சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஃபியட் அபார்த் புண்டோ இவோ vs போட்டியாளர்கள்: ஹாட் ஹேட்ச்களுடனான ஒரு ஒப்பீடு

modified on அக்டோபர் 20, 2015 04:02 pm by அபிஜித் for ஃபியட் புண்டோ அபார்த்

ஜெய்ப்பூர்:

ஹாட் ஹேட்ச்கள் அல்லது குறைந்த பட்ஜெட் செயல்திறன் கொண்ட கார்கள் (இந்தியாவிற்கு மட்டுமாவது) ஆகியவை பல காலங்களுக்கு முன்பே அறிமுகமாகி உள்ளது. ஆனால் அந்த காலத்தில் அவற்றை சொந்தமாக்கி கொள்ளும் தைரியம், மிக குறைந்த மக்கள் குழுவினருக்கு மட்டுமே இருந்தது. ஏனெனில் அதற்கான அதிக துவக்க விலை மற்றும் மிகவும் குறைவான எரிபொருள் சிக்கனம் ஆகியவை காரணமாக அமைந்தன. மேலும், அவை குறைந்த அளவில் இருந்ததாலும், அதை குறித்து எடுத்து கூறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், ஆர்வலர்கள் மட்டுமே அவற்றை குறித்து அறிந்து வைத்திருந்தனர். இதில் முக்கியமாக, ஃபியட் பாலியோ 1.6 மற்றும் ஃபோர்டு ஃபீஸ்டா 1.6 S ஆகியவற்றை குறிப்பிடலாம். அந்த காலத்தில் இருந்த போட்டியாளர்களுக்கு இடையே, முற்றிலும் முரண்பாடாக, இவை இரண்டும் சிறப்பான bhp வெளியீடை அளித்து வந்தன.

இதையும் படியுங்கள்: ஃபியட் அபார்த் புண்டோ: அம்சங்கள் மற்றும் போட்டோ கேலரி

ஆனால் இன்று, இன்டர்நெட் உலகம் மூலம் முற்றிலும் மாறுப்பட்ட சூழ்நிலை நிலவுகிறது. இந்தியன் ஆட்டோமோட்டிவ் தளத்தில் ஒவ்வொரு காரின் துவக்கம் முதல் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எல்லோரும் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர். அபார்த் புண்டோ ரூ.9.95 லட்சம் (145 bhp அளிப்பதால் நஷ்டமில்லை) என்ற அட்டகாசமான விலையில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஆன்லைன் கருத்துக்களத்தில் பெரிய அளவிலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது மட்டுமல்ல, இதன் சிறப்பான வெளிப்புற அமைப்பின் மூலம், தற்போதைய சிறப்பான ஹேட்ச்சான போலோ GT TSI-க்கு இது மாற்றாக அமையும் என்ற தகுதியை பெற்றிருப்பது அதன் நேர்த்திக்கு வெட்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. எனவே, மற்ற கார்களிடம் இருந்து தனது சிறப்பான அம்சங்களை கொண்டு வேறுபட்டுள்ள இந்த இத்தாலி நாட்டு தயாரிப்பு எப்படி கிரீடத்தை பெறுகிறது என்பதை காண்போம்.

அறிமுக செய்தி: ஃபியட் அபார்த் புண்டோ இவோ மற்றும் அவென்ச்சுரா ஆகிய இரண்டும் ரூ.9.95 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது

அடிப்படை விஷயங்கள்

இது ஒரு 1.4-லிட்டர் T-ஜெட் மோட்டாரைக் கொண்டு 145 bhp ஆற்றலையும், 210 Nm முடுக்குவிசையையும் தயாரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, சந்தையில் சிறப்பான விற்பனையை பெற்ற மற்ற ஹேட்பேக்குகளை, இந்த கார் மட்டுப்படுத்தி உள்ளது. மேலும், அதிக ஆக்ஸிலரேஷன் மற்றும் வேகம் ஆகியவற்றை தாங்கும் வகையிலான விறைப்பான சஸ்பென்ஸன்களை கொண்டுள்ளது. வாகனத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் வகையில், எல்லா வீல்களிலும் தரமான டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

புள்ளிவிபரங்கள்

செயல்திறனை குறித்து பார்த்தால், 8.8 விநாடிகளில் 0 விலிருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டி விடுகிறது. அதிகபட்ச வேகமாக மணிக்கு 190 கி.மீ. (அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை) வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் போட்டியாளர்களை பொறுத்த வரை, மேற்கூறிய இலக்கை அடைய, 10 விநாடிகளையொட்டியோ அல்லது அதற்கு அதிகமாகவோ எடுத்துக் கொள்கின்றன.

வெளிப்புற அமைப்பு

அபார்த் புண்டோவின் வெளிப்புற அமைப்பை பொறுத்த வரை, ஸ்போர்டியான சிறப்பு டிகல்களை கொண்டு, 16 இன்ச் டைமண்ட் கட் ஸ்கார்பியனின் கைகளை பெற்ற அலாய் வீல்கள், பேனட்டில் இருந்து பூட் லிட் வரை தொடர்ந்து செல்லும் ரெஸ் ஸ்ட்ரீப், மேற்கூரை போன்ற இடங்களில் வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்ட ஸ்கார்பியன் அடையாளம் ஆகியவற்றை காண முடிகிறது. போலோ GT மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஆகியவை குறித்து பார்த்தால், அவற்றின் குறைந்த ஆற்றல் கொண்ட பதிப்புகள் எதிலும் இது போன்ற சிறப்புத் தன்மைகளை காண முடியவில்லை.

உட்புற அமைப்புகள்

உட்புற அமைப்பில் ஒளிரும் தையல், ஒரு அனைத்து கருப்பு நிறத் திட்டம் மற்றும் ஸ்டீயரிங் வீல்லில் உள்ள அடையாளம் ஆகியவற்றை தவிர, பெரும்பாலும் தரமான புண்டோ இவோவை ஒத்து காணப்படுகிறது.

நாங்கள் ரோடு டெஸ்ட்டில் ஒரு சுற்றுப்பயணம் சென்று, இக்காரில் உள்ள எல்லா சிறிய விபரங்களையும் திரட்டி அளிக்க உள்ளோம். எனவே எல்லா தகவல்களை பெற தொடர்ந்து எங்கள் இணையதளத்தை பாருங்கள்.

போட்டியை அறிய: VW போலோ GT TSI | ஃபோர்டு ஃபிகோ 1.5 TiVCT

மேலும் படியுங்கள்: ஃபியட் புண்டோ அபார்த் விமர்சனம்

வெளியிட்டவர்

அபிஜித்

  • 13 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஃபியட் புண்டோ அபார்த்

Read Full News

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்
Rs.6.99 - 9.24 லட்சம்*
Rs.5.65 - 8.90 லட்சம்*
Rs.7.04 - 11.21 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை