Honda Elevate CVT ஆட்டோமெட்டிக் மைலேஜ்: கிளைம் செய்யப்பட்டது மற்றும் உண்மையானது
published on மார்ச் 08, 2024 03:31 pm by shreyash for ஹோண்டா எலிவேட்
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டா எலிவேட் CVT ஆட்டோமேட்டிக் 16.92 கிமீ/லி மைலேஜை வழங்குகிறது.
ஹோண்டா எலிவேட் செப்டம்பர் 2023 -ல் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் நுழைந்தது. 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT உடன் ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது. சமீபத்தில் எங்களிடம் எலிவேட் CVT சோதனைக்காக எங்களிடம் வந்தது. மேலும் அதன் மைலேஜை நகரம் மற்றும் நெடுஞ்சாலை நிலைகளில் சோதனை செய்தோம். அது ஹோண்டாவால் கிளைம் செய்யப்பட்ட மைலேஜ் உடன் பொருந்துகிறதா என்பதைக் கண்டறிய முடிவு செய்தோம்.
மேலும் விவரங்களை பார்ப்பதற்கு முன் ஹோண்டா எலிவேட் CVT -யின் தொழில்நுட்ப விவரங்களைப் பார்ப்போம்:
இன்ஜின் |
1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் |
பவர் |
121 PS |
டார்க் |
145 Nm |
டிரான்ஸ்மிஷன் |
CVT |
கிளைம்டு மைலேஜ் (CVT) |
16.92 கி.மீ/லி |
சோதிக்கப்பட்ட மைலேஜ் (நகரம்) |
12.60 கி.மீ/லி |
சோதிக்கப்பட்ட மைலேஜ் (நெடுஞ்சாலை) |
16.40 கி.மீ |
நகரத்தில் நாங்கள் சோதனை செய்த போது எலிவேட் CVT -யின் மைலேஜ் கிட்டத்தட்ட 4.5 கிமீ லிட்டருக்கு குறைகிறது. இருப்பினும் நெடுஞ்சாலையில் ஓட்டிச் சென்றபோது ஹோண்ட கிளைம் செய்த மைலேஜ் எண்ணிக்கைக்கு அருகில் வந்தது.
மேலும் பார்க்க: இந்த மார்ச் மாதம் Honda கார்களில் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக சேமிக்கலாம்!
வெவ்வேறு நிலைகளில் சோதனை செய்யப்பட்ட போது கிடைத்த மைலேஜ் புள்ளிவிவரங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இங்கே பார்க்கலாம்:
மைலேஜ் |
நகரம்:நெடுஞ்சாலை (50:50) |
நகரம்:நெடுஞ்சாலை (25:75) |
நகரம்:நெடுஞ்சாலை (75:25) |
14.25 கி.மீ |
15.25 கி.மீ |
13.37 கி.மீ |
நகரத்தில் நீங்கள் பெரும்பாலும் ஹோண்டா எலிவேட் -டை CVT மூலம் டிரைவ் செய்தால் 13 கிமீ/லிக்கு மேல் மைலேஜை எதிர்பார்க்கலாம். மறுபுறம் நீங்கள் எலிவேட்டை நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது அது லிட்டருக்கு 15 கி.மீ மைலேஜை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
நெடுஞ்சாலை மற்றும் நகரம் என கலவையான ஓட்டுநர் நிலைகளில் எலிவேட் சுமார் 14 கிமீ/லி மைலேஜை வழங்கலாம்.
இருந்தாலும் கூட நீங்கள் டிரைவிங் செய்யும் பாணி, உள்ள சாலை நிலை மற்றும் காரின் ஒட்டுமொத்த நிலை ஆகியவற்றைப் பொறுத்து காரின் மைலேஜ் வேறுபடலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உங்களிடம் ஹோண்டா எலிவேட் CVT இருந்தால் கமெண்ட்டில் உங்களுக்கு கிடைக்கும் மைலேஜ் விவரத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க: ஹோண்டா எலிவேட் ஆன் ரோடு விலை