சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

கிராஷ் சோதனை ஒப்பீடு: ஸ்கோடா ஸ்லாவியா/ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் Vs ஹூண்டாய் க்ரெட்டா

published on ஏப்ரல் 11, 2023 06:45 pm by tarun for ஸ்கோடா ஸ்லாவியா

பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு காரை விட இந்தியாவின் பாதுகாப்பான கார் ஒன்று எந்த வகையில் மேம்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் வோல்க்ஸ்வாகன் விர்டஸ் ஆகிய கார்கள் உறுதியான ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் சமீபத்தில் பெற்றிருந்தன. செடான்கள் இப்போது இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான கார்களாக உள்ளன, அவற்றின் எஸ்யுவி எடிஷன்களை ஓரளவு வித்தியாசத்தில் விஞ்சுகின்றன. சுமார் ரூ.11 லட்சம் முதல் ரூ.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான அவற்றின் விரிவான விலை வரம்பிற்கு நன்றி, செடான்கள், காம்பாக்ட் எஸ்யூவிகள் மற்றும் சில நடுத்தர அளவிலான எஸ்யூவி -களுடன் மறைமுகமாக போட்டியிடுகின்றன.

இப்போது, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி -களில் ஒன்றான ஹூண்டாய் க்ரெட்டாவுடன் சமீபத்திய இந்தியாவின் பாதுகாப்பான கார்களில் ஒன்றுடனான கிராஷ் டெஸ்ட் ஒப்பீடு இங்கே. இருப்பினும், ஸ்லாவியா மற்றும் விர்டஸ் ஆகியவை புதிய மற்றும் கடுமையான உலகளாவிய NCAP தரநிலைகளின்படி கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும். க்ரெட்டா இப்போது ஃப்ரன்டல் இம்பாக்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் செடான்கள் சைட் பேரியர், சைட் போல் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் சோதனைகளுக்கு உட்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த மதிப்பெண்கள் ஒப்பீடு




ஸ்லாவியா /விர்டஸ்


க்ரெட்டா (பழைய விதிகளின்படி சோதிக்கப்பட்டது)


பயணம் செய்யும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு


34 புள்ளிகளில் 29.71 (5 ஸ்டார்ஸ் )


17 இல் 8 புள்ளிகள் (3 ஸ்டார்ஸ்)


பயணம் செய்யும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு


49 இல் 42 புள்ளிகள் (5 ஸ்டார்ஸ்)


49 புள்ளிகளில் 28.29 (3 ஸ்டார்ஸ்)

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செடான்கள் தலா ஐந்து நட்சத்திரப் புள்ளிகளைப் பெற்றன, அதே நேரத்தில் க்ரெட்டா ஒவ்வொன்றிற்கும் மூன்று நட்சத்திரப் புள்ளிகளைப் பெற்றது. ஸ்லாவியா மற்றும் விர்ட்டஸின் ஃபுட்வெல் பகுதி மற்றும் பாடிஷெல் ஒருமைப்பாடு நிலையானது மற்றும் கூடுதலான எடை தாங்கும் திறன் கொண்டதாக மதிப்பிடப்பட்டாலும், ஹூண்டாய் க்ரெட்டாவைப் பொறுத்தவரை இது நிலையற்றதாக இருந்தது.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் Vs ஸ்கோடா குஷாக் - க்ராஷ் டெஸ்ட் ரேட்டிங் ஒப்பிடப்பட்டது

பயணம் செய்யும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு
ஸ்கோடா ஸ்லாவியா/விர்டஸ்:

  • ஸ்லாவியா மற்றும் விர்டஸ் தலை, கழுத்து, ஓட்டுநரின் தொடைகள் மற்றும் சக பயணிகளின் கால்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன.

  • முன்பக்க பயணிகளின் இருவரின் மார்புப் பகுதி, போதுமான பாதுகாப்பைப் பெறுகிறது.

  • கடுமையான விதிமுறைகளின்படி, செடான்கள் சைட் பேரியர் மற்றும் போல் இம்பாக்ட் ஆகியவற்றுக்காகவும் சோதிக்கப்பட்டன.

  • சைட் பேரியர் இம்பாக்ட் சோதனையில், அவை இடுப்பு பகுதிக்கு நல்ல பாதுகாப்பை வழங்கின, ஆனால் தலை, மார்பு மற்றும் அடிவயிற்றுக்கு போதுமான அளவு பாதுகாப்பை வழங்கின.

  • சைட் போல் இம்பாக்ட் சோதனையின் போது, VAG ட்வின்ஸ் தலை, கழுத்து மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல பாதுகாப்பைக் காட்டியது, ஆனால் மார்புக்கு ஓரளவுக்கே பாதுகாப்பு இருப்பதைக் காட்டியது.

ஹூண்டாய் க்ரெட்டா

  • ஃப்ரன்டர் இம்பாக்ட் சோதனையின் போது, க்ரெட்டா இணை ஓட்டுநரின் தலை மற்றும் முன் பயணிகளின் கழுத்துக்கு சிறப்பான பாதுகாப்பு இருப்பதைக் காட்டியது, ஆனால் ஓட்டுநரின் தலைக்கு போதுமான அளவு பாதுகாப்பு இருப்பதையே காட்டியது.

  • ஓட்டுநரின் மார்புக்கான பாதுகாப்பு ஓரளவு இருந்தது, ஆனால் இணை ஓட்டுநருக்கு நல்ல பாதுகாப்பு இருந்தது.

  • இரு பயணிகளின் முழங்காலுக்கும் ஓரளவு பாதுகாப்பு கிடைத்தது. டிரைவரின் டிபியாஸ் பலவீனமான மற்றும் போதுமான பாதுகாப்பைக் காட்டியது மற்றும் இணை ஓட்டுநரின் விஷயத்தில், நல்ல மற்றும் போதுமான பாதுகாப்பு வழங்கியது.

  • புதிய சோதனை விதிமுறைகள் பொருந்தாததால், க்ரெட்டாவிற்கு சைட் பேரியர் மற்றும் சைட் போல் சோதனைகள் நடத்தப்படவில்லை.

பயணம் செய்யும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு:


ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் VW விர்டஸ் களில், பின்புறம் அமர்ந்திருக்கும் மூன்று வயது மற்றும் 18 மாத வயதுடைய டம்மிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், மூன்று வயது குழந்தையின் தலை மற்றும் மார்புக்கு பலவீனமான பாதுகாப்பையும், 18 மாத டம்மிக்கு நல்ல பாதுகாப்பையும் க்ரெட்டா வழங்கியது

ஸ்டான்டர்டு பாதுகாப்பு அம்சங்கள்

ஸ்கோடா ஸ்லாவியா / ஃபோக்ஸ்வேகன் விர்டஸ்:

  • செடான்கள் டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், எலக்ட்ரானிக் டிஃபெரென்ஷியல் லாக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கண்ட்ரோல், ஐந்து இருக்கைகளுக்கும் மூன்று-புள்ளி சீட்பெல்ட்கள், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் மற்றும் TPMS ஆகியவை தரநிலையாக உள்ளன.

  • ஹையர் எண்ட் வேரியன்ட்களில் ஆறு ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் ஆகியவை கிடைக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டா

  • ஆறு ஏர்பேகுகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ISOFIX சைல்ட் சீட் ஆகியவை இப்போது க்ரெட்டாவுடன் ஸ்டான்டர்டாக கிடைக்கின்றன.

  • இருப்பினும், கிராஷ் சோதனையின் போது, இரட்டை முன் ஏர்பேக்குகள் மற்றும் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் மட்டுமே ஸ்டான்டர்டாக இருந்தது.

  • க்ரெட்டாவின் ஹையர் கிரேடுகளில் டயர் பிரஷர் கண்காணிப்பு மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா உள்ளது.

மேலும் படிக்க: ஹூண்டாய் i20 vs டாடா அல்ட்ரோஸ்: க்ராஷ் சோதனை மதிப்பீடுகள் ஒப்பிடப்பட்டது

டேக்அவே

ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் வோல்க்ஸ்வேகன் விர்டஸ் ஆகியவை நிச்சயமாக பாதுகாப்பான கார் என்றாலும், க்ரெட்டா இப்போது பல கூடுதல் அம்சங்களை ஸ்டான்டர்டாகப் பெறுகிறது. புதிய நெறிமுறை மற்றும் கூடுதல் அம்சங்களுடன், ஹூண்டாய் எஸ்யுவி சிறந்த பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெறலாம்.
மேலும் படிக்கவும்: ஸ்லாவியா ஆட்டோமெட்டிக்

t
வெளியிட்டவர்

tarun

  • 20 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஸ்கோடா ஸ்லாவியா

Read Full News

explore similar கார்கள்

வோல்க்ஸ்வேகன் விர்டஸ்

Rs.11.56 - 19.41 லட்சம்* get சாலை விலை
பெட்ரோல்20.8 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

ஸ்கோடா ஸ்லாவியா

Rs.11.53 - 19.13 லட்சம்* get சாலை விலை
பெட்ரோல்19.36 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

ஹூண்டாய் கிரெட்டா

Rs.11 - 20.15 லட்சம்* get சாலை விலை
டீசல்21.8 கேஎம்பிஎல்
பெட்ரோல்17.4 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்
Rs.2.03 - 2.50 சிஆர்*
எலக்ட்ரிக்
Rs.41 - 53 லட்சம்*
Rs.11.53 - 19.13 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை