லம்போற்கினி ஹுரகன் மாடலில் மேலும் புதிய வேரியண்ட்கள்

published on டிசம்பர் 22, 2015 02:25 pm by nabeel for லாம்போர்கினி ஹூராகான்

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

லம்போற்கினி நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார் பிரிவில், சமீபத்திய அறிமுகமான லம்போற்கினி ஹுரகன் மாடலில், குறைந்தது 5 வேரியண்ட்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஆட்டோமொபிலி லம்போற்கினி நிறுவனத்தின் தலைவர் மற்றும் CEO –வான திரு. ஸ்டிஃபன் விங்கெல்மன், இந்த செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இப்போது வரை, 4 விதமான ஹுரகன் வேரியண்ட்கள் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, இந்நிறுவனம் எடை குறைவான, கூடுதல் வேகத்துடன் ஓடக்கூடிய புதிய வேரியண்ட்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஆட்டோமொபிலி லம்போற்கினியின் CEO பதவியில் உள்ள ஸ்டிஃபன் விங்கெல்மன்னுக்கு பதிலாக, கடந்த வருடம் ஆடி நிறுவனத்தில் உறுப்பினராக இணைந்த, ‘ஃபெர்ராரி ஃபார்முலா ஒன்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஸ்டீஃபான்னோ டொமேனிகளி விரைவில் பதவி ஏற்பார் என்று தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

LP 610-4 கூபே, LP 620-2 சூப்பர் ட்ரோபியோ பந்தய கார், LP 610-4 ஸ்பைடர் மற்றும் LP 580-2 ரியர் வீல் டிரைவர் மாடல் ஆகியவை, தற்போது சந்தையில் உள்ள ஹுரகன் வேரியண்ட்கள் ஆகும். இறுதியாக வெளிவந்த LP 580-2 வேரியண்ட்டிற்கு ரூ. 2.99 கோடிகள் (டில்லி எக்ஸ்-ஷோரூம்) என்ற விலை நிர்ணயிக்கப்பட்டு, இந்தியாவில் 2016 –ஆம் ஆண்டு நவம்பர் 20 –ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள வேரியண்ட்கள் LP 580-2 ஸ்பைடர், சூப்பர்லெக்கெரா அல்லது சூப்பர்வேலாஸ் மாடல்களை ஒத்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ‘லம்போற்கினியின் தயாரிப்புகளிலேயே ஹுரகன் மாடல் கார்தான் எளிதாக மாற்றியமைக்க ஏதுவான, ஃபிளக்சிபிள் மாடலாகும். ஏனெனில், இந்த கார் உருவாக்கப்படும் போதே, பல விதமான வேரியண்ட்களை தயாரிக்க வேண்டும் என்ற கருத்தை மனதில் வைத்துதான் தயாரிக்கப்பட்டது’ என்று ஸ்டிஃபன் விங்கெல்மன் விளக்கமளித்தார். அவர், “கல்லார்டோ காரின் டெவலப்மெண்ட் நிலை முடிந்து, காரின் இட்ரண்டாம் பாக லைஃப் சைக்கிளில் இருக்கும் போதுதான், அதன் டெரிவேடிவ் ஸ்ட்ராடஜி தருவிக்கப்பட்டது. ஆனால், கல்லார்டோ போல இல்லாமல், ஹுரகன் காரின் அடிப்படை மாடல் டெவலப் செய்யப்படும் போதே, இதற்கான டெரிவெடிவ் ஸ்ட்ராடஜி உருவாக்கப்பட்டு விட்டது” என்று விவரித்தார். மேலும், அவர் ‘நிச்சயமாக எடை குறைக்கப்பட்ட வேகமாக ஓடும் கார், விரைவில் தயாரிக்கப்படும்’ என்று குறிப்பிட்டார். “வித விதமான அணுகுமுறைகளில் இந்த காரை உருவாக்குகிறோம். அதாவது, ஒரே கார் மாடலில், லைஃப்ஸ்டைல், செயல்திறன், எளிதாக ஓட்டக்கூடிய, அதிகப்படியான செயல்திறன் மற்றும் பந்தய கார் வேரியண்ட் என்று பலவற்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்,” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.

ஸ்டிஃபன் விங்கெல்மன் இந்த காரின் டெரிவெடிவ்கள் பற்றி பேசும் போது, “ஒரு லைஃப்சைக்கிளில் 5 டெரிவெடிவ்களுக்கும் அதிகமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே, நாங்கள் ஏராளமான கருத்துக்களையும் யோசனைகளையும் திட்டமிட்டு வைத்துள்ளோம். மேலும் யோசித்தால், புதுப் புது ஐடியாக்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. முதலீடு, உற்பத்தி திறன் மற்றும் சிக்கல்கள் போன்றவைகளை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஐடியாக்களை செயல்படுத்த முடியுமா அல்லது முடியாதா என்று பார்க்க வேண்டும்”, என்று தெரிவித்தார். “இந்த காரின் டெவலப்மெண்ட் நிலையின் தொடக்கத்தில், நாங்கள் குறிப்பிடத்தக்க முயற்சி செய்தோம். இப்போது, அந்த அனைத்து டெரிவெடிவ்களையும் சந்தைப் படுத்துவதற்கு மேலும் உழைக்க வேண்டும்,” என்று கூறினார்.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது லாம்போர்கினி ஹூராகான்

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகூபே சார்ஸ்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience