பியட் இந்தியா நிறுவனம் தனது புதிய லினியா எலிகன்ட் கார்களை 9.99 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது.
published on ஜூலை 31, 2015 04:14 pm by akshit for ஃபியட் லீனியா
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
பியட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது ஒரே செடான் வகைக் காரான லினியா கார்களின் சிறப்பு பதிப்பு (ஸ்பெஷல் எடிஷன் ) ஒன்றை "எலிகண்ட்" என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது. சராசரி டாப் மாடல் செடான் வகை கார்களை விட சற்று கூடுதலான விலையில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த லிமிடெட் எடிஷன் லினியா எலிகண்ட் கார்கள் டீலர்களிடம் இருந்து பெறப்படும் ஆர்டரின் பேரிலேயே தயாரித்து வழங்கப்பட உள்ளது.
வெளிப்புற தோற்றத்தைப் பொறுத்தவரை லினியா எலிகண்ட் கார்கள் கண்கவர் வெள்ளை நிறத்தால் மெருகூட்டப்பட்டு காரின் வெளிப்புற மேல் சுவர் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. பந்தயக்கார்களை போன்று மாற்றி அமைக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள், கருப்பு நிறத்திலான ரேடியேடர் க்ரில் பின்புற ஸ்பாயிலர்கள். பக்கவாட்டு ஸ்கர்ட்கள் புன்டோ இவோ மாடலை ஞாபகப்படுத்தும் 16 அங்குல அல்லாய் வீல்கள், ஓஆர்விஎம் மில் குரோம் பூச்சு மற்றும் எலிகண்ட் என்று பெயர் பொறித்த ஸ்டிக்கர் என்று ஏராளமான சிறு சிறு மாற்றங்களை காண முடிகிறது. காரின் உட்புறத்தை பொறுத்தவரை புதிய நேர்த்தியான சீட் கவர்கள், 6. 5 அங்குலம் கொண்ட பெரிய இன்போடைன்மென்ட் அமைப்பு, எலிகண்ட் பெயர் பொறித்த அழகான தரை விரிப்புகள் (கார்பெட் மேட்) மற்றும் கதவு ஸில்கள்(டோர் சில்) என்று உட்புறமும் அமர்க்களமாக மாற்றப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய லினியா எலிகண்ட் கார்களின் அறிமுக விழாவில் உரை ஆற்றிய எப்சிஎ இந்தியாவின் வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான திரு. கெவின் பிளைன் பின் வருமாறு கூறினார். “ நேர்த்தியான தோற்றத்தையும், வித்யாசமான எதிர்பார்ப்புகளையும் கொண்ட வாடிக்கையாளர்களை மனதில் கொண்டே இந்த லினியா எலிகண்ட் கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. லினியா பிரியர்களை இந்த புது மாடல் எலிகண்ட் கார்கள் பரவசத்தில் ஆழ்த்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த லினியா எலிகண்ட் கார்கள் நேர்த்தியான தோற்றம் மற்றும் அற்புதமான தொழில் நுட்பம் ஆகிய இவ்இரண்டின் சரியான கலவையாகும். எப்சிஎ இந்தியாவில் காலத்திற்கு ஏற்ப வசதி, சொகுசுதன்மை மற்றும் தொழிற்நுட்ப அடிப்படையில் சரியான மாற்றங்களை சரியான நேரத்தில் எங்கள் வாகனங்களில் பிரதிபலிக்க செய்வதற்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருக்கிறோம.” என்று கூறினார்.
லினியா எலிகண்ட் கார்கள் டீஸல் என்ஜின் மட்டுமே பொருத்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. ஹோண்டா சிட்டி( டீசல்), ஹயுண்டாய் வெர்னா (டீசல்) மற்றும் மாருதி சுசுகி சியஸ் (டீசல்) ஆகிய கார்களுடன் இந்த புதிய லினியா எலிகண்ட் கார்கள் போட்டியிடும்.