• English
  • Login / Register

இந்தியா -வில் தயாரிக்கப்பட்ட Nissan Magnite -ன் ஏற்றுமதி தொடங்கியது

published on பிப்ரவரி 04, 2025 05:53 pm by dipan for நிசான் மக்னிதே

  • 24 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மேக்னைட்டின் அனைத்து வேரியன்ட்களின் விலை சமீபத்தில் ரூ. 22,000 வரை உயர்த்தப்பட்டிருந்தது.

நிஸான் நிறுவனம் இந்தியாவில் இருந்து மேக்னைட் சப்-4m எஸ்யூவி-யின் லெப்ட்-ஹேண்ட்-டிரைவ் (LHD) வெர்ஷனை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் தொடங்கி ஜனவரி 2025 வரை 2,900 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சந்தைகளுக்கு இந்த ஆண்டு 7,100 யூனிட்களுக்கு மேல் ஏற்றுமதி செய்ய நிஸான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வலது பக்க டிரைவ் (RHD) ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட்டின் ஏற்றுமதி நவம்பர் 2024 -ல் தொடங்கியது. இப்போது இடது பக்க டிரைவிங் சந்தைகளுக்கான ஏற்றுமதி நடந்து வருகிறது.

லெப்ட்-ஹேண்ட்-டிரைவ் (LHD) மாடலில் வலது பக்க டிரைவ் சந்தைகளுக்கு ஏற்றவாறு ஸ்டீயரிங் வீலை இடதுபுறமாக மாற்றுவதே முதன்மையான மாற்றமாகும். இது தவிர வெளிப்புற மற்றும் உட்புற டிசைன், வசதிகள், பாதுகாப்புத் தொகுப்பு மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் இந்தியா-ஸ்பெக் மாடலை போலவே உள்ளன.

இதைத் தவிர நிஸான் சமீபத்தில் இந்தியாவில் மேக்னைட்டின் விலை விவரங்களை உயர்த்தியது. அதன் விரிவான வேரியன்ட் வாரியான நிர்ணயிக்கப்பட்ட விலை விவரங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

நிஸான் மேக்னைடின் புதிய விலை விவரங்கள்

அறிமுக விலை நிச்சயிக்கப்பட்ட நிலையில், நிஸானின் மேக்னைட்டின் விலை இப்போது ரூ.6.12 லட்சத்திலிருந்து ரூ.11.72 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது. புதிய விலை விவரப்பட்டியல் இதோ:

 

 

வேரியன்ட்

 

 

பழைய விலை

 

 

புதிய விலை

 

 

வித்தியாசம்

 

 

5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

 

 

விசியா

 

 

ரூ. 5.99 லட்சம்

 

 

ரூ. 6.12 லட்சம்

 

 

ரூ. 13,000

 

 

விசியா பிளஸ்

 

 

ரூ. 6.49 லட்சம்

 

 

ரூ. 6.62 லட்சம்

 

 

ரூ. 13,000

 

 

அசென்டா

 

 

ரூ. 7.14 லட்சம்

 

 

ரூ. 7.27 லட்சம்

 

 

ரூ. 13,000

 

 

என்-கனெக்டா

 

 

ரூ. 7.86 லட்சம்

 

 

ரூ. 7.94 லட்சம்

Rs  

 

ரூ. 8,000

 

 

டெக்னா

 

 

ரூ. 8.75 லட்சம்

 

 

ரூ. 8.89 லட்சம்

 

 

ரூ. 14,000

 

 

டெக்னா பிளஸ்

 

 

ரூ. 9.10 லட்சம்

 

 

ரூ. 9.24 லட்சம்

 

 

ரூ. 14,000

 

5-ஸ்பீடு AMT (ஆட்டோமேடாட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) உடன் கூடிய 1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

 

 

விசியா

 

 

ரூ. 6.60 லட்சம்

 

 

ரூ. 6.73 லட்சம்

 

 

ரூ. 13,000

Acenta

 

 

ரூ. 7.64 லட்சம்

 

 

ரூ. 7.82 லட்சம்

 

 

ரூ. 18,000

 

 

என்-கனெக்டா

 

 

ரூ. 8.36 லட்சம்

 

 

ரூ. 8.49 லட்சம்

 

 

ரூ. 13,000

 

 

டெக்னா

 

 

ரூ. 9.25 லட்சம்

 

 

ரூ. 9.44 லட்சம்

 

 

ரூ. 19,000

 

 

டெக்னா பிளஸ்

 

 

ரூ. 9.60 லட்சம்

 

 

ரூ. 9.79 லட்சம்

 

 

ரூ. 19,000

 

6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

 

என்-கனெக்டா

 

 

ரூ. 9.19 லட்சம்


 

 

 

ரூ. 9.34 லட்சம்

 

 

ரூ. 15,000

 

 

டெக்னா

 

 

ரூ. 9.99 லட்சம்

 

 

ரூ. 10.14 லட்சம்

 

 

ரூ. 15,000

 

 

டெக்னா பிளஸ்

 

 

ரூ. 10.35 லட்சம்

 

 

ரூ. 10.50 லட்சம்

 

 

ரூ. 15,000

 

CVT (கன்டின்யுயஸ்லி வேரியபில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்) உடன் கூடிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

 

 

அசென்டா

 

 

ரூ. 9.79 லட்சம்

 

 

ரூ. 9.99 லட்சம்

 

 

ரூ. 20,000

 

 

என்-கனெக்டா

 

 

ரூ. 10.34 லட்சம்

 

 

ரூ. 10.49 லட்சம்

 

 

ரூ. 15,000

 

 

டெக்னா

 

 

ரூ. 11.14 லட்சம்

 

 

ரூ. 11.36 லட்சம்

 

 

ரூ. 22,000

 

 

டெக்னா பிளஸ்

 

 

ரூ. 11.50 லட்சம்

 

 

ரூ. 11.72 லட்சம்

 

 

ரூ. 22,000

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்-க்கானவை, பான்-இந்தியா

குறிப்பாக, அக்டோபர் 2024-இல் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மேக்னைட்டுக்கான முதல் விலை உயர்வு இதுவாகும். இப்போது ​​நாம் நிஸான் மேக்னைட் வழங்கும் அனைத்து மாடல்களை விரிவாக ஆராய்வோம்:

மேலும் பார்க்க: ஸ்கோடா கைலாக் வேரியன்ட்கள் முழுவதும் விளக்கப்பட்டுள்ளன: எந்த வேரியன்ட்டை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்?

நிஸான் மேக்னைட் பற்றிய ஒரு கண்ணோட்டம்

நிஸான் மேக்னைட் முழுவதும் LED லைட்டிங் அமைப்பையும், இருபுறமும் C-வடிவ குரோம் பார்களை கொண்ட பெரிய கிளாஸி பிளாக் கிரில் மற்றும் முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்களை கொண்டுள்ளது. இது 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் சில்வர் ரூஃப் ரெயில்களுடன் வருகிறது.

கேபினில், சீட்களில் பிளாக் மற்றும் ஆரஞ்சு நிற லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் டூயல்-டோன் தீம் உடன் வருகிறது.

நிஸான் மேக்னைட் 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது, மேலும் இது 9 இன்ச் பெரிய யூனிட்களுடன் ஒரு சில பெரிய மாடல்களில் கிடைக்கிறது. இதில் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் லைட்ஸ், கூல்ட் க்ளோவ் பாக்ஸ் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜர் ஆகியவை அடங்கும். இருப்பினும் அதன் பெரும்பாலான போட்டியாளர்களைப் போலல்லாமல் இதில் சன்ரூஃப் கிடைக்காது.

பாதுகாப்பை பொறுத்தவரை இதில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக கிடைக்கிறது), 360-டிகிரி கேமரா, ஆட்டோ-டிம்மிங் இன்சைட் ரியர்வியூ மிரர் (IRVM), ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும்.

நிஸான் மேக்னைடின் பவர்டிரெயின் ஆப்ஷன்கள்

நிஸான் மேக்னைட் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் இப்போது வருகிறது: 1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின். இதன் விரிவான விவரங்களை பற்றிய கூடுதல் விவரங்கள்:

 

 

இன்ஜின்

 

 

1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

 

 

1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

 

 

பவர்

 

 

72 PS

 

 

100 PS

 

 

டார்க்

 

 

96 Nm

 

 

160 Nm வரை

 

 

டிரான்ஸ்மிஷன்

 

 

5-ஸ்பீட் MT / 5-ஸ்பீட் AMT

 

 

5-ஸ்பீட் MT / 7ஸ்டெப் - CVT

நிஸான் மேக்னைட்டின் போட்டியாளர்கள்

நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா XUV 3XO உள்ளிட்ட பிற சப்-காம்பாக்ட் எஸ்யூவி-களுடன் போட்டியிடுகிறது. இது டொயோட்டா டைசர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் போன்ற சப்-4m கிராஸ்ஓவர்களுடன் அதன் போட்டியை தொடர்கிறது.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Nissan மக்னிதே

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience