உற்பத்திக்கு தயாராகியுள்ள Mahindra BE.05 காரை பற்றி ஒரு சிறு பார்வை
published on ஆகஸ்ட் 22, 2023 04:51 pm by ansh for மஹிந்திரா be 05
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
மஹிந்திரா நிறுவனம் BE.05 காரை 2025 அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
-
ஒட்டுமொத்த வடிவமைப்பும் கான்செப்ட் -கார் போலவே இருக்கிறது.
-
அதன் கேபினும் உற்பத்திக்கு தயாராக உள்ள வெர்ஷனில் குறைந்தபட்ச மாற்றங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
INGLO கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்டு 60kWh பேட்டரி பேக்கை 450km க்கும் அதிகமான பயணதூர வரம்பில் பெறலாம்.
-
இந்த கார் அக்டோபர் 2025 -ன் தொடக்கத்திலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை ரூ.25 லட்சம் முதல் இருக்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
மஹிந்திராவின் வடிவமைப்பு துறையின் தலைவரான பிரதாப் போஸ் மஹிந்திரா BE.05 எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் உற்பத்திக்கு தயாராக இருக்கும் வெர்ஷனின் சில படங்களை சமீபத்தில் வெளியிட்டார். அதில் உள்ள யூனிட் இன்னும் மூடப்பட்டு இருந்தாலும், 2022 -ல் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட்டில் காட்டப்பட்ட மாற்றங்களை பற்றிய சில குறிப்புகளை இது வழங்குகிறது. அதைப் பற்றி இன்னும் விரிவாக பார்ப்போம்.
கான்செப்டிலிருந்து பெரிய வித்தியாசம் இல்லை
மஹிந்திரா செய்திருக்கும் ஒரு விஷயம், கான்செப்டின் ஒட்டுமொத்த வடிவமைப்பையும் அப்படியே வைத்திருப்பது, ஏனெனில் இது BE.05 மீதான அதன் எதிர்கால ஈர்ப்பை அப்படியே வைத்திருக்க உதவுகிறது. பாயிண்டி -யான போனட், கூர்மையான மற்றும் நேர்த்தியான LED DRLகள் மற்றும் மெலிதான பம்பர் ஆகியவற்றுடன் முன்பக்க தோற்றம் இன்னும் அதே போல் தெரிகிறது.
BE.05 -யை எளிதாக கண்டறிவதற்கானஇடம் அதன் தோற்றம் ஆகும். இது இப்போது மிகவும் யதார்த்தமான தோற்றமுடைய ஐந்து-ஸ்போக் அலாய் வீல்களைப் பெறுகிறது மற்றும் A-பில்லர்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள் சரியான ORVM களுக்கு பதிலாக மாற்றப்பட்டுள்ளன. வீல் ஆர்ச்கள் எந்த கிளாடிங்கையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை மற்றும் இங்குள்ள B-பில்லர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும் படிக்க: இதுவரை நாம் பார்த்த ஒவ்வொரு மஹிந்திரா எலக்ட்ரிக் SUVயும் அறிமுகத்திற்காகவே காத்திருக்கிறது
பின்பக்கத்துக்கு வரும்போது, புரொடெக்ஷன்-ஸ்பெக் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. மேலே இருந்து, LED DRLsகளின் ஸ்டைலிங்குகளைப் பின்பற்றும் நேர்த்தியான LED டெயில் விளக்குகள் மற்றும் பெரிய பம்பர் ஆகியவற்றைக் கொண்ட ஸ்பிலிட் ரியர் ஸ்பாய்லர் மற்றும் ப்ரூடிங் ரியர் எண்ட் ஆகியவற்றைக் பார்க்க முடிகிறது.
BE.05 -யின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் அதன் கான்செப்ட் பதிப்பைப் போலவே உள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
உட்புற வடிவமைப்பு
கேபினும் கான்செப்ட் வடிவமைப்பை போலவே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா இரட்டை 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள், லேயர்டு டேஷ்போர்டு வடிவமைப்பு, ஸ்குவாரிஷ் ஸ்டீயரிங் மற்றும் கான்செப்ட்டில் இருந்த ஒட்டுமொத்த காக்பிட் வடிவமைப்பு ஆகியவற்றை கொண்டிருக்கும்.
கேபினின் கலர் ஸ்கீமில் சிறிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம் மற்றும் எதிர்கால காக்பிட் வடிவமைப்பு சிறிது சிறிதாக குறைக்கப்படலாம். இந்த BE 05 -யின் உட்புறம் இன்னும் நமக்கு தெரியவில்லை, ஆனால் கார் வேரியன்ட்டை பொறுத்து மாற்றங்கள் இருக்கலாம்.
ரேஞ்ச் & பவர்டிரெய்ன்
BE.05 என்பது மஹிந்திராவின் INGLO கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட பிராண்டின் முதல் பிரத்யேக EV காராகும். மின்சார SUV ஆனது 60kWh பேட்டரி பேக்குடன் வரக்கூடும், மேலும் சுமார் 450km தூரம் வரை செல்ல முடியும். இந்த குறிப்பிட்ட எலக்ட்ரிக் எஸ்யூவி -யில், டூ வீல் டிரைவ் சிஸ்டத்தை மட்டுமே எதிர்பார்க்கலாம் ஆனால் ஆல் வீல் டிரைவ் ஆதரவும் உள்ளது. புதிய மஹிந்திரா பேட்டரி தொழில்நுட்பமானது 175 கிலோவாட் வரை வேகமாக சார்ஜ் செய்வதை சப்போர்ட் செய்கிறது மற்றும் 5 முதல் 80 சதவீதம் சார்ஜிங்கிற்கு வெறும் 30 நிமிடங்கள் நேரம் மட்டுமே எடுத்துக் கொள்கிறது.
அறிமுகம், விலை & போட்டியாளர்கள்
மஹிந்திரா BE.05 2025 ஆண்டின் அக்டோபர் மாதத்திற்குள் அதன் சந்தை அறிமுகத்தை ரூ.25லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா அடிப்படையிலான EV மற்றும் டாடா கர்வ் EV -க்கு போட்டியாக இருக்கும்.
0 out of 0 found this helpful