லம்போர்கினி உருஸ் SUV காரில் 4.0 லிட்டர் V8 டிவின் டர்போ இஞ்ஜின் பொருத்தப்படும்
published on டிசம்பர் 04, 2015 01:55 pm by bala subramaniam
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
லம்போர்கினி நிறுவனம் அடுத்து அறிமுகப்படுத்த உள்ள புதிய SUV காரான லம்போர்கினி உருஸ் காரில், 4.0 லிட்டர் V8 டிவின் டர்போ இஞ்ஜின் பொறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது வரை, லம்போற்கினி கார்கள் நேச்சுரலி இன்ஸ்பிரிடெட் V10 மற்றும் V12 இஞ்ஜின்கள் மட்டுமே பொருத்தப்பட்டு வெளிவந்தன. தற்போது, முதல் முறையாக டர்போ சார்ஜிங்க் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரப்போகிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். Autocar –ருக்கு லம்போர்கினியின் சீஃப் எக்ஸிக்யூடிவ்வான திரு. ஸ்டிஃபன் விங்கேல்மேன் மற்றும் R&D தலைவரான திரு. மாரிசியோ ரெஜியானி ஆகியோர் கொடுத்த பேட்டியில், இந்த செய்தியை அதிகாரபூர்வமாக உறுதி செய்தனர்.
லம்போற்கினி உருஸ் காரை 2018 –ஆம் ஆண்டு சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து வேலைகளும் மிக வேகமாக நடந்தேறி வருகின்றன. 2017 –ஆம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2018 –ஆம் ஆண்டு முதல் பகுதியிலோ, இதன் ப்ரொடக்ஷன் மாடல் வெளியிடப்படும். எனவே, வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன. டர்போ சார்ஜ்ட் இஞ்ஜினைப் பொருத்துவதன் மூலம் உள்ள நன்மைகள் யாதெனின், இது கார்பன் புகை வெளியீட்டின் அளவை குறைக்கிறது. மேலும், இனிய பாதை இல்லா ஆஃப் ரோட் பயணத்தில் லோ எண்ட் டார்க் உற்பத்தியும், அதிக செயல்திறனைக் கொடுக்க டாப் எண்ட் பவரும் உற்பத்தி செய்யப்படுகிறது. 4.0 லிட்டர் V8 இஞ்ஜின் லம்போர்கினி கார்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, VW நிறுவனத்தில் உள்ள வேறு எந்த பிராண்ட்களிலும் இந்த இஞ்ஜின் பொருத்தப்படாது. இதன் பிரிவிலேயே தலை சிறந்த இஞ்ஜினாக திகழப் போவதால், SUV பிரிவிலேயே அதிக சக்தி வாய்ந்த காராக உருஸ் காரை மாற்றிவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
எதிர்காலத்தில், உருஸ் வரிசை கார்களில் புதிய ஹைபிரிட் வெர்ஷன் மற்றும் ஆடம்பரமான சிறப்பம்ஸங்கள் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்று இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் உறுதியாகக் கூறுகின்றனர். அறிமுகத்திற்குப் பின்பு, சூப்பர்வெலோஸ் போன்ற ஸ்பெஷல் எடிஷன்களும் வெளியிடப்படும். உற்பத்தி செய்யப்படும் சக்தியை சிறந்த முறையில் விநியோகிக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், உருஸ் மாடல் ஆல் வீல் ட்ரைவ் அமைப்பில் மட்டுமே வரும்.
புதிய ஆடி Q7 மற்றும் விரைவில் அறிமுகம் ஆகவுள்ள பெண்ட்லி பெண்டேகா கார்களின் தொழில்நுட்பத்திலேயே புதிய உருஸ் காரும் உற்பத்தி செய்யப்படும். லம்போர்கினியின் தலைமையகமான சாண்ட்அகதா போலோக்னீஸ் என்ற இடத்தில், இந்த கார் உற்பத்தி செய்யப்படும். எனவே, இந்த ஆலையின் உற்பத்தி திறனை மேலும் விரிவு படுத்த, கணிசமான அளவில் முதலீடு செய்யப்படும்.
இதையும் படியுங்கள்
லம்போர்கினி ஹரகேன் வோர்ஸ்டீனர் நோவாரா பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது !