில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் EV ஆக கிரெட்டா எலக்ட்ரிக் உள்ளது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இப்போது சில இந்திய டீலர்ஷிப்களை வந்தடைந்துள்ளது. இது எக்ஸிகியூட்டிவ், ஸ்மார்ட், பிரீமியம் மற்றும் எக்ஸெலன்ஸ் என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது. காரின் விலை ரூ. 17.99 லட்சம் முதல் ரூ. 23.50 லட்சம் வரை (அறிமுகம் - ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது.
கிரெட்டா எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவு ஏற்கனெவே தொடங்கியுள்ளது. ஆனால் டெஸ்ட் டிரைவ்கள் மற்றும் டெலிவரிகளுக்கான தேதிகளை இன்னும் ஹூண்டாய் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இது டீலர்ஷிப்களுக்கு வரத் தொடங்கியுள்ளதால், டெஸ்ட் டிரைவ்கள் விரைவில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன.
டீலர்ஷிப் -ல் இருந்து கிரெட்டாவின் எலக்ட்ரிக் பதிப்பின் சில படங்கள் கிடைத்துள்ளன. அவை மூலமாக தெரிய வரும் விவரங்கள் இங்கே.
படம்பிடிக்கப்பட்ட யூனிட் மூலம் தெரிய வரும் விவரங்கள்
ஷோரூமில் காட்சிப்படுத்தப்பட்ட கிரெட்டா எலக்ட்ரிக் ஓஷன் ப்ளூ நிறத்தில் அபிஸ் பிளாக் ரூஃபை கொண்டுள்ளது. 17-இன்ச் ஏரோடைனமிக் அலாய் வீல்கள், சுற்றிலும் LED லைட்ஸ் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ரேடார் ஹவுஸிங் ஆகியவற்றை நாம் பார்க்க முடிகிறது. ஆக்டிவ் ஏர் ஃபிளாப்ஸ், சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் பிளாக் ரூஃப் ரெயில்ஸ் ஆகியவை படத்தில் உள்ள யூனிட்டில் தெரிகின்றன.
டூயல் ஸ்கிரீன் செட்டப், ஒரு ஆட்டோ ஏசி கண்ட்ரோல் பேனல், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஓட்டுநர் இருக்கையில் மெமரி ஃபங்ஷனுக்கான பட்டன்கள் ஆகியவற்றைக் காணலாம். பின் இருக்கைகள் முன் இருக்கைகளுக்குப் பின்னால் கப்ஹோல்டர்கள் மற்றும் டிரே உடன் கூடிய சென்ட்ரல் ஹேண்டிலை கொண்டுள்ளன.
இந்த வசதிகள் அனைத்தும், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கிரெட்டா எலக்ட்ரிக், பெரிய பேட்டரி பேக்குடன் மட்டுமே கிடைக்கும் என்பதால் டாப்-ஆஃப்-தி-லைன் எக்ஸெலன்ஸ் வேரியன்ட் என்று தெரிய வருகிறது.
கிரெட்டா எலக்ட்ரிக் பெறும் பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் விவரங்கள் இரண்டையும் பார்க்கலாம்.
மேலும் படிக்க: Skoda Kylaq மற்றும் Tata Nexon: BNCAP மதிப்பீடுகள் ஓர் ஒப்பீடு
கிரெட்டா எலக்ட்ரிக்: பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
பேட்டரி பேக் |
42 kWh |
51.4 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
1 |
பவர் |
135 PS |
171 PS |
டார்க் |
200 Nm |
200 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (MIDC பகுதி 1+2) |
390 கி.மீ |
473 கி.மீ |
11 கிலோவாட் ஏசி சார்ஜர் சிறிய பேட்டரி பேக்கை 4 மணிநேரத்தில் 10-100 சதவீதத்திலிருந்து சார்ஜ் செய்ய முடியும். அதே சமயம் பெரிய யூனிட்டிற்கு 4 மணி நேரம் 50 நிமிடங்கள் எடுக்கும். மறுபுறம் 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் EV -யின் இரண்டு பேட்டரி பேக்குகளையும் 58 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்: விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் விலை ரூ. 17.99 லட்சம் முதல் ரூ. 23.50 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது. இருப்பினும் இந்த விலை விவரங்கள் 11 கிலோவாட் ஏசி சார்ஜரை உள்ளடக்கியதல்ல. அதை மட்டும் தனித்தனியாக ரூ.73,000க்கு வாங்க வேண்டும். கிரெட்டா டாடா கர்வ் EV, மஹிந்திரா BE 6, MG ZS EV மற்றும் வரவிருக்கும் மாருதி இ விட்டாரா ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.