சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Hyundai Creta CVT மற்றும் Honda Elevate CVT: எது நமக்கான சிறந்த செயல்திறனை வழங்குகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

published on ஜூன் 03, 2024 07:54 pm by samarth for ஹூண்டாய் கிரெட்டா

ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஹோண்டா எலிவேட் இரண்டும் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் CVT -யுடன் வருகிறது. ஆக்சலரேஷன் மற்றும் பிரேக்கிங் சோதனைகளில் அவை எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஹூண்டாய் கிரெட்டா காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் நீண்ட காலமாக சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் இது புதிய மற்றும் நவீன போட்டியாளர்களைப் பெற்றுள்ளது, இதில் ஹோண்டா எலிவேட், இது பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே கிடைக்கக்கூடியது. இரண்டு காம்பாக்ட் எஸ்யூவி-களும் CVT ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்ட நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளன. இரண்டு எஸ்யூவி-களையும் அவற்றின் CVT ஆட்டோமேட்டிக் மூலம் சோதித்துள்ளோம். மேலும் சாலைகளில் செய்யப்பட்ட சோதனைகளில் எந்த மாடல் முதலிடம் வகிக்கிறது என்பதைப் பார்க்க அவற்றின் செயல்திறனை ஒப்பிட்டுப் பார்த்து அதைப்பற்றி நன்கு புரிந்துகொள்வோம்.

பவர்டிரெய்ன் பற்றிய விவரங்கள்

விவரங்கள்

ஹூண்டாய் கிரெட்டா

ஹோண்டா எலிவேட்

இன்ஜின்

1.5 லிட்டர் N/A பெட்ரோல்

1.5 லிட்டர் N/A பெட்ரோல்

பவர்

115 PS

115 PS

டார்க்

144 Nm

145 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீட் MT/CVT

6-ஸ்பீட் MT/CVT

இந்த இரண்டு எஸ்யூவி-களின் 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் இன்ஜின்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். மேலும் ஹோண்டா எஸ்யூவி ஆனது அதன் ஹூட்டின் கீழ் சற்று அதிக சக்தி வாய்ந்த இன்ஜினைகொண்டுள்ளது என்பது அட்டவணையில் இருந்து தெரிகிறது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பொறுத்தவரை இரண்டு எஸ்யூவி-களும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் CVT ஆகியவற்றுக்கு இடையே ஒரு தேர்வை வழங்குகின்றன.

ஆக்சிலரேஷன் சோதனை

சோதனைகள்

ஹூண்டாய் கிரெட்டா CVT

ஹோண்டா எலிவேட் CVT

வித்தியாசம்

0-100 கிமீ/மணி

13.36 வினாடிகள்

12.35 வினாடிகள்

+1.01 வினாடிகள்

கால் மைல்

19.24 வினாடிகளில் 119.92 கிமீ/மணி வேகம்

18.64 வினாடிகளில் 125.11 கிமீ/மணி வேகம்

+0.6 வினாடிகள்

கிக் டவுன் (20-80 கிமீ/மணி)

7.3 வினாடிகள்

7.2 வினாடிகள்

+0.1 வினாடிகள்

0-100 கிமீ/மணி ஆக்சிலரேஷன் சோதனையில் கிரெட்டாவுடன் ஒப்பிடும்போது, ​​ஹோண்டாவின் காம்பாக்ட் எஸ்யூவி 1.01 வினாடிகள் வேகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல், கால் மைல் சோதனையில், எலிவேட் 0.6 வினாடிகள் மட்டுமே கிரெட்டாவை விட வேகமாக இருந்தது. இருப்பினும், கிக்டவுனில் 20 முதல் 80 கிமீ/மணி வரை, அவற்றின் நேரங்களின் படி கிட்டத்தட்ட எந்த வித்தியாசமும் இல்லை.

மேலும் பார்க்க: கியா EV3 இன் இந்த 5 விஷயங்களை ஹூண்டாய் கிரெட்டா EV-லும் காணலாம்

பிரேக்கிங் சோதனை

சோதனைகள்

ஹூண்டாய் கிரெட்டா CVT

ஹோண்டா எலிவேட் CVT

வித்தியாசம்

100-0 கிமீ/மணி

38.12 மீட்டர்

37.98 மீட்டர்

+0.14 மீட்டர்

80-0 கிமீ/மணி

24.10 மீட்டர்

23.90 மீட்டர்

+0.2 மீட்டர்

பிரேக்கிங் சோதனையில், 100 கிமீ / மணி வேகத்தில் இருந்து 0-க்கு வருவதற்கான தூரம் வெறும் 0.14 மீட்டர் வித்தியாசம் மட்டுமே, அதே நேரத்தில் ஹோண்டா எலிவேட் பிரேக்கைப் பயன்படுத்திய பிறகு 37.98 மீட்டர்களைக் கடந்தது, கிரெட்டா 38.12 மீட்டர்களை கடந்து முழுமையாக நிறுத்தப்பட்டது. ஹூண்டாய் கிரெட்டாவுடன் ஒப்பிடும்போது, ​​எலிவேட் 0 முதல் 80 கிமீ வேகத்தை செல்வதில் வெறும் 0.2 மீட்டர் குறைவாகவே சென்றது. இரண்டு எஸ்யூவி கார்களும் 17 இன்ச் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் கிரெட்டாவில் அணைத்து வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன, அதேசமயம் எலிவேட்டில் முன்பக்க வீல்களுக்கு மட்டுமே டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

விலை ஒப்பீடு

ஹூண்டாய் கிரெட்டா CVT

ஹோண்டா எலிவேட் CVT

ரூ.15.86 லட்சம் முதல் ரூ.18.88 லட்சம் வரை

ரூ.13.71 லட்சம் முதல் ரூ.16.51 லட்சம் வரை

விலையை பற்றி பேசினால், கிரெட்டா பெட்ரோல் CVT-யுடன் ஒப்பிடும்போது, ​​எலிவேட்டின் பெட்ரோல் CVT மாடல் ரூ.2.15 லட்சம் குறைவாக உள்ளது. இந்த இரண்டு எஸ்யூவி-களும் கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டாவின் ஆன் ரோடு விலை

s
வெளியிட்டவர்

samarth

  • 17 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஹூண்டாய் கிரெட்டா

Read Full News

explore similar கார்கள்

ஹூண்டாய் கிரெட்டா

Rs.11 - 20.15 லட்சம்* get சாலை விலை
டீசல்21.8 கேஎம்பிஎல்
பெட்ரோல்17.4 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூன் சலுகைகள்ஐ காண்க

ஹோண்டா எலிவேட்

Rs.11.69 - 16.51 லட்சம்* get சாலை விலை
பெட்ரோல்16.92 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூன் சலுகைகள்ஐ காண்க

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை