ஜப்பானில் விற்பனையாகும் Honda Elevate செல்லப்பிராணி களுக்கு ஏற்ற புதிய உபகரணங்களை பெறுகின்றது
modified on ஏப்ரல் 16, 2024 05:59 pm by rohit for ஹோண்டா எலிவேட்
- 69 Views
- ஒரு கருத்தை எழுதுக
உங்கள் செல்ல பிராணிகளுக்கு வசதியான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் இந்த எடிஷனில் உள்ளேயும் வெளியேயும் அவற்றுக்கான கஸ்டமைசேஷன்களுடன் வருகின்றது.
-
ஹோண்டா இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலிவேட்டை புதிய WR-V ஆக ஜப்பானில் விற்பனை செய்கிறது.
-
பயணத்தின் போது உங்கள் செல்லப்பிராணிக்கு வசதியாக இடமளிக்கும் வகையில் முன் மற்றும் பின் சீட்டுகளுக்கு ஒரு கேரியர் மற்றும் ஒரு சீட்டை பிரத்தியேகமாக வழங்கியுள்ளது.
-
கதவுகளில் ஒரு 'ஹோண்டா டாக்' ஸ்டிக்கர் மற்றும் உங்கள் செல்லப்பிராணியை வசதியாக கொண்டு செல்வதற்கு ஒரு வண்டி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
ஜப்பான்-ஸ்பெக் WR-V (எலிவேட்) இந்தியா-ஸ்பெக் மாடலில் உள்ள அதே 1.5-லிட்டர் பவர்டிரெய்னை கொண்டுள்ளது.
-
பிரத்தியேகமாக CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகிறது மற்றும் மற்ற மாடல்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைக்கப்பட்ட அவுட்புட்டை கொண்டுள்ளது.
-
இந்தியா-ஸ்பெக் மாடலின் விலை ரூ.11.69 லட்சம் முதல் ரூ.16.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது.
ஹோண்டா எலிவேட் சமீபத்தில் அதன் சொந்த நாட்டில் WR-V என அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் நமது நாட்டிலிருந்து அதன் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஹோண்டா ஜப்பான், இப்போது, மனிதர்கள் மற்றும் செல்லப்பிராணிகள் இரண்டையும் மையமாக வைத்து சமீபத்தில் நடைபெற்ற கண்காட்சியில் எஸ்யூவி -யின் புதிய செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற சிறப்பு எடிஷனை காட்சிப்படுத்தியுள்ளது.
செல்லப் பிராணிகளுக்கு ஏற்ற எடிஷனை பற்றிய கூடுதல் விவரங்கள்
ஜப்பானில் உள்ள ஹோண்டாவின் அதிகாரப்பூர்வ துணைப் பிரிவான ஹோண்டா ஆக்சஸ் ஹோண்டா எலிவேட் (ஜப்பானில் WR-V என அறியப்படுகிறது) பிராண்டின் கீழ், செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு உபகரணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உபகரணங்களில் முன் பயணிகள் சீட்களில் இரண்டு சிறிய நாய்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கேரியர் உள்ளது, அதனுடன் ஒரு சாம்பல் நிற செல்லப்பிராணி டோர் கவர் உள்ளது.
பின்புறத்தில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நாய்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு செல்லப்பிராணி சீட் சர்க்கிள் உள்ளது,.அவற்றின் தோல் வார்களை பாதுகாப்பாக இணைக்க ஆங்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு செல்லப்பிராணி சீட்டின் விலை ரூ .10,000 (ஜப்பானிய யென்னிலிருந்து கன்வெர்ட் செய்யப்பட்டது). கூடுதலாக, உங்கள் செல்லப்பிராணியை கொண்டு செல்ல உதவுவதற்காக ஒரு செல்லப்பிராணி வண்டி சேர்க்கப்பட்டுள்ளது. இது ஹோண்டா எஸ்யூவி -யின் பூட்டில் வசதியாக வைக்கும் வகையில் உள்ளது,.இதன் பூட் 458 லிட்டர் கொள்ளளவு கொண்டது.
ஹோண்டா எஸ்யூவி -யின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இதில் ஸ்லேட்டட் கருப்பு கிரில் மற்றும் டோர்களில் 'ஹோண்டா டாக்' ஸ்டிக்கர் மற்றும் ஆப்ஷனலான நாய் பாவ்-தீம் கொண்ட அலுமினிய வீல் கேப்கள் மற்றும் நாய்-தீம் கீ கவர்கள் ஆகியவை அடங்கும். இந்த அழகு சாதனப் பொருட்களுக்கு மொத்தம் ரூ.20,000 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பான்-ஸ்பெக் ஹோண்டா எலிவேட் (WR-V): சுருக்கமான விவரம்
ஜப்பான்-ஸ்பெக் ஹோண்டா எலிவேட் இங்கு விற்கப்பட்ட மாடலின் அதே 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது, இருப்பினும் கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி சற்று குறைக்கப்பட்ட அவுட்புட் உடன் கிடைக்கும்:
|
|
|
|
|
|
|
|
1 |
|
|
|
இது இந்தியா-ஸ்பெக் எஸ்யூவி உடன் கிடைக்கும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வழங்கப்படுவதில்லை.
இது இந்தியா-ஸ்பெக் மாடலைப் போலவே அணைத்து வசதிகளையும் பெறுகின்றது, ஆனால் பெரிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் (அதற்கு பதிலாக 9-இன்ச் யூனிட்டை பெறுகிறது). சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் போன்ற சில குறிப்பிடத்தக்க வசதிகள் இதில் இல்லை. இருப்பினும், இரண்டு மாடல்களின் பாதுகாப்பு கிட்டில் எந்த வேறுபாடுகளும் இல்லை, ஏனெனில் இரண்டும் ஆறு ஏர்பேக்குகள், அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்றவற்றை பெறுகின்றன.
தொடர்புடையது: ஹோண்டா சிட்டி vs ஹோண்டா எலிவேட்: இடவசதி மற்றும் நடைமுறை ஒப்பீடு
விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹோண்டா எலிவேடின் விலை ரூ. 11.69 லட்சம் முதல் ரூ. 16.51 லட்சம் வரை உள்ளது (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). இது மாருதி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.
மேலும் படிக்க: எலிவேட் ஆட்டோமேட்டிக்