இந்த மார்ச் மாதம் Honda கார்களில் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக சேமிக்கலாம்!
published on மார்ச் 07, 2024 06:17 pm by shreyash for honda city
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டா எலிவேட் காரிலும் குறிப்பிட்ட காலத்துக்கு பணத் தள்ளுபடியை பெறலாம்.
-
ஹோண்டா சிட்டியில் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பலன்களை இப்போது பெறலாம்.
-
ஹோண்டா அமேஸை வாங்கும்போது ரூ.94000க்கு மேல் தள்ளுபடியைப் பெறலாம்.
-
ஹோண்டா எலிவேட் காம்பாக்ட் எஸ்யூவி தற்போது ரூ.50000 வரையிலான குறுகிய கால பலனை வழங்குகிறது.
-
ஹோண்டா தற்போது சிட்டி மற்றும் எலிவேட் மாடல்களின் சிறப்பு எடிஷன்களில் அதிகபட்ச தள்ளுபடியை வழங்குகிறது.
-
அனைத்து ஆஃபர்களையும் மார்ச் 2024 இறுதி வரை பெறலாம்.
இந்த மார்ச் மாதத்தில் ஹோண்டா காரை வாங்கலாம் என நீங்கள் நினைத்திருந்தால் உங்களுக்கு சில பலன்கள் கிடைக்கும்!. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் தவிர்த்து ஹோண்டா சிட்டி, ஹோண்டா அமேஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் உள்ளிட்ட அதன் மாடல்கள் முழுவதும் ஹோண்டா பலன்களை கொடுக்கின்றது. இந்தப் பலன்களில் பணத் தள்ளுபடிகள் எக்ஸ்சேஞ்ஜ் ஆஃபர்கள் மற்றும் லாயல்டி போனஸ் ஆகியவை அடங்கும். மாடல் வாரியான சலுகைகளின் விவரங்கள் இதோ.
ஹோண்டா சிட்டி
|
|
|
ரூ. 30000 வரை |
|
|
|
|
|
ரூ. 6000 வரை |
|
|
|
ரூ. 8000 வரை |
|
ரூ. 20000 வரை |
|
ரூ. 36500 வரை |
|
ரூ. 1.212 லட்சம் வரை |
-
ஹோண்டா சிட்டியை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் பணத் தள்ளுபடி அல்லது இலவச அசஸரீஸில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த பலன்கள் ஹோண்டா சிட்டி செடானின் அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும்.
-
தற்போதுள்ள ஹோண்டா வாடிக்கையாளர்கள் ரூ. 4000 லாயல்டி போனஸுடன் ரூ.6000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
ஸ்டாண்டர்ட் கார்ப்பரேட் தள்ளுபடியான ரூ.8000க்கு மேல் ஹோண்டா சிட்டிக்கு கூடுதல் கார்ப்பரேட் தள்ளுபடி கிடைக்கிறது.
-
ஹோண்டா சிட்டியின் எலிகண்ட் எடிஷனில் ரூ.36500 வரை சிறப்பு தள்ளுபடியையும் வழங்குகிறது.
-
VX மற்றும் ZX வேரியன்ட்களை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகளுக்கு ரூ.13651 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் பெறுவார்கள்.
-
ஹோண்டா சிட்டி ரூ.11.71 லட்சம் முதல் ரூ.16.19 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: வேரியன்ட் அப்டேட்டை பெறும் MG Comet EV மற்றும் ZS EV கார்கள்: புதிய வசதிகள் கிடைக்கும் மற்றும் விலையில் மாற்றம் இருக்கும்
ஹோண்டா அமேஸ்
|
|
|
|
|
|
|
|
|
ரூ. 4000 வரை |
|
|
|
|
|
|
|
|
-
ஹோண்டா அமேஸில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் பணத் தள்ளுபடியைத் தேர்வுசெய்யும் அல்லது இலவச அசஸரீஸ்களை பெறலாம். அமேஸின் மிட்-ஸ்பெக் S வேரியன்ட்டிற்கு மட்டுமே பணத் தள்ளுபடி மற்றும் இலவச அசஸரீஸ்களை தேர்வு ஆகியவைப் பொருந்தும்.
-
டாப்-ஸ்பெக் VX வேரியன்ட் மற்றும் எலைட் எடிஷனுக்கு ரொக்கப் பலன் ரூ. 20000 ஆகவும் அதே நேரத்தில் இலவச ஆக்சஸரீஸ் சலுகையின் மதிப்பு ரூ.24346 ஆகவும் குறைகின்றது.
-
டாப்-ஸ்பெக் VX வேரியன்ட் மற்றும் எலைட் எடிஷனுக்கு ரொக்கப் பலன் ரூ. 20000 ஆகவும் அதே நேரத்தில் இலவச ஆக்சஸரீஸ் சலுகையின் மதிப்பு ரூ.24346 ஆகவும் குறைகின்றது.
-
மார்ச் 2024 -ல் அமேஸின் எலைட் எடிஷன் ரூ.30000 சிறப்புத் தள்ளுபடியை வழங்கி கூடுதலான சேமிப்புடன் தனித்து நிற்கிறது.
-
அமேஸின் பேஸ்-ஸ்பெக் E வேரியன்ட் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.10000 ரொக்கத் தள்ளுபடி அல்லது ரூ.12349 மதிப்புள்ள ஆக்சஸரீஸ்களை பெறலாம்.
-
ஹோண்டா அமேஸின் விலை ரூ.7.16 லட்சத்தில் தொடங்கி ரூ.9.92 லட்சம் வரை உள்ளது.
மேலும் பார்க்க: MG Hector மற்றும் Hector Plus ஆகிய கார்களின் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது, விலை இப்போது ரூ. 13.99 லட்சத்தில் தொடங்குகிறது!
ஹோண்டா எலிவேட்
|
|
|
|
-
எலிவேட் காம்பாக்ட் எஸ்யூவி தற்போது ரூ.50000 என்ற குறுகிய கால கொண்டாட்ட தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
-
எஸ்யூவி -உடன் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் போன்ற எதுவும் வழங்கப்படவில்லை.
-
ஹோண்டா எலிவேட்டின் விலை ரூ.11.58 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் வரை உள்ளது.
குறிப்புகள்
-
மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம். மேலும் கூடுதலான தகவல்களுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரை தொடர்பு கொள்ளவும்.
-
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்
மேலும் படிக்க: ஹோண்டா சிட்டியின் ஆன்-ரோடு விலை