இந்தியாவில் அறிமுகமானது BMW i5 M60 கார், விலை ரூ. 1.20 கோடியாக நிர்ணயம்
BMW -ன் பெர்ஃபாமன்ஸ் சார்ந்த எலக்ட்ரிக் செடானின் டெலிவரிகள் மே 2024 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
i5 என்பது புதிய ஜென் 5 சீரிஸ் செடானின் ஆல்-எலக்ட்ரிக் காரின் தொடர்ச்சியாகும்.
-
பிஎம்டபிள்யூ நிறுவனம் i5 காரை டாப்-ஸ்பெக் M60 வேரியன்ட்டில் மட்டுமே முழுமையாக கட்டமைக்கப்பட்ட இறக்குமதியாக வழங்குகிறது.
-
i5 M60 ஆனது வழக்கமான i5 ஐ விட M மாடல் என்பதை குறிப்பிட்டு காட்டும் கிரில், அலாய் வீல்கள் மற்றும் பேட்ஜ்களை கொண்டுள்ளது.
-
BMW டூயல் டிஜிட்டல் டிஸ்பிளேக்கள், ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் ADAS ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
81.2 kWh பேட்டரி பேக் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் செட்டப் 601 PS மற்றும் 795 Nm அவுட்புட்டை கொடுக்கின்றது, இன்னும் 500 கிமீ ரேஞ்ச் மேல் கிடைக்கும்.
புதிய தலைமுறை 5 சீரிஸ் -ன் ஆல் எலக்ட்ரிக் பதிப்பான BMW i5 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. BMW இதை ஃபுல்லி லோடட் M60 xDrive வேரியன்ட்டில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட இறக்குமதியாக வழங்குகிறது. இதன் விலை ரூ. 1.20 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு ஏப்ரல் 2024 தொடக்கத்தில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. டெலிவரிகள் மே மாதத்திலிருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்புற வடிவமைப்பு
5 சீரிஸ் அடிப்படையிலான சமீபத்திய தலைமுறை கார் இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை ஆனால் i5 ஆனது முந்தையதை விட சில வடிவமைப்பு வேறுபாடுகளை கொண்டுள்ளது. இதில் குளோஸ்டு-ஆஃப் கிரில் (இல்லுமினேஷன்) அடாப்டிவ் LED ஹெட்லைட்கள் மற்றும் வெர்டிகலாக அமைந்துள்ள இரண்டு LED DRL -கள் உள்ளன, இவை டர்ன் இன்டிகேட்டர்களாகவும் செயல்படும்.
i5 M60 வேரியன்ட் 20-இன்ச் M வேரியன்ட் என்பதை குறிப்பிட்டு காட்டும் அலாய் சக்கரங்களுக்கான புதிய வடிவமைப்பை ரெட் பிரேக் காலிப்பர்களுடன் வழக்கமான i5 காரில் இருந்து தனித்து தெரிகின்றது. BMW ஆனது M வேரியன்ட் என்பதை குறிப்பிட்டு காட்டும் பேட்ஜ்கள் மற்றும் கிரில், ORVMகள், சக்கரங்கள் மற்றும் ரூஃப் ஆகியவற்றிற்கு ஒரு பிளாக்டு அவுட் ட்ரீட்மென்ட்டை வழங்குகிறது. i5 M60 ஆனது பிளாக் கலர் டிஃப்பியூசர் மற்றும் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் கொண்ட பூட் லிப் ஸ்பாய்லரையும் பெறுகிறது.
இது அல்பைன் ஒயிட் நிறத்தில் மெட்டல் அல்லாத கலர் ஆப்ஷனாகவும், பின்வரும் மெட்டாலிக் ஷேடுகளிலும் கிடைக்கிறது - எம் புரூக்ளின் கிரே, எம் கார்பன் பிளாக், கேப் யார்க் கிரீன், பைடோனிக் ப்ளூ, பிளாக் சஃபைர், சோஃபிஸ்டோ கிரே, ஆக்சைடு கிரே மற்றும் மினரல் ஒயிட். கொஞ்சம் கூடுதலாக பணம் செலுத்தினால் சில கலர் ஆப்ஷன் ஷேடுகள் வழங்கப்படுகின்றன: ஃபுரோசன் போர்டிமாவோ புளூ, ஃபுரோசன் டீப் கிரே, ஃபுரோசன் பியூர் கிரே மற்றும் டான்சனைட் புளூ.
கேபின் மற்றும் புதிய வசதிகள்
உட்புறத்தில் BMW i5 M60 ஆனது ஒரு ஆல்-பிளாக் கேபின் தீம் மற்றும் டாஷ்போர்டில் டூயல் கர்வ்டு-டிஸ்பிளே செட்டப் ஆதிக்கம் செலுத்துகிறது. BMW ஆனது M வேரியன்ட் என்பதை குறிப்பிட்டு காட்டும் ஸ்டீயரிங் வீல் மற்றும் அதன் ஸ்போர்ட்டி தன்மையுடன் கொண்ட சீட்களை வழங்குகிறது.
i5 ஆனது 14.9-இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட், டிரைவருக்கான 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவற்றைப் பெறுகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (DSC), ISOFIX சைல்டு சீட்கள் மற்றும் பல அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் (ADAS) ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க: லம்போர்கினியின் Urus SE என்பது 800 PS பிளக்-இன் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் எஸ்யூ ஆகும்.
செயல்திறன் விவரங்கள்
விவரங்கள் |
i5 M60 |
பேட்டரியின் அளவு |
81.2 kWh |
WLTP கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் |
516 கி.மீ வரை |
எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை |
2 (1 முன்பக்கம் + 1 பின்பக்கம்) |
பவர் |
601 PS |
டார்க் |
795 Nm |
i5 M60 ஆனது ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட்டப்பை கொண்டிருக்கும். இது வெறும் 3.8 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும்.
சார்ஜிங் ஆப்ஷன்கள்
BMW i5 M60 xDrive ஆனது 11 kW வரை சார்ஜ் செய்யும் திறன் கொண்ட ஹோம் AC வால்பாக்ஸ் சார்ஜருடன் ஸ்டாண்டர்டாக வருகிறது, அதே நேரத்தில் ஆப்ஷனலாக 22 kW AC சார்ஜரும் கிடைக்கும்.
இந்தியாவின் விற்பனையில் உள்ள BMW -வின் EV கார்கள் மற்றும் i5 காரின் போட்டியாளர்கள்
பிஎம்டபிள்யூ -ன் இந்திய EV வரிசையில் i4 மற்றும் i7 -க்கு இடையில் i5 எலக்ட்ரிக் செடான் இருக்கிறது. பிஎம்டபிள்யூ இந்தியாவில் சந்தையில் iX1 மற்றும் iX எலக்ட்ரிக் எஸ்யூவி -களையும் வழங்குகிறது. இதற்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் இது ஆடி இ-ட்ரான் ஜிடி மற்றும் போர்ஷே டேகன் காரின் என்ட்ரி லெவல் வேரியன்ட்களுக்கு குறைவான விலை கொண்ட மாற்றாக இருக்கும்.
BMW ஆனது i5 M60 காரை வரம்பற்ற கிலோமீட்டருக்கு நிலையான 2 வருட வாரண்டியுடன் வழங்குகிறது, இது ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.i5 இன் பேட்டரி பேக்கிற்கு 8 ஆண்டுகள்/1.6 லட்சம் கிமீ வரை உத்தரவாதம் உள்ளது.
மேலும் படிக்க: i5 ஆட்டோமெட்டிக்