• English
  • Login / Register

இந்தியாவில் வெளியானது நான்காம் தலைமுறை Nissan X-Trail கார், ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது

published on ஜூலை 18, 2024 04:20 pm by dipan for நிசான் எக்ஸ்-டிரையல்

  • 54 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2024 நிஸான் X-டிரெயில் ஃபிரன்ட்-வீல் டிரைவ் செட்டப்பை மட்டுமே கொண்டிருக்கிறது. மேலும் சர்வதேச மாடலில் உள்ள ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் கொடுக்கப்படவில்லை.

  • கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிஸான் X-டிரெயில் அதன் நான்காம் தலைமுறை அவதாரத்தில் இந்தியாவிற்கு மீண்டும் வந்துள்ளது.

  • இந்த எஸ்யூவி ஆனது பிளவு-ஹெட்லைட் டிஸைனை கொண்டுள்ளது. 20-இன்ச் அலாய் வீல்கள் உடன் வருகிறது.

  • உள்ளே ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல் பிளாக் தீம் உள்ளது.

  • X-டிரெயில் காரில் 8 இன்ச் டச் ஸ்கிரீன், 12.3 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 7 ஏர்பேக்குகள் ஆகியவை உள்ளன.

  • 1.5 லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (163 PS/300 Nm) இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

  • விலை சுமார் ரூ.40 லட்சம் (X-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தாண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் நிஸான் X-டிரெயில் காலடி எடுத்து வைத்துள்ளது. இப்போது அதன் நான்காவது தலைமுறை அவதாரத்தில் உள்ளது. இந்த முழு அளவிலான எஸ்யூவி அதன் இந்திய-ஸ்பெக் அவதாரில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது பில்ட்-அப் யூனிட் (CBU) ஆக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள நிஸானின் ஃபிளாக்ஷிப் காராக மாறும். புதிய இந்தியா-ஸ்பெக் X-டிரெயில் வழங்கும் அனைத்து விஷயங்களும் இங்கே:

வெளிப்புறம்

வெளிப்புறத்தில், 2024 X-டிரெயில் காரில் LED DRL -ளுடன் ஸ்பிளிட் டிசைன் ஹெட்லைட் டிசைனுடன் குளோபல் காரை போலவே உள்ளது. இந்த எஸ்யூவி ஆனது U-வடிவ கிரில் மற்றும் குரோம் சரவுண்டிங்ஸ் மற்றும் ஸ்போர்ட்டியரான  குரோம் கார்னிஷ் உடன் உள்ளது. பக்கவாட்டில் எஸ்யூவியானது 20-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் தடிமனான பாடி கிளாடிங்கை கொண்டுள்ளது. பின்புறத்தில் புதிய X-டிரெயில் நவீன கால கார்களில் காணப்படுவதைப் போல் கனெக்டட ரேப்பரவுண்ட் LED டெயில்லைட்களும் உள்ளன. இந்த எஸ்யூவி -யின் அளவுகள் பின்வருமாறு:

அளவுகள் 

 

நீளம்

4680 மி.மீ

அகலம்

1840 மி.மீ

உயரம்

1725 மி.மீ

வீல்பேஸ்

2705 ​​மி.மீ

கிரவுண்ட் கிளியரன்ஸ்

210 மி.மீ

இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்

நான்காவது தலைமுறை நிஸான் X-டிரெயில் இன்ட்டீரியரில் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல் பிளாக் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. இது 12.3-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகிய வசதிகளைப் பெறுகிறது. டூயல்-ஜோன் ஏசி, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் ஸ்லைடிங் மற்றும் ரிக்ளைன்டு 2 -வது வரிசை இருக்கைகள் ஆகியவை மற்ற வசதிகளாகும். நிஸான் இந்த காரில் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், ஆட்டோ ஹோல்ட் கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை வழங்கியுள்ளது.

பவர்டிரெய்ன்

புதிய இந்தியா-ஸ்பெக் நிஸான் X-டிரெயில் 12V மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

விவரங்கள்

2024 நிஸான் X-டிரெயில்

இன்ஜின்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

163 PS

டார்க்

300 Nm

டிரைவ்டிரெய்ன்

FWD*

*FWD = ஃபிரன்ட்-வீல் டிரைவ்

இந்த இன்ஜின் CVT ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது லிமிடெட் ஸ்லிப் டிஃபரன்ஷியலையும் கொண்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை

புதிய நிஸான் X-டிரெயில் ஆகஸ்ட் 2024 -ல் இந்தியாவில் விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ. 40 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் (எக்ஸ்-ஷோரூம்). டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், ஸ்கோடா கோடியாக், மற்றும் ஜீப் மெரிடியன் ஆகிய கார்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Nissan எக்ஸ்-டிரையல்

4 கருத்துகள்
1
A
arun pahwa
Jul 19, 2024, 8:25:35 AM

Apparently an overpriced vehicle with lesser features and power. 8 infotainment screen, fabric upholstery, 160 hp & PRICE 40 LACS ?? It's gonna crazy.... Doesn't go well with any rationale buyer.

Read More...
    பதில்
    Write a Reply
    1
    Y
    yadav sachin
    Jul 19, 2024, 7:52:36 AM

    Pricing will decide it's future .It's not big like fortune or endeavor so they have to keep a competitive price otherwise its gonna be another flopmshow for nisaan in india

    Read More...
      பதில்
      Write a Reply
      1
      A
      anuj
      Jul 18, 2024, 10:53:47 PM

      Fwd,163 PS of power,are you kidding me and that also north of 40 lakh.?????... domestic players have better power and dimensions.why will anyone buy it?id rather buy a 25 lakh scorpio n 4*4 .

      Read More...
        பதில்
        Write a Reply
        Read Full News

        ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

        புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

        கார் செய்திகள்

        • டிரெண்டிங்கில் செய்திகள்
        • சமீபத்தில் செய்திகள்

        trending எஸ்யூவி கார்கள்

        • லேட்டஸ்ட்
        • உபகமிங்
        • பிரபலமானவை
        ×
        We need your சிட்டி to customize your experience