இத்தாலியின் பியட் நிறுவனம் கலை நயத்துடன் வடிவமைத்துள்ள தனது அபர்த்மாடல் கார்களை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது - மினி கூபர் எஸ் கார்களுக்கு நேரடி சவால்!
ஃபியட் அபார்த் 595 க்காக ஜூலை 13, 2015 05:33 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
பியட் நிறுவனம் புதிய உத்திகளுடனும் உத்வேகத்துடனும் இந்திய கார் சந்தையில் மறு பிரவேசம் செய்து தனது செயல் பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக தனது மிகவும் பிரசித்தி பெற்ற மாடலான அபர்த் வகை கார்களை இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி அறிமுகபடுத்த உள்ளது.முதல் மாடலாக பியட் 500 அபர்த் 595 காம்பிடிசியன் கார்களை அறிமுகப்படுத்துகிறது. அது மட்டுமின்றி பியட் நிறுவனம் தனது ரஞ்சன்கோன் தொழிற்சாலையை நவீனப்படுத்தி விஸ்தரிக்க 280 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. மேலும் இந்த தொழிற்சாலை இந்திய சந்தையில் விற்பனை செய்வற்காக மேம்படுத்தப்பட்ட புதிய வடிவிலான பயன்பாட்டு வாகனங்களை 2017ம் ஆண்டு முதல் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த 595 காம்பிடிசியன் கார்கள் முந்தைய பியட் கார்களின் அடிப்படை தொழில் நுட்பதை பின்பற்றி தயாரிக்கப்பட்டு இருந்தாலும் இதன் தோற்றம் முற்றிலும் வடிவமைக்க பட்டு மேம்படுதப்படுள்ளது.மேலும் பியட் நிறுவனத்தின் சின்னம் இந்த காம்பிடிசியன் மாடல் கார்களில் எங்கும் பொறிக்கப்படவில்லை என்பது வியப்பான உண்மை.அதற்கு பதிலாக அபர்த் கார்களில் வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வந்த அபர்த் தேள் (அபர்த் ஸ்கார்பியன்) சின்னமே போரிக்கப்டுல்லதை காண முடிகிறது. 595காம்பிடிசியன் மாடல் கார்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் சற்று பருமன் அதிகம் கொண்ட பிரேளி வகை ரப்பர் கொண்டு இதனுடைய சக்கரங்கள் அசத்தலாக வடிவமைக்கப்பட்டு பொறுத்த பட்டுள்ளதை காண முடிகிறது.இன்ஜினை பொறுத்தவரை முந்தைய லினியா மாடல் கார்களில் பயன்படுத்தப்பட்ட அதே 1.4 லிட்டர் டி ஜெட் எஞ்சின்கள் தான் என்றாலும் வேகத்திறன் ,இன்டர்கூலர் மற்றும் ட்யுனிங் போன்ற விஷயங்கள் மேலும் நெர்தியாகப்பட்டுஇந்த கம்பிடிசியன் கார்களை மேலும் சிறப்பானதாக ஆக்குகிறது.
எஞ்சினே 160 பி எஸ் ,5500 ஆர் பி எம் என்ற அளவிலும் 3000 ஆர் பி எம் வேகத்தில் 230 என் எம் என்ற அளவுக்கு முறுக்கு விசையுடன் செயல்பட வல்லது. இவற்றுடன் 5 கியர்ஸ் வசதி கொண்ட பெடல் ஷிப்டேர்ஸ் (கிளெட்ச் இல்லாமல் எளிதில் மாற்றக்கூடிய கியர் சிஸ்டம்) பொருத்தப்பட்டுள்ளது.இதைத்தவிர வழக்கமான கிளெட்ச் மற்றும் கியருடன் கூடிய மாடல்களும் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.