• English
  • Login / Register

MG Hector காரில் வரப்போகும் அடுத்த வடிவமைப்பு மாற்றம் இதுதானா ?

published on ஆகஸ்ட் 16, 2023 06:33 pm by rohit for எம்ஜி ஹெக்டர்

  • 22 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த காரின் இந்தோனேசிய பதிப்பாக இருக்கும் வூலிங் அல்மாஸ் அதன் முன்புற தோற்றத்திற்கான ஒரு புதிய வடிவமைப்பை கொண்டுள்ளது.

2023 Wuling Almaz

  • MG ஹெக்டர்/ஹெக்டர் பிளஸ் டுயோ இந்தோனேசியாவில் வூலிங் அல்மாஸ் என விற்கப்படுகிறது.

  •  சமீபத்தில் நடந்த கைகிண்டோ இந்தோனேசியா சர்வதேச ஆட்டோ ஷோவில் (GIIAS) ஃபேஸ்லிஃப்டட் தோற்றத்தில் இது காட்சிக்கு வைக்கப்பட்டது.

  •  எஸ்யூவி -யின் தோற்றம் இப்போது குரோம் அலங்காரங்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஏர் டேமை கொண்டுள்ளது.

  •  அதன் கேபின் லேஅவுட் 2021 MG ஹெக்டரைப் போலவே உள்ளது, ஆனால் முற்றிலும் பிளாக் தீம் கொண்டது.

  •  போர்டில் உள்ள அம்சங்களில் பனோரமிக் சன்ரூஃப், செங்குத்தாக இருக்கும் டச் ஸ்கிரீன் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும்.

  •  1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.

MG ஹெக்டர் மற்றும் MG ஹெக்டர் பிளஸ் டுயோ இந்தோனேசியாவில் உள்ள வூலிங் அல்மாஸ் உட்பட பல்வேறு பெயர்களுடன் உலகம் முழுவதும் பல சந்தைகளில் கிடைக்கிறது. எஸ்யூவி இப்போது தெற்காசிய நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் சமீபத்தில் நடைபெற்ற கைகிண்டோ இந்தோனேசியா சர்வதேச ஆட்டோ ஷோவில் (GIIAS) காட்சிப்படுத்தப்பட்டது.

அப்டேட்டில் கொடுக்கப்பட்டவை என்ன?

2023 Wuling Almaz front fascia

 

இந்தியா-ஸ்பெக் ஹெக்டர் போதுமான அளவு வலுவான தோற்றத்தை கொண்டிருக்கவில்லை, இப்போது அதன் இந்தோனேசிய பதிப்பு இப்போது மிகவும் முரட்டுத்தனமான முன்புற தோற்றத்தைப் பெறுகிறது. இந்தோனேசிய கார் தயாரிப்பு நிறுவனம்  எஸ்யூவி -யின் பெரிய கிரில் மற்றும் ஹெட்லைட் கிளஸ்டர்களை மூடிய பகுதியுடன் (EV களில் காணப்படுவது போல்) மேல்புறத்தில் வூலிங் லோகோவுடன் மாற்றியுள்ளது. மீதமுள்ள முன்பக்க பம்பரில் குரோம்-ஃபினிஷ்டு  முக்கோண அலங்காரங்கள் (ஹைப்ரிட் பதிப்பில் கடைசி வரிசையில் நீலம்) மற்றும் LED ஹெட்லைட்கள் உள்ளன. இது இன்னும் முன்புற முனையின் அடிப்பகுதியில் மையத்தில் ஒரு சிறிய ஏர் டேமைக் கொண்டுள்ளது.

2023 Wuling Almaz rear

எஸ்யூவியின் பக்கவாட்டில் செய்யப்பட்ட ஒரே மாற்றம் புதிய அலாய் வீல்கள் மட்டுமே. பின்புறத்தில், அல்மாஸ் புதிய டெயில்லைட்களை இணைக்கும் வூலிங் பேட்ஜுடன் ஒரு பளபளப்பான கருப்பு பட்டை இருக்கிறது. கார் தயாரிப்பு நிறுவனம் பின்புற பம்பரையும் மறுவடிவமைத்துள்ளது, இப்போது ஒரு குரோம் ஸ்ட்ரிப்புடன் உள்ளது.

மேலும் படிக்கவும்: இந்த பண்டிகைக் காலத்தில் வெளிவரவுள்ள 5 புதிய எஸ்யூவிகள்

வழக்கமான உட்புறம்

2023 Wuling Almaz cabin

2021 ஹெக்டரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு, புதிய வூலிங் அல்மாஸின் உட்புறம் மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றும் (பிளாக் தீம் மற்றும் ஹைபிரிட் பதிப்பிற்கான மாறுபட்ட நீல தையல்களுடன்). கேபின் லே அவுட் ஒரே மாதிரியாக உள்ளது, செங்குத்தாக கொடுக்கப்பட்டுள்ள பெரிய டச் ஸ்கிரீன் மையமாக இருக்கிறது.

2023 Wuling Almaz panoramic sunroof
2023 Wuling Almaz electronic parking brake

உட்புறத்தில் உள்ள அம்சங்களில் பனோரமிக் சன்ரூஃப், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இருக்கின்றன. இதன் பாதுகாப்பு தொழில்நுட்பமானது 360 டிகிரி கேமரா, அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் பல ஏர்பேக்குகளை உள்ளடக்கியது.

ஹூட்டின் கீழ் ஒரு ஹைபிரிட் செட்அப்

2023 Wuling Almaz strong-hybrid powertrain

இந்தோனேசியா-ஸ்பெக் ஹெக்டர் (அல்மாஸ்) இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது: 140PS 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் மற்றும் 2-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் இன்ஜின். இரண்டும் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும்: முந்தைய காருக்கு CVT, மற்றும் பிந்தைய காருக்கு e-CVT கிடைக்கும்.

இதற்கிடையில், இந்தியா-ஸ்பெக் MG ஹெக்டர் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் (143PS/250Nm) மற்றும் 2-லிட்டர் டீசல் (170PS/350Nm) இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது. 6-ஸ்பீடு மேனுவல் நிலையானதாக வழங்கப்பட்டாலும், பெட்ரோலை, ஆப்ஷனலான 8-ஸ்டெப் CVT உடன் வைத்திருக்க முடியும், இரண்டும் அனைத்து ஆற்றலையும் முன் சக்கரங்களுக்கு அனுப்பும். MG வடிவமைப்பு புதுப்பிப்பைக் கொண்டு வந்தாலும், ஹெக்டர் எஸ்யூவிகளுக்கான பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்படவில்லை.

மேலும் படிக்கவும்: பனோரமிக் சன்ரூஃப் மீது உங்களுக்கு  விருப்பமா? ரூ.20 லட்சத்தில் உள்ள இந்த 10 கார்கள் இந்த அம்சத்தைப் பெறுகின்றன

MG ஹெக்டர் விலை மற்றும் போட்டியாளர்கள்

2023 MG Hector

இந்தியா-ஸ்பெக் ஹெக்டர் பல இருக்கை அமைப்புகளில் விற்கப்படுகிறது - ஐந்து, ஆறு மற்றும் ஏழு - பிந்தைய இரண்டும் 'ஹெக்டர் பிளஸ்' பெயரில் வழங்கப்படுகிறது. MG  ஹெக்டரின் விலை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.23.58 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா முழுவதும்) வரை இருக்கும். டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ், மஹிந்திரா XUV700 மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ N ஆகியவற்றுடன் 5- சீட் ஹெக்டர் போட்டியிடும். டாடா சஃபாரி, மஹிந்திரா XUV700 (7-சீட்டர்) மற்றும் ஹூண்டாய் அல்காஸர் ஆகியவற்றுடன் அதன் 3-வரிசை பதிப்பு போட்டியிடுகிறது.

மேலும் படிக்கவும்: MG ஹெக்டர் ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on M ஜி ஹெக்டர்

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience