BYD சீல் எலக்ட்ரிக் செடான், யூரோ NCAP கிராஷ் டெஸ்ட்களில் 5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது
modified on அக்டோபர் 26, 2023 09:03 pm by rohit for பிஒய்டி சீல்
- 115 Views
- ஒரு கருத்தை எழுதுக
BYD சீல் இந்தியாவிற்கு பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டி ஆஃபராக வரும் என்று முன்பே உறுதி செய்யப்பட்டது.
-
பெரியவர்களுக்கான பாதுகாப்பில் சீல், 40 புள்ளிகளில் 35.8 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
-
குழந்தைப் பயணியருக்கான பாதுகாப்பு மதிப்பீடுகளில் 49 புள்ளிகளில் 43 புள்ளிகளைப் பெற்றது.
-
யூரோ NCAP மற்றொரு EVஆன, BYD டால்பினையும் சோதித்தது, இதுவும் 5-நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது.
-
2023 ஆம் ஆண்டின் இறுதியில் BYD சீல் EV -ன் இந்திய அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது; அதன் விலை 60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம்.
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் இந்தியாவில் அறிமுகமான BYD சீல் எலக்ட்ரிக் செடான், யூரோ NCAP வில் தற்போதுதான் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. இது சிறப்பாக செயல்பட்டது மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைப் பயணிகளின் பாதுகாப்பில் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது.
பெரியவர்களுக்கான பாதுகாப்பு - 35.8/40 புள்ளிகள் (89 சதவீதம்)
யூரோ NCAP புரோட்டாக்கால் -களின்படி, சீல் EV ஆனது 3 இம்பாக்ட் சோதனைகள் (முன்புறம், பக்கவாட்டு மற்றும் பின்புறம்) மற்றும் மீட்பு மற்றும் வெளியேற்றம் உட்பட 4 அளவுருக்களில் மதிப்பிடப்பட்டது. பெரும்பாலான சோதனைகளில், எலக்ட்ரிக் செடான் முன்பக்க பயணிகளின் தலைகளுக்கு 'நல்ல' பாதுகாப்பையும், இணை ஓட்டுநரின் மார்பு மற்றும் தொடை எலும்புகளுக்கு 'போதுமானது' பாதுகாப்பையும் வழங்கியது. பயணிகள் கம்பார்ட்மென்டும் 'நிலையானது' என மதிப்பிடப்பட்டது.
சைடு மற்றும் சைடு போல் இம்பாக்ட் சோதனைகள் இரண்டிலும், அனைத்து முக்கியமான உடல் பகுதிகளுக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பு 'நல்லது.' என்று மதிப்பிட்டது. பின்பகுதியில் இம்பாக்ட் ஏற்பட்டாலும், சீல் அனைத்து பயணிகளுக்கும் விப்ளாஷ் (சவுக்கடி) காயங்களுக்கு எதிராக 'நல்ல' பாதுகாப்பை வழங்குவதாகக் கூறப்பட்டது.
மீட்பு மற்றும் வெளியேற்றும் அளவுருவின் கீழ், மீட்பு தாள், அவசர அழைப்பு அமைப்பு, மல்டி-கொலிஷன் பிரேக் மற்றும் நீரில் மூழ்கும் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் பாதுகாப்பு ஆணையம் காரைச் சரிபார்த்து புள்ளிகளை வழங்குகிறது. BYD சீல்-இல் e-காலிங் சிஸ்டம் உள்ளது, இது விபத்து ஏற்பட்டால் அவசர சேவைகளை அழைத்து எச்சரிக்கும். இரண்டாம் நிலை மோதல்களைத் தவிர்ப்பதற்காக இம்பாக்ட்டிற்கு பிறகு பிரேக்குகளைப் பயன்படுத்தும் அமைப்பும் இந்தக் காரில் உள்ளது. சீல் காரின் கதவுகள், பூட்டப்பட்டிருந்தால், தண்ணீருக்குள் நுழைந்த பிறகு மின்சாரம் இழந்த இரண்டு நிமிடங்களுக்குள் திறக்கப்படலாம் என்றாலும், ஜன்னல்கள் செயல்படும் காலம் பற்றிய குறிப்பு தெளிவாக இல்லை.
FYI- சந்தையில் உள்ள ஒவ்வொரு மாடலுக்கும் கார் உற்பத்தி நிறுவனங்களால் ஒரு மீட்புத் தாள் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது, மேலும் ஏர் பேகுகள், ப்ரீ-டென்ஷனர்கள், பேட்டரிகள் மற்றும் உயர் மின்னழுத்த கேபிள்கள் மற்றும் கட்டமைப்பை வெட்ட பாதுகாப்பான இடம் போன்ற சாத்தியமான அபாயங்களைக் கண்டறிய உதவுகிறது.
மேலும் படிக்க: சுஸூகி eVX எலெக்ட்ரிக் SUV அதன் உறையை நீக்கியது ; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இதோ உங்களுக்காக
குழந்தைப் பயணிகளின் பாதுகாப்பு - 43/49 புள்ளிகள் (87 சதவீதம்)
6- மற்றும் 10 வயது குழந்தை டம்மிகளின் அனைத்து முக்கியமான உடல் பகுதிகளுக்கும் 'நல்ல' பாதுகாப்பை அளித்து சீல் EV ஆனது, ஃப்ரண்டல் ஆஃப்செட் மற்றும் சைட் பேரியர் தாக்க சோதனைகள் இரண்டிலும் முழு மதிப்பெண்களைப் பெற்றது. பின்புற-நடு இருக்கை அம்சத்தில் ISOFIX ஆங்கரேஜ்கள் இல்லாதது மட்டுமே இங்கு தொழில்நுட்பத்தில் உள்ள குறையாக உள்ளது. மேலும் ஒருங்கிணைந்த குழந்தை இருக்கை கட்டுப்பாடு அமைப்புகள் எதுவும் இல்லை.
தாக்குதலுக்கு ஆளாகக் கூடிய சாலைப் பயனர்கள் (VRU) - 51.7/63 புள்ளிகள் (82 சதவீதம்)
சோதனையின் VRU பகுதியானது விபத்தின் மூலம் அதனுடன் மோதும் நபர் அல்லது அதன் மேல் விழும் நபருக்கு கார் எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பதை மதிப்பிடுகிறது. சீல் EV இன் பானட் பாதசாரிகளுக்கு 'போதுமான' பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் முன்புற பம்பர் அவர்களின் கால்களை பாதிக்க வாய்ப்பில்லை, இடுப்பு, தொடை எலும்பு, முழங்கால் மற்றும் கணுக்கால் எலும்பு பகுதிக்கான பாதுகாப்பு 'நல்லது' என மதிப்பிடப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அதன் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB) பெரும்பாலான காட்சிகளில் மோதல்களைத் தவிர்க்க பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களைக் கண்டறிவதில் நன்றாக செயல்படுகிறது.
மேலும் படிக்க: BYD இன் 1 பில்லியன் டாலர் இந்திய முதலீட்டு திட்டம் நிராகரிக்கப்பட்டது:என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்
பாதுகாப்பு உதவிகள் - 13.8/18 புள்ளிகள் (76 சதவீதம்)
BYD இன் எலக்ட்ரிக் செடான் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) -ஐ பெறுகிறது, அவற்றில் பெரும்பாலானவை இந்தியா-ஸ்பெக் மாடலிலும் வழங்கப்படலாம். யூரோ NCAP சோதனைகளின்படி, அதன் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB) அமைப்பு, லேன் சப்போர்ட் மற்றும் ஸ்பீடு டிடெக்சன் அமைப்புகளைப் போலவே சிறப்பாக செயல்பட்டது. இருப்பினும், அதன் டிரைவர் ஸ்டேட்டஸ் மானிட்டரிங் சிஸ்டம் டிரைவரின் தூக்கத்தை மட்டுமே கண்டறிந்தது, இந்தப் பிரிவில் அதன் ஒட்டுமொத்த மதிப்பெண்ணைக் குறைக்கிறது.
BYD சீல் தனியாக சோதிக்கப்படவில்லை
சீன EV தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு எலக்ட்ரிக் கார் BYD டால்பின், அதே பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது, அதே சமயம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் சீல் EV போன்ற அதே புள்ளிகளைப் பெற்றது. பல்வேறு உலகளாவிய சந்தைகளில் இது ஒரு புதிய கார் ஆகும், ஆனால் விரைவில் அது இந்தியாவிற்கு வர வாய்ப்பில்லை.
சீல் EV பற்றி கூடுதல் தகவல்கள்
குளோபல்-ஸ்பெக் BYD சீல் EV ஆனது 82.5kWh மற்றும் 61.4kWh பேட்டரி பேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது முறையே 700km மற்றும் 550km வரை உரிமை கோரப்பட்ட ரேஞ்சை கொண்டுள்ளது. 530PS மற்றும் 670Nm என மதிப்பிடப்பட்ட டூயல்-மோட்டார் AWD (ஆல்-வீல் டிரைவ்) செட் அப்புடன் நீண்ட பயணதூர வெர்சன் எங்கள் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் எலக்ட்ரிக் செடான் 0-100kmph வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் எட்டிவிடும்.
இந்திய அறிமுகம் மற்றும் விலை
BYD சீல் 2023 ஆண்டின் இறுதிக்குள் CBU ஆக இந்தியாவிற்கு வரலாம், இதன் விலை சுமார் ரூ.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). ஆக இருக்கும் அதன் நேரடி போட்டியாளர் BMW i4 ஆகும், அதே நேரத்தில் இது கியா EV6, ஹூண்டாய் ஐயோனிக் 5, மற்றும் வால்வோ XC40 ரீசார்ஜ் போன்றவற்றுக்கு மாற்றாக இருக்கும்.
இதையும் பாருங்கள்: டாடா நெக்ஸான் EVயை விட டாடா பஞ்ச் EV அதிக பயணதூரத்தை வழங்குமா?