சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவில் Electric Mini Countryman காருக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது

published on ஜூன் 14, 2024 08:40 pm by dipan

மினி நிறுவனத்தின் முதலாவது ஆல் எலக்ட்ரிக் கன்ட்ரிமேன் காரை இப்போது இந்தியாவிற்கான மினி இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

  • எலக்ட்ரிக் கன்ட்ரிமேனுக்கான உலகளாவிய உற்பத்தி இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது. இந்தியாவிற்கான விலை விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

  • புதிய மினி கூப்பரை போலவே புதிய வடிவிலான எண்கோண முகப்பு கிரில் மற்றும் LED டெயில்லைட்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

  • உள்ளே பழைய வடிவிலான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இப்போது நீக்கப்பட்டு மையப்பகுதியில் 9.4-இன்ச் ரவுண்ட் OLED டச் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • எலக்ட்ரிக் மினி கன்ட்ரிமேன் 66.4 kWh பேட்டரி பேக்கை 400 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை பெறுகிறது.

2023 ஆண்டின் பிற்பகுதியில் மினி நிறுவனத்தின் ஆல் எலக்ட்ரிக் மினி கன்ட்ரிமேன் உலகளவில் வெளியிடப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் கன்ட்ரிமேன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது, மேலும் அதற்கான முன் பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

வெளிப்புறம்

2024 மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பிராண்டின் 5-டோர் காருக்கு ஒரு சிறப்பான வடிவத்தை கொடுக்கிறது. இது சிக்கலான டிஸைன் எலமென்ட்களுடன் கூடிய புதிய எண்கோண முன் கிரில்லை கொண்டுள்ளது, DRL -களுக்கான கஸ்டமைஸ் செய்து கொள்ளக்கூடிய லைட் சிக்னேச்சர் உடன் புதிய LED ஹெட்லைட்கள் உள்ளன.

பக்கவாட்டில் இது 20 இன்ச் அளவுகளில் புதிய டிஸைன் உடன் கூடிய அலாய் வீல் உள்ளது.

பின்புறம் நவீன பிக்சலேட்டட் தோற்றத்துடன் புதிய வடிவிலான LED டெயில்லைட்களை கொண்டுள்ளது. ஸ்மோக்கி கிரீன், ஸ்லேட் ப்ளூ, சில்லி ரெட் II, பிரிட்டிஷ் ரேசிங் கிரீன், பிளேசிங் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் என 6 கலர் ஸ்கீம்களில் இந்த புதிய எலக்ட்ரிக் கன்ட்ரிமேன் காரை மினி நிறுவனம் வழங்குகிறது.

உட்புறம்

2024 மினி கன்ட்ரிமேன் EV -யின் உட்புறம் புத்தம் புதியதாகவும் மினிமலிஸ்ட் தன்மையுடன் வட்ட வடிவ தீம் கொண்டதாக உள்ளது. இதன் டேஷ்போர்டில் 9.4-இன்ச் சுற்று OLED டச் ஸ்கிரீன் மையத்தில் உள்ளது. இந்த சென்ட்ரல் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் ஆக மட்டுமில்லாமல் டிரைவருடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் காட்டுகிறது. மேலும் இங்கு வழக்கமான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இல்லை. ஆப்ஷனலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஒரு ஆக்ஸசரீஸ் ஆக கிடைக்கிறது.

பார்க்கிங் பிரேக், கியர் செலக்டர், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், எக்ஸ்பீரியன்ஸ் மோட் டோகிள் மற்றும் வால்யூம் கண்ட்ரோல் ஆகியவை மையத் திரைக்குக் கீழே உள்ள டோகல் பார் கன்சோலில் நேர்த்தியாக கொடுக்கப்பட்டுள்ளன. கியர் லீவர் இருந்த இடத்தில் வயர்லெஸ் சார்ஜிங் ட்ரே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப் கேபினின் வென்டிலேஷனை கொடுக்கிறது. மேலும் பின்புற இருக்கைகளை 40:20:40 ஸ்பிளிட் ஆக மடிக்கலாம். இவை ட்ரங்க் இடத்தை 460 முதல் 1450 லிட்டராக அதிகரிக்கின்றன.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

மினி கன்ட்ரிமேன் எலெக்ட்ரிக் காரில் எலக்ட்ரிக் அட்ஜஸ்ட்டபிள் முன் இருக்கைகள், ஓட்டுநர் இருக்கையில் மசாஜ் ஃபங்ஷன், ஆம்பியன்ட் லைட்ஸ், ரியர்வியூ கண்ணாடியின் உள்ளே எலக்ட்ரோக்ரோமிக், ஆட்டோ ஏசி மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகிய வசதிகளை பெறுகிறது.

பாதுகாப்புக்காக EV ஆனது லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பைப் பெறுகிறது. இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்டீயரிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. இது டிராக்ஷன் கன்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றைப் பெறுகிறது.

பேட்டரி, மோட்டார் மற்றும் ரேஞ்ச்

மினி எலக்ட்ரிக் கன்ட்ரிமேனுக்கு உலகளவில் இரண்டு ஆப்ஷன்களை வழங்குகிறது: E மற்றும் SE, இரண்டும் ஒரே 66.4 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. மினி கன்ட்ரிமேன் E ஆனது 204 PS மற்றும் 250 Nm டார்க்கை கொடுக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டுள்ளது, WLTP கிளைம்டு ரேஞ்ச் 462 கி.மீ ஆகும். இது முன் சக்கரங்களை இயக்கும் சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸை பெறுகிறது. செயல்திறனைப் பொறுத்தவரை இது 8.6 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டுகிறது. மேலும் இதன் அதிகபட்ச வேகம் 170 கி.மீ ஆகும்.

அதிக சக்தி வாய்ந்த SE வேரியன்ட் ஆனது ஆல்-வீல்-டிரைவ் திறனுக்காக இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள், ஒவ்வொரு ஆக்ஸிலிலும் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளன. மற்றும் இதன் மொத்த அவுட்புட் 313 PS மற்றும் 494 Nm ஆகும். இந்த செட்டப் 433 கி.மீ வரை WLTP கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. இது 0-100 கிமீ வேகத்தை 5.6 வினாடிகளில் எட்டும் மற்றும் இதன் அதிகபட்ச வேகம் 180 கிமீ/மணி ஆகும்.

இரண்டு மாடல்களும் 130 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றன. இதன் மூலமாக 30 நிமிடங்களுக்குள் 10 முதல் 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

போட்டியாளர்கள்

தற்போதைய பெட்ரோல் மாடல் மினி கன்ட்ரிமேன் காரை விட ஆல் எலக்ட்ரிக் மினி கன்ட்ரிமேன் வெர்ஷனின் விலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை தற்போது ரூ.48.10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. எடுத்துக்காட்டுக்காக ஆல் எலக்ட்ரிக் மினி கூப்பர் SE காரின் விலை கடைசியாக ரூ. 53.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருந்தது. இது போட்டியிடும் BMW iX1 மற்றும் வோல்வோ XC40 ரீசார்ஜ் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

d
வெளியிட்டவர்

dipan

  • 51 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை