• English
  • Login / Register

Lamborghini Urus SE : 800 PS பிளக்-இன் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் எஸ்யூவியாக இருக்கும்

லாம்போர்கினி அர்அஸ் க்காக ஏப்ரல் 26, 2024 03:10 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 48 Views
  • ஒரு கருத்தை எழுதுக

29.5 kWh பேட்டரி பேக் மற்றும் 4-லிட்டர் V8 இன்ஜினுடன் எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும் லம்போர்கினி Urus SE வெறும் 3.4 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும்

Lamborghini Urus SE

  • இது 620 PS மற்றும் 800 Nm டார்க்கை கொடுக்கும் 4-லிட்டர் V8 இன்ஜினை கொண்டுள்ளது.

  • ஒரு எலக்ட்ரிக் மோட்டார் மூலம் லம்போர்கினி உரூஸ் SE ஆனது 800 PS மற்றும் 950 Nm டார்க் அவுட்புட்டை கொண்டுள்ளது.

  • இது ஆல்-வீல்-டிரைவ் (AWD) மோடில் எலெக்ட்ரிக் பவரை (EV மோட்) மட்டுமே பயன்படுத்தி 60 கிமீ வரை பயணிக்க முடியும்.

  • உரூஸ் SE ஆனது ஒரு பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் நுட்பமான வெளிப்புற வடிவமைப்பு சில விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன.

  • 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லம்போர்கினி உரூஸ் SE ஆனது லம்போர்கிநியின் முதலாவது பிளக்-இன் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் எஸ்யூவி ஆக உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதில் டூயல்-டர்போ V8 இன்ஜினுடன் சக்திவாய்ந்த 800 PS ஹைப்ரிட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இந்த உரூஸ் SE அதன் கவர்ச்சி மற்றும் செயல்திறனை மேம்படுத்த பல்வேறு ஸ்டைலிங் அப்டேட்டுகளையும் அறிமுகப்படுத்துகிறது.

பவர்டிரெயின்

Lamborghini Urus SE Plug-in Hybrid

லம்போர்கினியின் அதிகம் விற்பனையாகும் மாடலான உரூஸ் SE தற்போது 4-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட V8 இன்ஜினுடன் 620 PS மற்றும் 800 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிஃபிகேஷனைக் கொண்டுள்ளது. இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, உரூஸ் SE ஆனது ஒரு பிளக்-இன் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இதில் 25.9 kWh பேட்டரி பேக் எலெக்ட்ரிக் மோட்டாரை இயக்குகிறது. இந்த ஹைப்ரிட் செட்டப் 800 PS மற்றும் 950 Nm டார்கின் இன்டெகிரேட்டட் பவர் அவுட்புட்டை வழங்குகிறது.

மேலும் படிக்க: 2024 Jeep Wrangler அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ.67.65 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

புதிய உரூஸ் SE ஆனது வெறும் 3.4 வினாடிகளில் 0-100 கிமீ/மணி வேகத்தை எட்டும் என்று லம்போர்கினி நிறுவனம் தெரிவிக்கிறது. இது உரூஸ் S-ஐ விட 0.1 வினாடிகள் வேகமானது. ஒரு பிளக்-இன் ஹைப்ரிட் காராக இது ஒரு ஆல் EV மோடை கொண்டுள்ளது, அதன் மூலம் இந்த கார் 60 கிமீ தூரத்தைக் கடக்கும் திறனைக் கொண்டது. மணிக்கு 130 கி.மீ. எலெக்ட்ரிக் மோட்டார், டிரான்ஸ்மிஷனுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டு, நான்கு வீல்களுக்கும் 192 PS மற்றும் 483 Nm டார்க்கை வழங்குகிறது.

 வடிவமைப்பு

Lamborghini Urus SE Front

முதல் பார்வையில் வாடிக்கையாளர்களுக்கு உரூஸ் SE ஆனது உரூஸ் S -ஐ போலவே தோன்றலாம், ஆனால் லம்போர்கினி விவரங்களில் நுட்பமான மாற்றங்களைச் செய்துள்ளது. உரூஸ் SE ஆனது, ஏர் ஸ்கூப்கள் இல்லாமல் சற்றே ரீடிசைன் செய்யப்பட்ட பானட்டை கொண்டுள்ளது, மேலும் ஹெட்லைட்களுடன் DRL-களுக்கான புதிய டிசைனைக் கொண்டுள்ளது, இதில் Y-முத்திரைக்கு பதிலாக மென்மையான C- வடிவ அவுட்லைன் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, கிரில் மற்றும் முன்பக்க பம்பர் ஆகியவை கவர்ச்சிகரமான தோற்றத்திற்காக சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Lamborghini Urus SE Rear 3/4th

அதன் பக்கவாட்டு ப்ரொஃபைலை பார்க்கையில், உரூஸ் SE புதிய ஆல்-பிளாக் கலர் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் இது 21 இன்சுகள் முதல் 23 இன்சுகள் வரை பல வீல் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. காரின் பின்புறத்தில், ரீடிசைன் செய்யப்பட்ட பூட் லிப், புதிய பம்பர் மற்றும் டிஃப்பியூசர் உள்ளிட்ட மிகவும் குறிப்பிடத்தக்க டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய வடிவமைப்பில் பெரும்பாலானவை ரெவல்டோவால் ஈர்க்கப்பட்டவை என்று லம்போர்கினி கூறுகிறது.

உரூஸ் SE-யின் ரீ டிசைன் செய்யப்பட்ட பின்பக்கம் அழகுக்காக மட்டும் அல்ல; உரூஸ் S உடன் ஒப்பிடுகையில் இது அதிவேக டவுன்ஃபோர்ஸை 35 சதவீதம் அதிகரிக்கிறது.

கேபின் மற்றும் வசதிகள்

Lamborghini Urus SE Cabin

உரூஸ் SE-ன் கேபின் ரெவல்டோடில் இருந்து ஈர்க்கப்பட்டுள்ளது, இருப்பினும் அதன் டேஷ்போர்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் டேஷ்போர்டு, கதவுகள் மற்றும் சென்டர் கன்சோலில் ஆரஞ்சு கலர் ஸ்டைலிங் எலமென்ட்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒட்டுமொத்த கேபின் டிசைன் அப்படியே உள்ளது, ஆனால் இது புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்டு மற்றும் பெரிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதன் கேபின் பல வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கிறது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பல கஸ்டமைசேசஹன் ஆப்ஷன்களும் கிடைக்கின்றன.

மேலும் படிக்க: BYD Seal Premium Range மற்றும் Hyundai Ioniq 5: விவரங்கள் ஒப்பீடு

புதிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன்  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன், உரூஸ் SE ஆனது 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு சீட்கள், வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்றவற்றை கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக இது மேம்பட்ட டிராக்ஷன் மற்றும் ஸ்டபிலிட்டி கண்ட்ரோல் சிஸ்டம்கள், மல்டி ஏர்பேக்குகள் மற்றும் ரியர்வியூ கேமரா மற்றும் டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சங்கள் போன்ற ஆப்ஷனலான கூடுதல் பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கியது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் வெளியீடு

Lamborghini Urus SE Rear

லம்போர்கினி உரூஸ் SE, வரும் மாதங்களில் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, மேலும், ஒரு வருடத்திற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். இந்தியாவில் உரூஸ் காரின் விலை SE 4.5 கோடிக்கு மேல் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: லம்போர்கினி உரூஸ் ஆட்டோமேட்டிக்

was this article helpful ?

Write your Comment on Lamborghini அர்அஸ்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்Estimated
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்Estimated
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்Estimated
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்Estimated
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf3
    vinfast vf3
    Rs.10 லட்சம்Estimated
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience