சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

11 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் Atto 3 பேஸ் வேரியன்ட்க்கான அறிமுக விலையை BYD நீட்டித்துள்ளது

published on ஆகஸ்ட் 21, 2024 05:54 pm by rohit for பிஒய்டி atto 3

அட்டோ 3 -ன் புதிய பேஸ்-ஸ்பெக் மற்றும் காஸ்மோ பிளாக் எடிஷன் வேரியன்ட்களுக்கு 600-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை BYD பெற்றுள்ளது

  • 2013-இல் சென்னையில் எலக்ட்ரிக் பஸ்ஸை அறிமுகப்படுத்தியதன் மூலம் BYD இந்தியாவில் தனது பயணத்தைத் தொடங்கியது.

  • அட்டோ 3 -ன் புதிய பேஸ்-ஸ்பெக் டைனமிக் வேரியன்ட் ஜூலை 2024-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • அட்டோ 3 இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வருகிறது மற்றும் 521 கி.மீ வரை கிளைம் செய்யப்படும் ரேஞ்ஜை இது வழங்குகிறது.

  • முக்கிய அம்சங்களில் 12.8 இன்ச் ரொட்டேட்டபிள் டச்ஸ்கிரீன், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.

  • BYD ஆனது எலக்ட்ரிக் எஸ்யூவி-யின் விலையை ரூ. 24.99 லட்சத்தில் இருந்து ரூ. 33.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) என நிர்ணயித்துள்ளது.

ஆகஸ்ட் 20, 2013 அன்று சென்னையில் தனது முதல் எலக்ட்ரிக் பஸ்ஸை அறிமுகப்படுத்திய BYD, இந்தியாவில் தனது எலக்ட்ரிக் பயணத்தைத் தொடங்கி 11 வருட பயணத்தை தொடர்கிறது. இந்த மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், BYD அட்டோ 3 -ன் புதிய பேஸ்-ஸ்பெக் டைனமிக் வேரியன்ட்டின் அறிமுக விலை நீட்டிக்கப்பட்டுள்ளது. சீன EV தயாரிப்பாளர் டைனமிக் வேரியன்ட் மற்றும் புதிய காஸ்மோ பிளாக் எடிஷனை அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே மாதத்திற்குள் 600-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளதாகவும் அறிவித்தது.

BYD அட்டோ 3 -ன் விலை

வேரியன்ட்

விலை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா)

டைனமிக்

24.99 லட்சம் (அறிமுகம் விலை)

பிரீமியம்

29.85 லட்சம்

சுப்பீரியர்

33.99 லட்சம்

பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டை தவிர மிட்-ஸ்பெக் பிரீமியம் மற்றும் ரேஞ்ச்-டாப்பிங் சுப்பீரியர் டிரிம்களின் விலையில் எந்த மாற்றமும் இன்றி அப்படியே உள்ளது.

மேலும் படிக்க: இந்தியாவில் MG Windsor EV இந்த தேதியில் அறிமுகமாகும்

எலெக்ட்ரிக் பவர்டிரெய்ன் பற்றிய விவரங்கள்

எஸ்யூவி-யின் புதிய என்ட்ரி-லெவல் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியதுடன், BYD அட்டோ 3-க்கான சிறிய பேட்டரி பேக் ஆப்ஷனையும் அறிமுகப்படுத்தியது. அதன் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் இதோ:

விவரங்கள்

டைனமிக்

பிரீமியம்

சுப்பீரியர்

பேட்டரி பேக்

49.92 கிலோவாட்

60.48 கிலோவாட்

60.48 கிலோவாட்

எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை

1

1

1

பவர்

204 PS

204 PS

204 PS

டார்க்


310 Nm

310 Nm

310 Nm

கிளைம் செய்யப்படும் ரேஞ்ச் (ARAI)



468 கி.மீ



468 கி.மீ



521 கி.மீ



DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி 50 நிமிடங்களில் BYD பிளேட் பேட்டரியை 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். பேஸ் வேரியன்ட்டை 70 கிலோவாட் DC சார்ஜிங் ஆப்ஷனை ஆதரிக்கிறது, மற்ற வகைகள் 80 கிலோவாட் வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கின்றன.

இது என்ன தொழில்நுட்பத்தை வழங்குகிறது?

BYD அட்டோ 3 ஆனது 12.8-இன்ச் ரொட்டேட்டபிள் டச்ஸ்கிரீன் உடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 6-வே பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் பாதுகாப்பு அம்சங்களில் ஏழு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை இதில் அடங்கும்.

BYD அட்டோ 3 -யின் போட்டியாளர்கள்

BYD அட்டோ 3, MG ZS EV உடன் நேரடியாக போட்டியிடுகிறது, மேலும் அறிமுகமாகவிருக்கும் மாருதி eVX மற்றும் ஹூண்டாய் கிரெட்டா EV-க்கும் போட்டியாக இருக்கும்.

புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: Atto 3 ஆட்டோமேட்டிக்

r
வெளியிட்டவர்

rohit

  • 59 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on BYD atto 3

Read Full News

explore மேலும் on பிஒய்டி atto 3

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.9.99 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Rs.12.49 - 16.49 லட்சம்*
Rs.9.99 - 14.29 லட்சம்*
Rs.7.99 - 11.49 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை