Force Gurkha 5-டோர் அறிமுகத்துக்கு தயாராக உள்ளது ஸ்பை ஷாட்களின் மூலமாக தெரிய வருகிறது
published on பிப்ரவரி 22, 2024 05:16 pm by rohit for ஃபோர்ஸ் குர்கா 5 டோர்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த ஆஃப்ரோடர் அதன் டீசல் பவர்டிரெய்னை 3-டோர் கூர்க்காவுடன் பகிர்ந்து கொள்ளும். 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே இது கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 5 டோர்கள் கொண்ட கூர்க்கா -வின் சோதனை தொடங்கியது
-
3-டோர் மாடலுடன் ஒப்பிடும் போது நீண்ட வீல்பேஸ் மற்றும் கூடுதலாக இரண்டு டோர்கள் உள்ளன.
-
வட்ட வடிவமாக புரொஜெக்டர் ஹெட்லைட்கள், ஸ்நோர்கெல் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
-
கேபின் சிறப்பம்சங்களில் டார் கிரே தீம் மற்றும் பல சீட்களுக்கான செட்டப் கொடுக்கப்படும் .
-
7-இன்ச் டச் ஸ்கிரீன், மேனுவல் ஏசி மற்றும் பவர் ஜன்னல்கள் ஆகியவை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
4-வீல் டிரைவ்டிரெயின் உடன் ஷிப்ட்-ஆன்-ஃப்ளை ரோட்டரி கன்ட்ரோலர் கிடைக்கும்.
-
2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 16 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.
வரவிருக்கும் மஹிந்திரா எஸ்யூவியை போலவே சோதனை செய்யப்பட்டு வரும் காராக ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் இருக்கிறது. 2022 -ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இது சோதனை செய்யப்படும் போது தொடர்ச்சியாக படம் பிடிக்கப்பட்டு வருகின்றது. இப்போது மீண்டும் ஒரு முறை சோதனை காரானது முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது, இந்த முறை உற்பத்திக்குத் தயாராக இருப்பது தெரிய வருகிறது.
ஸ்பை ஷாட்கள் எதைக் காட்டுகின்றன?
ஸ்பை ஷாட்களின் சமீபத்திய தொகுப்பில், ஆஃப்ரோடரில் தற்காலிக ஃபோர்ஸ் சிட்டி லைன் ஹெட்லைட்கள் மற்றும் 5-ஸ்போக் 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் இருப்பதை காணலாம். LED DRL -களுடன் கூடிய வட்ட ப்ரொஜெக்டர் ஹெட்லைட்களுடன் கூடிய புரடெக்ஷன்-ஸ்பெக் கூர்க்கா 5-டோர் காரை ஃபோர்ஸ் நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை செய்யப்பட்டு வரும் மாடலில் 3-டோர் மாடலில் டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் ஸ்நோர்கெல் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நீளமான வீல்பேஸ் மற்றும் கூடுதல் டோர்களின் காரணமாக 3-டோர் மாடலில் இருந்து இந்த கார் வேறுபட்டு தெரிவது பக்கவாட்டு தோற்றத்தில்தான்.
கேபினை பற்றிய புதிய விவரங்கள் இல்லை
கூர்கா 3-டோர் காரின் கேபின் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது
இந்த எஸ்யூவி -யின் உட்புறத்தை பற்றிய விவரங்களை நம்மால் பெற முடியவில்லை, ஆனால் முந்தைய ஸ்பை ஷாட்கள் கிரே கேபின் தீம் கொடுக்கப்பட்டிருப்பதை காட்டுகின்றன. 5-டோர் கூர்க்கா 3 சீட் வரிசை அமைப்பில் வழங்கப்படும், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் பெஞ்ச் மற்றும் கேப்டன் இருக்கைகள் இருக்கும்.
4-வீல்-டிரைவில் (4WD) செட்டப்பிற்கான மேனுவல் லீவர் இருக்கும். 3-டோர் கூர்க்காவை போல இல்லாமல், 5-டோர் மாடல் சென்டர் கன்சோலில் எலக்ட்ரானிக் ஷிப்ட்-ஆன்-தி-ஃப்ளை கன்ட்ரோலருடன் வரும் என்று பழைய ஸ்பை ஷாட்கள் மூலமாக தெரிய வருகிறது.
மேலும் படிக்க: இந்தியாவில் மீண்டும் வரும் மிட்சுபிஷி நிறுவனம்… ஆனால் நீங்கள் நினைக்கும் விதத்தில் அல்ல
போர்டில் உள்ள அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம்
ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் காரில் கூடுதலாக வசதிகள் கொடுக்கப்படலாம் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் மஹிந்திரா Thar 3-door காரை விட கூடுதலாக இந்த 10 வசதிகளை Thar 5-door கொண்டிருக்கும். ஃபோர்ஸ் 5-டோர் கூர்காவில் 7-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், முன் மற்றும் பின் (இரண்டாம்-வரிசை) பவர் ஜன்னல்கள் மற்றும் பல வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி ஆகியவற்றை கொடுக்கலாம். பாதுகாப்புக்காக டூயல் ஏர்பேக்குகள், ரிவர்சிங் கேமரா மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்படலாம்.
இன்ஜின் விவரங்கள்
5-டோர் கூர்க்கா 3-டோர் மாடலில் காணப்படும் அதே 2.6-லிட்டர் டீசல் இன்ஜினை (90 PS/250 Nm) பெறலாம், இருப்பினும் அதிக ட்யூன் செய்யப்பட்டதாக இருக்கலாம். இது அதே 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பெறலாம், மேலும் 4-வீல் டிரைவ் டிரெய்னுடன் குறைந்த அளவிலான டிரான்ஸ்மிஷன் கேஸையும் பெறலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படலாம் என்று நாங்கள் நினைக்கிறோம், இதன் விலை ரூ. 16 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும். இது வரவிருக்கும் 5-டோர் மஹிந்திரா தார் உடன் நேரடியாக போட்டியிடும். மாருதி ஜிம்னி காருக்கு பெரிய மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: கூர்க்கா டீசல்
0 out of 0 found this helpful