• English
  • Login / Register

அறிமுகமானது Force Gurkha 5-டோர், மே மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது

published on ஏப்ரல் 29, 2024 02:39 pm by rohit for ஃபோர்ஸ் குர்கா 5 டோர்

  • 36 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கூர்க்கா 5-டோர் காரில் கூடுதலாக இரண்டு டோர்கள் மட்டுமல்ல கூடுதலாக புதிய வசதிகளும் உள்ளன. அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜினுடன் இந்த கார் வருகின்றது.

Force Gurkha 5-door revealed

  • இப்போது ஃபோர்ஸ் டீலர்ஷிப்களில் 25,000 ரூபாய்க்கு 5 டோர் கூர்க்காவுக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன.

  • வெளிப்புறத்தில் வட்ட வடிவ LED ஹெட்லைட்கள், ஸ்நோர்கெல் மற்றும் கூரை ரேக் ஆகியவை உள்ளன; முன்பை விட மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் காரை போலவே தெரிகிறது

  • கேபினில் புதிய டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி மற்றும் மூன்றாவது வரிசையில் கேப்டன் இருக்கைகளுடன் 7 சீட் செட்டப்பை கொண்டுள்ளது.

  • 9 இன்ச் டச் ஸ்கிரீன், டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் டூயல் முன் ஏர்பேக்குகள் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

  • 2.6-லிட்டர் டீசல் யூனிட் (140 PS/320 Nm) 5-ஸ்பீடு MT உடன் இணைக்கப்பட்டுள்ளது; 4x4 ஸ்டாண்டர்டாக கிடைக்கும்.

  • மே முதல் வாரத்தில் வெளியீடு; விலை ரூ. 16 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.

ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இது முக்கியமாக 3-டோர் ஃபோர்ஸ் கூர்காவின் நீண்ட வீல்பேஸ் வேரியன்ட் மற்றும் அதிக பயணிகளுக்கான கூடுதல் சீட்களை கொண்டுள்ளது. கூர்க்கா 5-டோர்க்கான முன்பதிவு ஃபோர்ஸ் இந்திய டீலர்ஷிப்களில் ரூ.25,000க்கு தொடங்கியுள்ளது.

வெளிப்புற வடிவமைப்பு

Force Gurkha 5-door front

கூர்க்கா 5-டோர் இரண்டு கூடுதல் டோர்கள் மற்றும் நீண்ட வீல்பேஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது. ஆனால் 3-டோர் காரின் பாக்ஸி வடிவமைப்பை அப்படியே வைத்துள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் G-கிளாஸ் காரில் இருந்து இதற்கான இன்ஸ்பிரேஷன் பெறப்பட்டுள்ளது என்பதை இது மறைக்கவில்லை. இதன் முன்புறம் LED DRL -களுடன் வட்ட வடிவ LED ஹெட்லைட்கள் மற்றும் 'கூர்கா' மோனிகர் கொண்ட செவ்வக வடிவ கிரில் உள்ளது. கீழே, டார்க் பிளாக் பம்பர் மையத்தில் ஒரு சிறிய ஏர் டேமை இருப்பதை காணலாம். சுற்றிலும் ஃபாக் லைட்ஸ் ஆகியவை உள்ளன.

Force Gurkha 5-door side

கூர்க்கா 5-டோர் காரில் பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது இதன் அதிக நீளம், ஸ்கொயர்-ஆஃப் வீல் ஆர்ச்கள் மற்றும் புதிய டோர்கள் ஆகியவற்றை நீங்கள் உண்மையிலேயே கவனிக்கலாம். ஃபோர்ஸ் அதற்கு ஒரு ஸ்நோர்கெல் (ஃபேக்டரியில் இருந்து), ரூஃப் ரேக் (ஆப்ஷனல்) மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களையும் வழங்கியுள்ளது. எஸ்யூவி பின்புற ஃபெண்டர்களில் ‘4x4x4’ பேட்ஜையும் பெறுகிறது.

Force Gurkha 5-door rear

கூர்க்கா 5-டோர் பின்புறம் டெயில்கேட் பொருத்தப்பட்ட ஸ்பேர் சக்கரம், ரூஃப் ரேக்கை அணுகுவதற்கான ஏணி மற்றும் LED டெயில் லைட்டுகளுடன் வருகிறது. எஸ்யூவி -யின் பின்புறத்தில் 'கூர்கா' மற்றும் 'ஃபோர்ஸ்' மோனிகர்களை நீங்கள் காணலாம். அதே நேரத்தில் அதன் வைப்பர் ஸ்பேர்  வீலின் பின்னால் மறைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இன்ட்டீரியர்

Force Gurkha 5-door cabin

பழைய 3-டோர் மாடலை விட கூர்க்கா 5-டோர் காரின் டாஷ்போர்டு அமைப்பில் ஃபோர்ஸ் அதிகமாக எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. கேபினில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கைகளின் கூடுதல் வரிசை மட்டுமே மற்றும் அப்ஹோல்ஸ்டரி அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 5-டோர் கூர்க்கா இரண்டாவது வரிசையில் பெஞ்ச் இருக்கைகளையும் மூன்றாவது வரிசையில் கேப்டன் இருக்கைகளையும் பெறுகிறது. போர்ஸ் பின்னர் ஒரு புதிய இருக்கை அமைப்பில் நீளமான கூர்க்காவை வழங்க வாய்ப்புள்ளது.

Force Gurkha 5-door 9-inch touchscreen
Force Gurkha 5-door digital driver's display

கூர்க்கா 5-டோர் காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 9 இன்ச் டச் ஸ்கிரீன், கூரையில் பொருத்தப்பட்ட பின்புற வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி, நான்கு பவர் ஜன்னல்கள் மற்றும் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக டூயல் முன் ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன.

மேலும் பார்க்க: பார்க்க: MG Comet EV -யின் பின்புறத்தில் 5 பைகளை எடுத்துச் செல்லலாம்

இன்ஜின் விவரங்கள் ?

ஃபோர்ஸ் இந்த எஸ்யூவியின் பவர்டிரெய்ன்களை பெருமளவு மாற்றியமைத்துள்ளது, அதன் விவரங்கள் இங்கே:

Force Gurkha 5-door diesel engine

விவரங்கள்

2.6 லிட்டர் டீசல் இன்ஜின்

பவர்

140 HP (+50 HP)

டார்க்

320 Nm (+70 Nm)

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT

கூர்க்கா 5-டோர் 4x4 டிரைவ் டிரெய்னையும் ஸ்டாண்டர்டாக பெறுகிறது. அதே சமயம் இது லோ ரேஞ்ச் டிரான்ஸ்மிஷன் கேஸை கொண்டுள்ளது. இது முன் மற்றும் பின்புற டிஃபரென்ஷியலை மேனுவலாக லாக் செய்யும்.

இது 700 மிமீ வாட்டர்-வேடிங் திறன், 2H, 4H மற்றும் 4L இடையே மாறுவதற்கான ஷிப்ட்-ஆன்-ஃப்ளை ஃபங்ஷன் மற்றும் 233 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் கார் 2024 மே மாத முதல் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். மேலும் இதன் விலை ரூ. 16 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இது வரவிருக்கும் மஹிந்திரா தார் 5-டோர் காருக்கு முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட மாற்றாக இருக்கும். மேலும் மாருதி சுஸூகி ஜிம்னி -க்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: ஃபோர்ஸ் கூர்க்கா டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Force குர்கா 5 டோர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience