ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகியவற்றின் மதிப்பை, மாருதி பெலினோ பின்னுக்கு தள்ளிவிட்டதா?
published on அக்டோபர் 28, 2015 03:55 pm by அபிஜித் for மாருதி பாலினோ 2015-2022
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
மாருதி நிறுவனம் கடந்த மாதத்தில் மொத்தம் 18,278 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்ததில் இருந்து, அந்த காரை நாம் எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பது தெரிகிறது. இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறையில் ஒரு மாற்றம் தேவை என்ற நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இது, நம் நாட்டின் தகுந்த முதல் பிரிமியம் ஹேட்ச்பேக்காக விளங்கியது. அதன் பணியை அது சிறப்பாக செய்வது வருவதால் தான், இன்று கூட விற்பனை எண்ணிக்கையில் அதன் எதிரொலிப்பை காண முடிகிறது. இதை தொடர்ந்து ஹூண்டாய் i20 வெளியாகி, இந்த தொழில்துறைக்கும், பிரிமியம் ஹேட்ச்பேக்குகளுக்கும், ஒரு புதிய இலக்கை நிர்ணயித்தது. இன்று ஹூண்டாய் எலைட் i20, ஹோண்டா ஜாஸ் மற்றும் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட மாருதி பெலினோ என்ற மூன்று பிரிமியம் ஹேட்ச்பேக்குகளும் ஒரு அட்டகாசமான விலை நிர்ணயமான ரூ.4.99 லட்சத்தில் நமக்கு கிடைக்கிறது.
ஆனால் தற்போது மாருதி நிறுவனம், தனது போட்டியாளர்களான எலைட் i20 மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகியவற்றை வீழ்த்தும் வகையிலான ஒரு இலக்கை நிர்ணயிக்க, பெலினோவின் விலையை ஸ்விஃப்ட் ஹேட்ச் மற்றும் டிசையர் காம்பேக்ட் சேடன் ஆகியவற்றை நெருங்கி அமையுமாறு நிர்ணயித்துள்ளது. இது ஒரு நல்ல நகர்வா அல்லது தவறான நகர்வா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் கூற வேண்டும். இந்நிலையில், இந்த விலை நிர்ணய வேறுபாடு மூலம் ஸ்விஃப்ட் வாங்க விரும்புவோரின் பார்வை, பெலினோவின் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதா? என்று காண்போம்.
இங்கே, ஸ்விஃப்ட் / டிசையர் Vxi (இடைப்பட்ட வகை) ஆகியவை முறையே ரூ.5.4 லட்சம் / ரூ.5.9 லட்சம் விலை கொண்டுள்ள நிலையில், இவற்றுடன் ரூ.5.7 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள பெலினோவின் டெல்டா-வை (பேஸ் வகையை விட ஒரு படி உயர்ந்தது) எதிராக நிறுத்துகிறோம் (இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லியை சார்ந்தது). மாருதி குடும்பத்தை சேர்ந்த மற்ற இரு வகைகளை காட்டிலும், ரூ.30 ஆயிரம் அதிகமாக அளித்து பெலினோவை வாங்குவதன் மூலம் ஒருவருக்கு கூடுதலாக என்னென்ன கிடைக்கிறது என்பதை காண்போம்.
பாதுகாப்பு
ரூ.30 ஆயிரம் அதிகம் அளிப்பதன் மூலம், இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் மற்றும் இந்த வகைகளிலேயே தரமான ABS, EBD ஆகியவற்றை கொண்ட பாதுகாப்பான காரான பெலினோவை வாங்க முடியும். ஆனால் ஸ்விஃப்ட் Vxi வகையில் இது கிடைப்பதில்லை. மேலும், பெலினோவின் சேசிஸ் கடினமாக இருப்பதால், விபத்துகளின் போது நிலைநிற்க கூடுதல் திறன் கொண்டதாக உள்ளது என்று கூறப்படுகிறது.
புதிய பிளாட்ஃபாம்
சுசுகியின் நவீன எடைக்குறைவான (லைட்வெய்ட்) பிளாட்ஃபாமை அடிப்படையாக கொண்ட பெலினோ, அளவில் சிறிதான ஸ்விஃப்ட்டை காட்டிலும் 100 கிலோ எடைக் குறைந்ததாக உள்ளது. இதனால் பெலினோவின் மைலேஜில் முன்னேற்றம் ஏற்பட்டு, அதிகமாக இல்லாவிட்டாலும், லிட்டருக்கு ஒரு சில கிலோமீட்டர்கள் கூடுதலாக அளிக்கலாம்.
மேலும் படிக்க: ஒப்பீடு: மாருதி சுசுகி பெலினோ vs எலைட் i20 vs போலோ vs புண்டோ இவோ
உட்புறம்
இந்த பிரிவிலேயே முன்னணி வகிக்கும் வெளிப்புற பரிணாமங்களை கொண்டுள்ளதால், உட்புறத்திலும் அதிக இடவசதியை காண முடிகிறது. கிராம்ப்டு ரேர் சீட்களுக்கு பெயர் பெற்ற ஸ்விஃப்ட் இரட்டைகளை காட்டிலும், இது எவ்வளவோ மேலாக உள்ளது. மேலும் புத்தம் புதிய உட்புற செட்அப்-பை கொண்டிருப்பதால், உள்ளே இருப்பதற்கு ஒரு பிரிமியம் அனுபவத்தை அளிக்கிறது. டெல்டா வகையில் கூட பன்முக செயலாற்றல் (மல்டி-ஃபங்ஷன்) கொண்ட ஸ்டீயரிங் வீல், ஒரு மியூசிக் சிஸ்டம் உடன் ப்ளூடூத் இணைப்பு மற்றும் பின்புற சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆனால் இவை எதுவும் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய இரண்டிலும் காண முடிவதில்லை.
பெலினோ டெல்டாவின் கூடுதல் அம்சங்கள்
- பூட்ஸ் ஸ்பேஸ் கொள்ளளவு 339 லிட்டர்
- பிரி-டென்ஷனர்கள் மற்றும் லோடு லிமிட்டர்கள் கொண்ட முன்பக்க சீட் பெல்ட்கள்
- பின்புற பார்க்கிங் சென்ஸர்கள்
- பின்புற கழுவி (வாஷர்) மற்றும் வைப்பர் உடன் பின்புற விண்டோ டிஃபோகர்
மேற்கூறிய எல்லா அம்சங்களும், ஸ்விஃப்ட் மற்றும் டிசையரில் காண முடிவதில்லை.
எனவே இந்த விலையில் கார் வாங்குபவர்களுக்கு பெலினோ, ஒரு சிறந்த தேர்வாக அமையும். மேலும் நீங்கள் ஸ்விஃப்ட் அல்லது டிசையரை வாங்க நினைத்தால், பெலினோவை கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள்: