• English
  • Login / Register

ஃபியட் தனது அபாரமான அபர்த் 595 காரை ரூபாய். 29.85 லட்சத்திற்கு வெளியிட்டுள்ளது

modified on ஆகஸ்ட் 05, 2015 01:36 pm by manish for ஃபியட் அபார்த் 595

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

நமது பொறுமை, இறுதியாக நல்ல பலனைக் கொடுத்துள்ளது, ஏனென்றால், பியட்டின் 595 அபர்த் கம்படிஜோன், ரூபாய் 29.85 லட்ச விலையுடன் சந்தைக்கு அமர்க்களமாக வந்துவிட்டது. செயல்திறன் மிகுந்த அபர்த் 500 ஐ, முதல் முதலாக 2014 இல், டெல்லி வாகன கண்காட்சியில் ஃபியட் இந்தியா வெளியிட்டது. ஒரு வருட இடைவெளிக்குப் பின், இப்போது 2015 ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்திய வாகன சந்தையில் விற்பனைக்கு வந்ததுள்ளது.

அபர்த் 595 கம்படிஜோன் 1.4 லிட்டர் T-JET டர்போ பெட்ரோல் இயந்திரத்தின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இயந்திரம், 158 bhp மூலம் 5500 rpm மற்றும் 201 Nm முறுக்கு விசையுடன் 2750 rpm இல் செயல்படுகிறது. இந்த செயல்திறன், இயல்பான முறையில் இயங்கும் போது கிடைக்கிறது, ஆனால் இதன் முறுக்கு விசையை 230 Nm வரை ‘பந்தைய’ முறையில் இயங்கும் போது உயர்த்த முடிகிறது. மேலும், இந்த இயந்திரம் தானியங்கி ஆளியக்கும் செலுத்து திறன் கொண்ட பல்லிணைப்பு பெட்டி , கையினாலும் உபயோகிக்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

அபர்த் 595 கம்படிஜோனில், அபாரமான அபர்த் டிகால்களும், இரட்டை புகை போக்கிகளும், பந்தய கார்களைப் போல இருக்கைகளும், விதானத்தில் திறந்து மூடக்கூடிய சன் ரூஃபும், தட்டையான அடிபாகத்தைக் கொண்ட இயக்கும் சக்கரமும் (ஸ்டியரிங் வீல்) மற்றும் பல சிறப்பு அம்சங்களும், இந்த கார் கம்பீரமாக காட்சியளிக்க உதவுகின்றன.

அபர்த் 595 கம்படிஜோன் கம்பீரமாகவும் பேராற்றல் வாய்ந்ததாகவும் இருந்தாலும், பாதுகாப்பு அம்ஸங்களுக்கும் எந்த குறைவும் இல்லை. பாதுகாப்பை மேம்படுத்த, இதன் வடிவமைப்பாளர்கள், பல விதமான உயர்தர பாதுகாப்பு வசதிகளைப் பொருத்தி உள்ளனர். அவை, ஏழு பாதுகாப்பு காற்றுப் பைகள், மின்னணு மூலம் இயங்கும் லிமிடெட் ஸ்லிப் டிஃபரன்ஷியல் வசதி, வழுக்கா நிறுத்தமைப்பு (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வசதி), மின்னணு நிறுத்துவிசை பங்கீடு (எலெக்டிரானிக் ப்ரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன்) வசதி, முறுக்கு விசையை மாற்றும் அமைப்பு (TTC) வசதி, இவற்றை போன்ற பல வசதிகள் இந்த காரில் 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Fiat அபார்த் 595

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • மாருதி எக்ஸ்எல் 5
    மாருதி எக்ஸ்எல் 5
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: செப, 2025
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
×
We need your சிட்டி to customize your experience