• English
  • Login / Register

கேமராவின் கண்களுக்கு சிக்கிய ஃபேஸ்லிப்டட் மஹிந்திரா XUV300 வின் இரு புதிய விவரங்கள்

published on ஜூன் 15, 2023 05:08 pm by shreyash for மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO

  • 78 Views
  • ஒரு கருத்தை எழுதுக

XUV700 -விலிருந்து பெறப்பட்ட ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் அலாய் வீல்களின் புதிய செட்டை சமீபத்திய உளவுக் காட்சி வெளியிட்டது.

Facelifted Mahindra XUV300 Caught On Camera Again Revealing Two New Details

  • ஸ்ப்ளிட் கிரில் செட்அப் மற்றும் இணைக்கப்பட்ட டெயில்லைட்டுகள் உள்ளிட்ட புதுப்பித்தல்கள் எக்ஸ்டீரியரில் எதிர்பார்க்கப்படுகிறது.

  • வலுவான புதுப்பக்கப்பட கேபினையும் அது பெறும்.

  • புதிய அம்சங்களில் டிஜிட்டில் டிரைவர்ஸ் டிஸ்பிளே மற்றும் வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் அடங்கும்.

  • தற்போதைய மாடலில் இருப்பதைப் போல அதே இன்ஜின் ஆப்ஷனுடன் தொடரும் இது AMT ஆப்ஷனுக்கு பதிலாக டார்க் கன்வெர்ட்டரைப் பெறும்.

  • அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இது விற்பனைக்கு வரும் மற்றும் அதன் விலை ரூ.9 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) முதல் இருக்கும்.

ஃபேஸ்லிப்டட் மஹிந்திரா XUV300 மேம்படுத்தலின் கீழ் உள்ளது மற்றும் எஸ்யூவிவின் மற்றொரு சோதனையும் படமாக்கப்பட்டது. அது வலுவான உருவமறைப்புடன் இருந்தாலும், வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் சில விவரங்களை இன்னமும் நம்மால் காண முடிகிறது.  இந்த விவரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நாம் காண்போம் வாருங்கள்

உறையின் கீழே என்ன காண முடிகிறது?

Facelifted Mahindra XUV300 Caught On Camera Again Revealing Two New Details

முதல் பார்வையில், சோதனைக் காட்சியில் நமக்குத்தெரிந்த குறிப்பிடத்தக்க மாற்றம் என்பது அலாய் வீல்களின் புதிய வடிவமைப்பு.  மேலும் சோதனைக் காட்சியின் உட்புறம் நீங்கள் பார்த்தால், புதிய ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன்யையும் காண முடியும். அது அதன் பெரிய உடன்பிறப்பு XUV700 இடமிருந்து பெறப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட XUV300 முன்புறம் மற்றும் பின்புற மூலைகளில் புதுமையா ஸ்ப்ளிட் கிர்ல் செட்அப், போனட் மற்றும் பம்பர் உள்ளிட்ட போதுமான மாற்றங்களையும் பெறும்.  பின்புறத்தில் பூட் மூடி இப்போது முன்பிருந்ததைவிட கூடுதல் வலுவானதாகத் தெரிகிறது, மேலும் லைசென்ஸ் பிளேட் நல்ல தோற்றம் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.   XUV700 இலிருந்து பெறப்பட்ட C-வடிவ LED DRL மற்றும் LED ஹெட்லைட்டுகள் அப்ஃப்ரன்ட் மற்றும் பின்புறத்தில் இணைக்கபட்ட LED டெயில் செட் அப் ஆகியவற்றையும் நாம் எதிர்பார்க்கலாம்.

மேலும் காணவும்:  மஹிந்திரா BE.05வின் முதல் உளவுக்காட்சிகள் காணப்படுகின்றன.

எதிர்பார்க்கப்படும் வசதிகள்

Mahindra XUV300 Cabin

ஃபேஸ்லிப்டட் XUV300 மஹிந்திராவின் சமீபத்திய ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் பெரிய ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன் செட் அப், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே, 360-டிகிரி கேமரா, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் காற்றோட்டமான முன்புற இருக்கைகள் ஆகியவற்றைப் பெறும்.  ஏற்கனவே இருக்கும் ஒற்றை-பேன் சன்ரூப் மற்றும் சீர்வேக்க் கட்டுப்பாடு ஆகியவற்றையும் தொடரும்.

புதிய ஃபேஸ்லிப்டட் சப்காம்பாக்ட் எஸ்யூவிஇன் பாதுகாப்பு கிட் ஏற்கனவே இருந்த மாடலில் இருந்து பெறப்பட்டது அதில் அதிகபட்சம் ஆறு ஏர்பேகுகள், EBD உடன்  ABS, -அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ரியர்வியு கேமரா ஆகியவை அடங்கும்.

அதனை இயக்குவது எது?

Mahindra XUV300 Engine

2024 XUV300 தற்போதைய மாடலின் அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரும், அது 1.2-லிட்டர் பெட்ரோல் டர்போ இன்ஜின்  (110PS/200Nm) மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின்  (117PS/300Nm). இரு இன்ஜின்களும் 6-வேக மேனுவல் அல்லது 6 வேக AMT உடன் பொருத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா 1.2லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் இன்ஜினை (130PS/250Nm) வழங்குகிறது, அது 6-வேக மேனுவலில் மட்டுமே கிடைக்கும்.  மஹிந்திரா ஃபேஸ்லிப்டட் எஸ்யூவிஇல் தற்போது கிடைக்கும் AMT கியர் பாக்ஸ்-க்கு பதிலாக டார்க் கன்வெர்ட்டர் யூனிட்டை வழங்கும்

அறிமுகம், எதிர்பார்க்கபடும் விலை & போட்டியாளர்கள்

2024 இன் தொடக்கத்தில் ஃபேஸ்லிப்டட் மஹிந்திரா XUV300 வெளியிடப்படும், அதன் தொடக்க விலை ரூ.9 லட்சம் (எக்ஸ் ஷோ ரூம்) ஆக இருக்கலாம். அது டாடா நெக்ஸான் , ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா  மற்றும் கியா சோனெட்ஆகியவற்றுக்குப் போட்டியாகத் தொடரும்.
படங்களின் ஆதாரம்
மேலும் படிக்கவும்: மஹிந்திரா XUV300 AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra எக்ஸ்யூவி 3XO

1 கருத்தை
1
M
mohan
Jan 17, 2024, 9:17:28 PM

When it will launch

Read More...
    பதில்
    Write a Reply
    Read Full News

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience