சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவில் உள்ள அனைத்து பிரீமியம் கார்களை விடவும் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள BYD Seal கார்

sonny ஆல் மார்ச் 06, 2024 07:11 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
39 Views

ரூ.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் லாஞ்ச் செய்யப்பட்ட BYD சீல் பல்வேறு பிரீமியம் EV போட்டியாளர்களுடன் போட்டியிட தயாராக உள்ளது!

BYD சீல் எலெக்ட்ரிக் செடானின் வருகை இந்தியாவில் பிரீமியம் எலக்ட்ரிக் கார் செக்மென்ட்டை அதிர வைத்துள்ளது. ஆரம்பத்தில் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சீல் இப்போது அதிரடியான விலையுடன் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விலையை பற்றி ஆராய்வதற்கு முன் BYD சீல் சிறப்பான வசதிகள் நிறைந்த மாடல் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். டாப் வேரியன்ட் டூயல்-மோட்டார் செட்டப்பை கொண்டுள்ளது மற்றும் ஈர்க்கக்கூடிய பெர்ஃபாமன்ஸை வழங்குகிறது. இது 4 வினாடிகளுக்குள் 0-100 கிமீ வேகத்தை எட்டக் கூடியது. இப்போது அதன் வேரியன்ட் வாரியான விலையை அதன் நெருங்கிய போட்டியாளர்கள் மற்றும் வேரியன்ட்களுடன் ஒப்பிடுவோம்.

BYD சீல் விலை Vs போட்டியாளர்கள்


BYD சீல்


கியா EV6


ஹூண்டாய் அயோனிக் 5


வோல்வோ XC40 ரீசார்ஜ்


BMW i4

டைனமிக் - ரூ.41 லட்சம்

பிரீமியம் - ரூ.45.50 லட்சம்

ரூ.45.95 லட்சம்

பெர்ஃபாமன்ஸ் AWD - ரூ.53 லட்சம்


P8 AWD - ரூ.57.90 லட்சம்



GT Line - ரூ.60.59 லட்சம்


GT Line AWD - ரூ.65.95 லட்சம்


eDrive35 M ஸ்போர்ட் - ரூ.72.5 லட்சம்

ஹூண்டாய் அயோனிக் 5 உடன் ஒப்பிடும்போது BYD சீலின் பேஸ் வேரியன்ட் கிட்டத்தட்ட விலை ரூ. 5 லட்சம் வரை பலன்களுடன் உள்ளது. அதன் டாப்-ஸ்பெக் பெர்ஃபாமன்ஸ் சார்ந்த வடிவத்தில் கூட டூயல்-மோட்டார் BYD சீல் ஸ்போர்ட்டியான XC40 ரீசார்ஜ் (AWD உடன்) விட கணிசமான விலைக்கான நன்மையை வழங்குகிறது. இதன் வித்தியாசம் ரூ. 5 லட்சம் ஆகும். இருப்பினும் மிகவும் ஈர்க்கக்கூடிய அம்சம் என்னவென்றால் டாப்-ஸ்பெக் BYD சீலின் விலை இந்தியாவில் கிடைக்கும் அடுத்த பிரீமியம் எலக்ட்ரிக் செடான் BMW i4 காரை விட கிட்டத்தட்ட ரூ. 20 லட்சம் குறைவு!

BYD சீல்: பேட்டரி ரேஞ்ச் மற்றும் செயல்திறன்

உங்கள் அடுத்த பிரீமியம் EV ஆக BYD சீலை நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள் எனில் எலக்ட்ரிக் செடானுக்கான வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் விவரங்கள் இதோ:


சீல் டைனமிக் ரேஞ்ச்


சீல் பிரீமியம் ரேஞ்ச்


சீல் பெர்ஃபாமன்ஸ்


பேட்டரியின் அளவு



61.44 kWh



82.56 kWh



82.56 kWh


டிரைவ்ட்ரைன்



சிங்கிள் மோட்டர் (RWD)



சிங்கிள் மோட்டர் (RWD



டூயல் மோட்டர் (AWD

Power

பவர்

204 PS


204 PS

313 PS

313 PS

530 PS

530 PS



டார்க்



310 Nm



360 Nm



670 Nm



கிளைம்டு ரேஞ்ச்



510 km



650 km



580 km

வசதிகள்

பிரீமியம் காராக BYD சீல் பல வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது. பனோரமிக் கிளாஸ் ரூஃப் டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல் 15.6 இன்ச் ரொட்டேட்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவை இதில் அடங்கும்.

யூரோ NCAP -ஆல் (2023 ஆம் ஆண்டு) 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்ற EV -யான BYD சீல் ஏராளமான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. இந்தியா-ஸ்பெக் BYD சீல் 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றுடன் வருகிறது.

மதிப்பு மிக்கதா?

BYD இந்தியாவில் விலை மூலமாக நம்மை வியப்பில் ஆழ்த்துவதால் சீல் எலக்ட்ரிக் செடான் மீதான நமது எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கிறது. வரவிருக்கும் வாரங்களில் BYD சீல் பற்றிய எங்களின் முதல் டிரைவ் ரிவ்யூ மற்றும் உற்சாகமான கூடுதல் உள்ளடக்கத்திற்காக கார்தேக்கோ -வுடன் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க: BYD சீல் ஆட்டோமேட்டிக்

Share via

Write your Comment on BYD சீல்

explore similar கார்கள்

ஹூண்டாய் லாங்கி 5

4.282 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்

க்யா இவி6

51 விமர்சனம்இந்த காரை ரேட்டிங் செய்ய
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்

பிஒய்டி சீல்

4.438 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்

பிஎன்டபில்யூ ஐ4

4.253 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை