ஹோண்டா எலிவேட்டிற்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன, வேரியன்ட்களின் வரிசை வெளியிடப்பட்டது
published on ஜூலை 03, 2023 07:46 pm by rohit for ஹோண்டா எலிவேட்
- 45 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டா எலிவேட்டை ஆன்லைனில் மற்றும் கார் உற்பத்தி நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் ரூ.5,000 -க்கு முன்பதிவு செய்யலாம்.
-
ஹோண்டா நான்கு விதமான வேரியன்ட்களில் எஸ்யூவி -யை வழங்குகிறது: SV, V, VX மற்றும் ZX.
-
உலகளாவிய மாடலாக இருந்தாலும், எலிவேட் எஸ்யூவியைப் பெறும் முதல் சந்தையாக இந்தியா இருக்கும்.
-
எஸ்யூவி ஆனது 10.25-இன்ச் டிஸ்பிளே, சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் ADAS ஆகியவற்றைப் பெறுகிறது.
-
சிட்டி -யின் 1.5-லிட்டர் (121PS/145Nm) பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படும்; EV பதிப்பு 2026 -ம் ஆண்டுக்குள் வரும்.
-
விலை ரூ.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.
ஹோண்டா எலிவேட் இன் முன்பதிவுகள் இப்போது ஆன்லைனில் மற்றும் ஹோண்டா டீலர்ஷிப்களில் ரூ.5,000க்கு திறக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமும் காம்பாக்ட் எஸ்யூவி 2023 செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் அதன் வேரியன்ட்களின் வரிசை பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
ஹோண்டா எஸ்யூவி பற்றி இதுவரை எங்களுக்குத் தெரிந்த அனைத்தும் இதோ:
நேர்த்தியான வடிவமைப்பு
பெரிய கிரில் உடன் LED ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள், 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் மஸ்குலர் பாடி கிளாடிங் என வெளிப்புற சிறப்பம்சங்களுடன் ஹோண்டா எஸ்யூவி மிருதுவான மற்றும் நவீன வடிவமைப்பைப் பெறுகிறது. இது குறிப்பாக எதற்கும் தனித்து நிற்கவில்லை என்றாலும், அதன் வடிவமைப்பு முதிர்ச்சியடைந்ததாகவும் பிரிவில் தனித்துவமாகவும் தெரிகிறது.
தொடர்புடையவை: இந்த 10 படங்களில் ஹோண்டா எலிவேட்- இன் வெளிப்புறத்தைப் பாருங்கள்
கேபின் மற்றும் உபகரணங்களின் விவரங்கள்
எலிவேட் காரில், கார் தயாரிப்பு நிறுவனம் சிட்டியை விட உட்புற வடிவமைப்புகளை அதிக அளவில் உயர்த்தியுள்ளது. எஸ்யூவியின் கேபினில் பிளாக் மற்றும் பிரெளவுன் நிற தீம் உள்ளது, இதில் தோலினால் ஆன இருக்கையும் அதில் அடங்கும், இது அதிக பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்புடன் கூடிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்பு, சிங்கிள்-பேன் சன்ரூஃப், 7 இன்ச் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றை ஹோண்டா எஸ்யூவியில் பொருத்தியுள்ளது. அதன் பாதுகாப்பு கருவியில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS), 360 டிகிரி கேமரா மற்றும் ஆறு காற்றுப்பைகள் போன்ற அம்சங்கள் உள்ளன.
பெட்ரோல்-ஒன்லி மட்டும் கொண்ட மாடல்
எலிவேட் உடன் சிட்டியின்1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (121PS/145Nm) மட்டுமே வரும் இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது CVTஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்படும். வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே உறுதிப்படுத்தப்பட்டபடி, எலிவேட், ஹைப்ரிட் ஆப்ஷனை தவிர்த்துவிட்டு , அதற்குப் பதிலாக EV வெர்ஷனை பெறும், அது 2026-ம் ஆண்டுவாக்கில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்:: 2023 ஜூலை மாதத்தில் எலிவேட் முன்பதிவுகளைத் திறக்க, இந்தியாவிற்கான எஸ்யூவிகள்/e-எஸ்யூவிகளில் விரைவு காட்டும் ஹோண்டா
அறிமுகம் மற்றும் விலை விவரங்கள்
ரூ.11 லட்சம் (எக்ஸ்-ஷோ ரூம்) விலையில் தொடங்கும் இதனை ஹோண்டா இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என நாங்கள் நம்புகிறோம். இது நான்கு விதமான டிரிம்களில் வழங்கப்படும் மற்றும் இது வழக்கமான ஹோண்டா பெயரிடலைப் பின்பற்றுகிறது - SV, V, VX மற்றும் ZX.
காம்பாக்ட் எஸ்யூவி, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸுக்கு எதிராக போட்டியிடும். MG ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர் மற்றும் வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ்க்கு போட்டியாக இருக்கும்.
0 out of 0 found this helpful