சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவில் வெளியானது நான்காம் தலைமுறை Nissan X-Trail கார், ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது

நிசான் எக்ஸ்-டிரையல் க்காக ஜூலை 18, 2024 04:20 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

2024 நிஸான் X-டிரெயில் ஃபிரன்ட்-வீல் டிரைவ் செட்டப்பை மட்டுமே கொண்டிருக்கிறது. மேலும் சர்வதேச மாடலில் உள்ள ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் கொடுக்கப்படவில்லை.

  • கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிஸான் X-டிரெயில் அதன் நான்காம் தலைமுறை அவதாரத்தில் இந்தியாவிற்கு மீண்டும் வந்துள்ளது.

  • இந்த எஸ்யூவி ஆனது பிளவு-ஹெட்லைட் டிஸைனை கொண்டுள்ளது. 20-இன்ச் அலாய் வீல்கள் உடன் வருகிறது.

  • உள்ளே ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல் பிளாக் தீம் உள்ளது.

  • X-டிரெயில் காரில் 8 இன்ச் டச் ஸ்கிரீன், 12.3 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 7 ஏர்பேக்குகள் ஆகியவை உள்ளன.

  • 1.5 லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (163 PS/300 Nm) இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

  • விலை சுமார் ரூ.40 லட்சம் (X-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தாண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் நிஸான் X-டிரெயில் காலடி எடுத்து வைத்துள்ளது. இப்போது அதன் நான்காவது தலைமுறை அவதாரத்தில் உள்ளது. இந்த முழு அளவிலான எஸ்யூவி அதன் இந்திய-ஸ்பெக் அவதாரில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது பில்ட்-அப் யூனிட் (CBU) ஆக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள நிஸானின் ஃபிளாக்ஷிப் காராக மாறும். புதிய இந்தியா-ஸ்பெக் X-டிரெயில் வழங்கும் அனைத்து விஷயங்களும் இங்கே:

வெளிப்புறம்

வெளிப்புறத்தில், 2024 X-டிரெயில் காரில் LED DRL -ளுடன் ஸ்பிளிட் டிசைன் ஹெட்லைட் டிசைனுடன் குளோபல் காரை போலவே உள்ளது. இந்த எஸ்யூவி ஆனது U-வடிவ கிரில் மற்றும் குரோம் சரவுண்டிங்ஸ் மற்றும் ஸ்போர்ட்டியரான குரோம் கார்னிஷ் உடன் உள்ளது. பக்கவாட்டில் எஸ்யூவியானது 20-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் தடிமனான பாடி கிளாடிங்கை கொண்டுள்ளது. பின்புறத்தில் புதிய X-டிரெயில் நவீன கால கார்களில் காணப்படுவதைப் போல் கனெக்டட ரேப்பரவுண்ட் LED டெயில்லைட்களும் உள்ளன. இந்த எஸ்யூவி -யின் அளவுகள் பின்வருமாறு:

அளவுகள்

நீளம்

4680 மி.மீ

அகலம்

1840 மி.மீ

உயரம்

1725 மி.மீ

வீல்பேஸ்

2705 ​​மி.மீ

கிரவுண்ட் கிளியரன்ஸ்

210 மி.மீ

இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்

நான்காவது தலைமுறை நிஸான் X-டிரெயில் இன்ட்டீரியரில் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல் பிளாக் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. இது 12.3-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகிய வசதிகளைப் பெறுகிறது. டூயல்-ஜோன் ஏசி, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் ஸ்லைடிங் மற்றும் ரிக்ளைன்டு 2 -வது வரிசை இருக்கைகள் ஆகியவை மற்ற வசதிகளாகும். நிஸான் இந்த காரில் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், ஆட்டோ ஹோல்ட் கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை வழங்கியுள்ளது.

பவர்டிரெய்ன்

புதிய இந்தியா-ஸ்பெக் நிஸான் X-டிரெயில் 12V மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

விவரங்கள்

2024 நிஸான் X-டிரெயில்

இன்ஜின்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

163 PS

டார்க்

300 Nm

டிரைவ்டிரெய்ன்

FWD*

*FWD = ஃபிரன்ட்-வீல் டிரைவ்

இந்த இன்ஜின் CVT ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது லிமிடெட் ஸ்லிப் டிஃபரன்ஷியலையும் கொண்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை

புதிய நிஸான் X-டிரெயில் ஆகஸ்ட் 2024 -ல் இந்தியாவில் விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ. 40 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் (எக்ஸ்-ஷோரூம்). டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், ஸ்கோடா கோடியாக், மற்றும் ஜீப் மெரிடியன் ஆகிய கார்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்

Share via

Write your Comment on Nissan எக்ஸ்-டிரையல்

A
arun pahwa
Jul 19, 2024, 8:25:35 AM

Apparently an overpriced vehicle with lesser features and power. 8 infotainment screen, fabric upholstery, 160 hp & PRICE 40 LACS ?? It's gonna crazy.... Doesn't go well with any rationale buyer.

Y
yadav sachin
Jul 19, 2024, 7:52:36 AM

Pricing will decide it's future .It's not big like fortune or endeavor so they have to keep a competitive price otherwise its gonna be another flopmshow for nisaan in india

A
anuj
Jul 18, 2024, 10:53:47 PM

Fwd,163 PS of power,are you kidding me and that also north of 40 lakh.?????... domestic players have better power and dimensions.why will anyone buy it?id rather buy a 25 lakh scorpio n 4*4 .

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
பேஸ்லிப்ட்
Rs.1.03 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.11.11 - 20.42 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை