• English
    • Login / Register

    எக்ஸ்க்ளூசிவ்: ஜூலை 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ள BYD Atto 3 காரின் இரண்டு புதிய லோயர்-எண்ட் வேரியன்ட் விவரங்கள் தெரிய வந்துள்ளன

    பிஒய்டி அட்டோ 3 க்காக ஜூலை 10, 2024 05:56 pm அன்று samarth ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 23 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    புதிய பேஸ் வேரியன்ட் சிறிய 50 kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் அது மட்டுமின்றி சில வசதிகள் இதில் கிடைக்காது.

    BYD Atto 3 Lower-end Variants Details Revealed

    • BYD அட்டோ 3 புதிய என்ட்ரி லெவல் வேரியன்ட்களை பெறவுள்ளது: டைனமிக் மற்றும் பிரீமியம், டாப்-ஸ்பெக் வேரியன்ட் சுப்பீரியர்.

    • டைனமிக் வேரியன்ட், பவர்டு டெயில்கேட் மற்றும் அடாப்டிவ் LED ஹெட்லைட்கள் போன்ற வசதிகள் இந்த காரில் கிடைக்காது. 

    • இது குறைவான ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும். ஒரே நிறத்திலான ஆம்பியன்ட் லைட்ஸ்களுடன் வருகிறது.

    • பேஸ் வேரியன்ட் ஒரு 50 kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் மற்றும் 468 கிமீ கிளைம்டு -ARAI ரேஞ்சை கொண்டிருக்கும்.

    • மற்ற இரண்டு வேரியன்ட்களும் 60 kWh பேட்டரி பேக்கை பெறும். இது 521 கி.மீ தூரம் செல்லும்.

    • புதிய வேரியன்ட்களின் விலை விவரங்கள் ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும். 

    BYD நிறுவனம் இந்தியாவில் புதிதாக BYD அட்டோ 3 காரின் மிகவும் விலை குறைவான வேரியன்ட்களை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதன் விவரங்கள் ஜூலை 10 ஆம் தேதி வெளியிடப்படும். இப்போது அதற்காக முன்னதாக திருத்தப்பட்ட அட்டோ 3 காரின் விவரங்களை நாங்கள் எக்ஸ்க்ளூஸிவ் ஆக பெற்றுள்ளோம். முன்பு ஒரே வேரியன்டில் மட்டுமே கிடைத்த அட்டோ 3 இப்போது டைனமிக், பிரீமியம் மற்றும் சுப்பீரியர் ஆகிய மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படும். ஒவ்வொரு புதிய வேரியன்ட்டின் விரிவான விவரங்கள் மற்றும் வசதிகளை பற்றி பார்ப்போம்:

    பவர்டிரெய்ன் 

    அட்டோ 3 இன் பேஸ்-ஸ்பெக் டைனமிக் வேரியன்ட் இப்போது சிறிய 50 kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கும். அதே நேரத்தில் மேல் வேரியன்ட்டின் அதே பவர் மற்றும் டார்க்கை வழங்கும். இ-மோட்டரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த புதிய பேஸ் வேரியன்ட் 468 கிமீ (ARAI) ரேஞ்சை வழங்குகிறது. மிட்-ஸ்பெக் வேரியன்ட் 521 கி.மீ என கிளைம்டு ரேஞ்சை வழங்கும் டாப் டிரிம் போன்ற அதே பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. 

    எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் வரவிருக்கும் புதிய வேரியன்ட்களை பற்றிய விரிவான விவரங்கள் இங்கே:

    விவரங்கள்

    டைனமிக் (புதியது)

    பிரீமியம் (புதியது)

    சுப்பீரியர்

    பேட்டரி பேக்

    50 kWh

    60 kWh

    60 kWh

    பவர்

    204 Ps

    204 Ps

    204 Ps

           

    டார்க்

    310 Nm

    310 Nm

    310 Nm

    கிளைம்டு ரேஞ்ச் (ARAI)

    468 கி.மீ

    521 கி.மீ

    521 கி.மீ

    மேலும் படிக்க: மெர்சிடிஸ்-பென்ஸ் EQA கார் ரூ.66 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    BYD Atto 3 Charging Port

    அட்டோ 3 ஆனது BYD -யின் பிளேட் பேட்டரியுடன் வருகிறது. DC சார்ஜரை பயன்படுத்தி வெறும் 50 நிமிடங்களில் 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். டைனமிக் வேரியன்ட் 70 kW DC சார்ஜிங் ஆப்ஷனை சப்போர்ட் செய்கிறது. அதே நேரத்தில் பிரீமியம் மற்றும் சுப்பீரியர் வேரியன்ட்கள் 80 kW சார்ஜிங் ஆப்ஷனை சப்போர்ட் செய்கிறது. 

    வசதிகள் மற்றும் பாதுகாப்பு

    BYD Atto 3 Interior

    லோவர் வேரியன்ட் டைனமிக், பவர்டு டெயில்கேட், மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் போன்ற வசதிகள் இதில் கிடைக்காது. மற்றும் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துக்கு மாறாக 6 ஸ்பீக்கர்களை மட்டுமே கொண்டிருக்கும். அடாப்டிவ் LED ஹெட்லைட்கள் மற்றும் ADAS (இப்போது சிறந்த மாடலுக்கு மட்டுமே) ஆகிய வசதிகளும் கிடைக்காது. 

    BYD Atto 3 Panoramic Sunroof

    இருப்பினும், மூன்று வேரியன்ட்களிலும் பனோரமிக் சன்ரூஃப், 6-வே பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், 60:40 ஸ்பிளிட் ரியர் சீட், 5 இன்ச் டிஜிட்டல் டிரைவஸ் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 12.8 இன்ச் சுழலும் டச் ஸ்கிரீன் ஆகியவை ஆகியவை இருக்கும்.

    பாதுகாப்பைப் பொறுத்தவரை அனைத்து வேரியன்ட்களிலும் 7 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக உள்ளன, அதோடு எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் டிசென்ட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), 360-டிகிரி கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகிய வசதிகளும் உள்ளன. 

    விலை மற்றும் போட்டியாளர்கள்

    BYD Atto 3

    அட்டோ 3 -யின் புதிய வேரியன்ட்களின் விலை விவரங்களை ஜூலை 10 ஆம் தேதி BYD வெளியிட உள்ளது. தற்போது ​​அட்டோ 3 விலை ரூ. 33.99 லட்சம் முதல் ரூ. 34.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கிறது. ஆனால் இந்த புதிய வேரியன்ட்களின் அறிமுகம் மூலம் அட்டோ 3 -யின் ஆரம்ப விலை ரூ.30 லட்சத்திற்கும் (எக்ஸ்-ஷோரூம்) குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

    இந்த அப்டேட் MG ZS EV காருக்கு மிகவும் வலிமையான போட்டியாளராக அட்டோ 3 -யை மாற்றுகிறது. மற்றும் வரவிருக்கும் டாடா கர்வ்வ் EV, மாருதி சுஸூகி eVX மற்றும் ஹூண்டாய் கிரெட்டா EV காருக்கு போட்டியாகவும் இது இருக்கும்.

    லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்

    மேலும் படிக்க: அட்டோ 3 ஆட்டோமெட்டிக்

    was this article helpful ?

    Write your Comment on BYD அட்டோ 3

    explore மேலும் on பிஒய்டி அட்டோ 3

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience