ஹோண்டா ஜாஸ்: வசீகரிக்கும் 5 முக்கிய அம்சங்கள்.

published on ஜூலை 24, 2015 01:03 pm by அபிஜித் for ஹோண்டா ஜாஸ் 2014-2020

ஹோண்டா ஜாஸ் மாடலானது, வாகன உலக சந்தையில் ஹாட்ச்பேக் பிரிவில் வரும் உயர்ரக கார் வகை ஒரு புதிய அளவுகோலாக அமையும் அளவிற்கு மிகச்சிறந்த வகையில் உருவாக்கப்பட்டு ஜூலை 8 ம் தேதி சந்தையில் வெளியிடப்பட்டது. தற்போதுள்ள வாகன சந்தையில், இந்த பிரிவில் எலைட் i20 கார்,  தன்னை ஒரு நிகரற்ற நிலையில் உள்ளதாக உருவகப்படுத்தி, ஹூண்டாய் நிறுவனத்திற்கு பெருமையும் செல்வத்தையும் அள்ளித்தந்துகொண்டிருக்கிறது. அத்தகைய பெருமையை, ஹோண்டா ஜாஸ்-ஆல் மட்டுமே முறியடிக்கமுடியும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில், ஹோண்டா ஜாஸ் 5 தனக்கே உரிய சிறந்த வசீகரிக்கும் அம்சங்களை கொண்டு அதன் போட்டியாளர்களை நிச்சயமாக விரட்டியடிக்கும் என்பதை மறுக்க முடியாது.

அசாத்திய வசதி !

புத்தம் புதிய ஹோண்டா ஜாஸ், அசாத்தியமாக அனைவரையும் வசியப்படுத்தும் ஒருசில தலையான சிறப்பு அம்சங்களை தனக்கத்தே கொண்டுள்ளது. ஒருசில என்பது “மேஜிக் சீட்” எனும் நூதன வசதியையும் உள்ளடக்கியது. அதாவது, ஹோண்டா ஜாஸ் உரிமையாளர்கள் இருக்கைகளை கவிழ்த்தியும் நிமிர்த்தியும் உட்புற இட வசதியை மாற்றியமைத்து சொகுசாகப் பிரயாணம் செய்ய முடியும். இந்த தன்னிகரற்ற வசதியால்,  உங்களது சைக்கிள், மளிகை சாமான்கள், உங்கள் வீட்டை அலங்கரிக்கும் பூச்செடி தொட்டிகள் மற்றும் வேறு எந்த ஹாட்ச்பேக் மாடல்களிளும் வைக்க இயலாத எந்த ஒரு பொருளையும்  (கிட்டத்தட்ட அனைத்தையும்) சூட்சமமாக உள்ளே வைத்து இனிய இதமான பயணத்தை மேற்கொள்ளமுடியும். மேலும் இந்த சாய்க்கும் வசதியின் மூலம், முன் இருக்கையை பின்னால் சாய்க்கும் போது பின் இருக்கையில் உள்ள பயணிகள் தங்களது கால்களை வசதியாக வைப்பதற்கு (தலைதாங்கி நீக்கப்பட்ட) முன் இருக்கையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மாடலில் முதல்முதலில் அறிமுகமாகும் இவ்வசதியால் ஹோண்டா ஜாஸ் நிகரற்ற நட்சத்திர அந்தஸ்த்தை உறுதியாகப் பெற்றுவிடும் என்று திட்டவட்டமாக நம்பப்படுகிறது.  

பிரமிக்க வைக்கும் உட்புற தோற்றம்!

நீண்ட காலமாக சந்தையில் உலா வந்து கொண்டிருக்கும் உயர்தர பிரிமியம் ஹாட்ச்பேக் பிரிவில் ஆளுமை செய்யும் எலைட் இ20 காரை நாம் ஹோண்டா ஜாஸ் உடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியது இப்போது கட்டாயமாகுகிறது. உட்புற தோற்றத்தில் எலைட்டின் மென்மையான அழகிய எளிமையான தோற்றத்தை ஒப்பிடும் போது ஹோண்டா ஜாஸ் மிரட்டும் அதிரடி அழகைப் பெற்றுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் “H” முத்திரை உயர்ந்த தரத்தையும், முற்போக்கு தொழில்நுட்பத்தையும் தோரணையாகப் பறைசாற்றுகிறது. நேர்த்தியான வளைவுடனான முகப்பைக்கொண்ட 3 வளையங்களைக் கொண்ட கருவிமயமான இணையகம் (இன்ஸ்ட்ரூமெண்டேஷன் கன்சோல்) ஓட்டுனர் திறமையாக காரைக் கையாளுவதர்க்காக அமைக்கப்பட்டுள்ளது. தொடு இயங்கு சாதனத்துடன் அமைந்த சிறிய ஏசி துளைகள் வித்தியாசமான முறையில் நேர்த்தியாக வழங்கப்பட்டுள்ளது.

பாயும் பூனையின் வடிவமைப்பு!

மேலும், கார் வாங்கும் எண்ணமுள்ளவர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் ஹோண்டா நிறுவனம் உட்புற வண்ணத்தில் உற்சாக மூட்ட கூடிய முழு கருப்பு வண்ணத்திலும், மெல்லிய பழுப்புடன் கலந்த கருப்பு வண்ணத்திலும் இரு மாறுபட்ட தெரிவுகளில் வழங்குகிறது. இதனால் எவரும் ஹோண்டா ஜாஸ் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பில்லை.

முன்னதாக, ஜாஸ் வடிவமைப்பாளர்கள் காரின் பக்கவாட்டு வடிவத்தை ஒரு பதுங்கும்  பூனையின்  நிலைவடிவை ஒத்து வடிவமைத்தார்கள். அந்த வடிவமைப்பு ஹோண்டாவின் சமீபத்திய ‘H’ நவீன தத்துவத்தால்  உருமாற்றம் எடுத்து வருகிறது. இம்முறை, உத்வேகத்துடன் பாயும் பூனையின்  நிலைவடிவை ஒத்து வடிவமைத்துள்ளார்கள். முன்புற மேற்கூரையின் உச்சியானது, பாயும் பூனையின் தலை பகுதியையும்;   சாய்வான பின்புறமானது பாயும் தொனியில் உள்ள பூனையின் பின் பாகத்தையும் குறிக்கிறது. (படத்தில் காணலாம்).

மேலும், உலகம் முழுவதும் பிரபலமான ஹோண்டா ஜாஸின் சமீபத்திய தலைமுறைக் கார்களான AKA மற்றும் ஃபிட் இரண்டும், 'H' வடிவமைப்பில் உருவான மாடல்கள்.  இந்த பாயும் பூனையின் நிலைப்பாட்டை கொண்ட அழகிய ஹோண்டா ஜாஸ் வடிவமைப்பானது மிடுக்கான முகப்பு விளக்குகள், வசீகரமான தோள்பட்டை மடிப்புகள் மற்றும் பின்புற எளிய அடக்கமான LED விளக்குகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து இழுக்கும் என்பதை வார்த்தைகளில் சொல்லாமலேயே, அதன் வடிவத்தைப் பார்த்துமே நன்கு அறிந்துகொள்ளலாம்.

27.30கிமீ/லி!!

27.30 என்ற இந்த இலக்கத்தை நினைத்தாலே அற்புதமாக உள்ளது, இல்லையா? ஆனால், இதை விட சிறப்பாக மற்றொரு வாகனம் திறன் கொடுக்கிறது, அது எந்த வாகனமென்றால் – மாருதியின் செலெரியோ. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், செலெரியோவின் இஞ்ஜின் எவ்வளவு கிலோ மீட்டர் கூடுதலாக தருகிறது என்று தெரியுமா? வெறும் 0.32 kmpl மட்டுமே அதிகம். செலெரியோ இரண்டு சிலிண்டர் மோட்டாருடன் ஒப்பிடும் போது ஜாஸ்-இன் சுமார் 700 சிசி திறன் சற்றே குறைவானது. ஹோண்டாவின் அற்புதமான பொறியியல் நுட்பத்திற்காக நாம் உண்மையிலேயே அவர்களின் தோளை தட்டிப் பாராட்டு தெரிவிக்க வேண்டும். 1.5 லிட்டர் ஐ-DTEC மோட்டாருக்கு வித்தியாசமாக 6 வேக திறனை பிரித்து அனுப்புவதால் அனைவரையும் கவரக்கூடிய இந்த அருமையான மைலேஜ் இலக்கத்தை அடைய முடிகிறது. 100 PS செயல் திறனையும் 200 nm முறுக்கு விசையையும் விட்டு கொடுக்காமல் அற்புதமாக செயல்படுகிறது.

புதிய தொழில்நுட்பத்தில் பேடில் ஷிப்டர் !!

ஹோண்டா ஜாஸ் மாடலில் மறக்க முடியாத விஷயம் என்னவென்றால், 1.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட i-VTEC இஞ்ஜின் இப்போது CVT தானியங்கி முறையுடன் ஓட்டுனரின் வசதிக்கு ஏற்ப மாற்றக்கூடிய பாடில் ஷிப்டர் (பட்டன் முறையில் மாற்றக்கூடிய கியர்) பொருத்தப்பட்டுள்ளதால், இலகுவாக வாகனத்தை கையாளவும், செலுத்தவும் முடிகிறது. வழக்கமாக உள்ள பன்முக சக்கரத்திருப்பியில் (ஸ்டியரிங்) இப்போது ஷிஃப்டர்கள், எளிதில் கையாளும்படி டாப் ட்ரிம்மில் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வசதி இந்த வகைகளுக்கு முதன்மையானது மட்டுமல்லாமல்,  ஹோண்டா ஜாஸ்-இன் தனித்துவமான விற்பனை உத்தியாகச் செயல்படும் என்று அறுதியிட்டு கூறமுடியும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹோண்டா ஜாஸ் 2014-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience