முதல் முறையாக இந்திய சாலைகளில் தென்பட்ட ஹோண்டாவின் புதிய SUV. மாருதி கிராண்ட் விட்டாராவுக்கு போட்டியாளரா

published on மார்ச் 02, 2023 08:49 pm by sukrit for ஹோண்டா எலிவேட்

  • 46 Views
  • ஒரு கருத்தை எழுதுக

செடானின் வலுவான-ஹைப்ரிட் டிரைவ் டிரெயின் உள்ளிட்ட ஹோண்டா சிட்டியின் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் போன்றவற்றை காம்பாக்ட் SUV-யும் பெற்றுள்ளது.

  • மெல்லிய, கிராஸ்ஓவர் போன்ற பின்புற முனையுடன் கூடிய அற்புத முன்புற ஸ்டைலிங்கை 2023 ஹோண்டா SUV கொண்டுள்ளது.  

  • வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் மற்றும் ADAS போன்ற அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது  

  • சிட்டியின் 1.5லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் சிட்டி e-HEVக்களின் வலுவான ஹைப்ரிட்டையும் பெற்றுள்ளது.

  • 2023 ஆண்டின் மத்தியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் ரூ.11 இலட்சம் (எக்ஸ் ஷோ ரூம்) விலையிலிருந்து தொடங்கும்.  

இந்தியாவிற்கான பைப்லைன் வரிசையில் ஹோண்டா புதிய SUV யை அறிமுகப்படுத்த உள்ளது, இந்தியாவில் அந்த புதிய காரின் சாலை சோதனைகளின் போது எடுக்கப்பட்ட புதிய ஸ்பை ஷாட்டுகள் வெளியாகியுள்ளன . 2023 ஆம் ஆண்டின் மத்தியில்  வர உள்ள புதிர் நிறைந்த SUV இன் முதல் அறிமுகத்தை எதிர்நோக்கியுள்ளோம். அது  மாருதி கிராண்ட் விட்டாராவிற்கு  போட்டியாக  இருக்கும். மற்றும் ரூ.11 இலட்சம் (எக்ஸ் ஷோ ரூம்)முதல் அதன் விலை தொடங்கலாம்.

ஸ்பை ஷாட்டுகள் என்ன கூறுகின்றன

புதிய  ஹோண்டா  காம்பாக்ட் SUV , எவ்வாறு தோற்றமளிக்கும் அல்லது எவ்வாறு அழைக்கப்படும் போன்ற விவரங்கள் இன்னமும் தெரியவில்லை . ஸ்பை ஷாட்டுகளிலிருந்து, LED DRLகளுடன் பெரிய கிரில்லின் அற்புதமான தோற்றத்துடனான SUV யை நாம் பார்க்க முடிகிறது.  

ஹெவியான கேமோவைத் தவிர்த்து, கீழ் கிரில் உடன் கிளாம்ஷெல் போனெட் மற்றும் முன்புற பம்பர் அமைப்புகள்  பிரிக்கப்படாமல் இருப்பது தெரிகிறது. ஓட்டுமொத்த வெளிப்புறத்தோற்றம் பிரமிப்பாக மற்றும் SUV க்கு ஏற்றதாக இருக்கிறது.

பின்புற முக்கால் பங்கு கோணத்திலிருந்து, SUV மெல்லியதாகவும் சாய்ந்த பின்புற வின்ட்ஷீல்டிலிருந்து கிராஸ்ஓவர் போன்றும் தோன்றுகிறது. லைட்டுகள் பிரிக்கப்பட்டு, காரைச் சுற்றியும் பொருத்தப்பட்டுள்ளன மற்றும் டெயில்கேட்டில் நம்பர்பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.

என்ஜின்கள் மற்றும் அம்சங்கள்

SUV யின் போனட்டின் கீழ் ,  ஹோண்டா சிட்டி யில் உள்ளதைப் போன்ற 1.5லிட்டர் NA பெட்ரோல் என்ஜினுடன் இணைக்கப்பட்ட ஆறு-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக  சிட்டி ஹைப்ரிடின்  126 PS உடன் வலுவான ஹைப்ரிட் பவர்டிரெயினும் SUV யுடன் வழங்கப்பட்டுள்ளது. டீசல் பவர்டிரெயின் வழங்கப்பட வாய்ப்பில்லை.

Honda’s All-new SUV To Rival Maruti Grand Vitara Seen On Indian Roads For 1st Time

அம்சங்களைப் பொருத்தவரை, ஸ்பை ஷாட்டுகளில் ஏற்கனவே சன்ரூஃப்கள் உள்ளன, மேலும் வயர்லெஸ் ஆன்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்பு, செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஆறு ஏர்பேகுகள் மற்றும் 360-டிகிரி கேமரா உடன் கூடிய பெரிய தொடுதிரை உள்ளிட்ட உபகரணங்களின் பட்டியலும் வெளிவந்துள்ளது. 

வரவிருக்கும் ஹோண்டாவின் காம்பாக்ட் SUV ஹுண்டாய் கிரெட்டா , கியா செல்டோஸ் , வோல்க்ஸ்வேகன் தைகுன் , ஸ்கோடா குஷாக் , டோயோட்டா ஹைரைடர்  மற்றும்  MG ஆஸ்டோர் , ஏற்கனவே குறிப்பிட்ட கிரான்ட் விட்டாரா ஆகியவைகளிலிருந்து தனித்துவமானது..

படங்களின் ஆதாரம்

மேலும் படிக்கவும்: வெளிவந்துள்ள மாருதி கிராண்ட் விட்டாராவின்  விலை


 

 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹோண்டா எலிவேட்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience