சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஹோண்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி யின் பெயர் இறுதியாக வெளியாகியுள்ளது

published on மே 04, 2023 09:11 pm by rohit for ஹோண்டா எலிவேட்

சுமார் ஆறு ஆண்டுகளில் இந்தியாவுக்கான ஹோண்டாவின் முதல் புதிய மாடலாக எலிவேட் உள்ளது, மேலும் அதன் தயாரிப்பு வரிசையில் சிட்டியை இது முந்திச் செல்லும்.

  • ஆகஸ்ட் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் விரைவில் எலிவேட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது, .

  • எஸ்யூவி க்கு புக்கிங்களையும் சில டீலர்ஷிப்புகள் ஏற்கனவே ஏற்றுக்கொள்கின்றனர்.

  • வெளிப்புற சிறப்பம்சங்களில் இணைக்கப்பட்ட LED டெயில்லைட்டுகள், ஒரு பெரிய கிரில் மற்றும் சங்கி வீல் வளைவுகள் ஆகியவை அடங்கும்.

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் அடாஸ் உடன் வரலாம்.

  • ஸ்ட்ராங் ஹைப்ரிட் அமைப்பு உட்பட சிட்டியில் இருந்து இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் பெற வாய்ப்புள்ளது.

  • ஆரம்ப விலை ரூ.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.

காம்பேக்ட் எஸ்யூவி விரைவில் மற்றொரு உறுப்பினரை வரவேற்கும், அதன் பெயர் ஹோண்டா எலிவேட் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இன்னும் தனது திரையை விலக்கவில்லை என்றாலும், சில டீலர்ஷிப்கள் வரவிருக்கும் எஸ்யூவிக்கான முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்தியாவில் ஆறு ஆண்டுகளில் ஹோண்டாவின் முதல் புதிய மாடலான எலிவேட் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் உலகளவில் விற்பனைக்கு வரும். "எலிவேட்" பெயர்ப்பலகை மூலம், கார் தயாரிப்பாளர் V இல் முடிவடையும் பெயர்களைக் கொண்ட அதன் நீண்டகால பெயரிடல் முறையை விட்டுவிட்டடார் என்பது தெரிகிறது (எடுத்துக்காட்டாக CR-V, WR-V, மற்றும் BR-V). இது ஹோண்டாவின் புதிய சகாப்தத்தின் மாடல்களின் தொடக்கத்தைக் குறிக்கலாம், அவற்றில் சில மின் மயமாக்கப்பட்டவை.

புதிய டீசர் விபரம்

ஹோண்டா கார் இந்தியா எஸ்யூவியில் உள்ள "எலிவேட்" பேட்ஜிங்கை வெளிப்படுத்தும் புதிய சமூக ஊடக இடுகையை வெளியிட்டுள்ளது. மோனிகரைத் தவிர அதிக விவரங்களை பார்க்க முடியாது என்றாலும், எஸ்யூவியின் இணைக்கப்பட்ட LED டெயில்லைட்டுகளின் பார்வையை இது நமக்கு வழங்குகிறது.

மேலும் படிக்கவும்: இந்தியாவில் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்த ஹோண்டா அமேஸ்:அதன் முக்கிய விவரக்குறிப்புகளை இதோ பார்க்கலாம்:

இதுவரை நாம் அறிந்தவை

கார் தயாரிப்பாளர் பகிர்ந்த முந்தைய டீசரில் LED ஹெட்லைட்டுகள், டிஆர்எல் மற்றும் LED ஃபாக் லேம்ப்புகளுடன் LED எஸ்யூவியின் நிழல்படம் காட்டப்பட்டுள்ளது. எஸ்யூவியின் முந்தைய ஸ்பை காட்சிகளில் சங்கி சக்கர வளைவுகள், ரூஃப் ரெயில்கள் மற்றும் ஒரு பெரிய கிரில் ஆகியவையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்பார்க்கபடும் ஆன்போர்டு உபகரணங்கள்

சிட்டியின் 8 இன்ச் யூனிட், சிங்கிள் பேன் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜிங், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன்புற இருக்கைகளுடன் ஒப்பிடும்போது எலிவேட் எஸ்யூவி பெரிய டச் ஸ்கிரீன்யைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா மூலம் பயணிகளின் பாதுகாப்பு கவனிக்கப்படும். இது பல அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம்களை (அடாஸ்) வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் பவர் ஆப்ஷன் கிடையாது


சிட்டியைப் போலவே, எலிவேட் எஸ்யூவியும் பெட்ரோல் விருப்பம் மட்டுமே வழங்கும் மாடலாக இருக்கும். சிட்டியிலிருந்து அதே 1.5லிட்டர் நேச்சுலரில அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVTஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டாவின் காம்பேக்ட் எஸ்யூவியில் சிட்டி ஹைப்ரிட் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் (126 பிஎஸ் காம்பினேஷன்) இருக்கும்.

மேலும் படிக்கவும்: நவீன இன்ஜின் பிரேக்- இன் முறைகளைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய விளக்கம்

விலை விவரம் மற்றும் போட்டியாளர்கள்

ஹோண்டா எலிவேட் காரின் ஆரம்ப விலை ரூ.11 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும், ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவி எம்ஜி ஆஸ்டர், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹூண்டாய் க்ரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுடன் போட்டி போடும்.

r
வெளியிட்டவர்

rohit

  • 86 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஹோண்டா எலிவேட்

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை