BYD Seal Premium Range மற்றும் Hyundai Ioniq 5: விவரங்கள் ஒப்பீடு
published on ஏப்ரல் 25, 2024 07:21 pm by shreyash for பிஒய்டி சீல்
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
சீல் மற்றும் அயோனிக் 5 ஆகிய இரண்டும் நிறைய வசதிகள் கொண்ட EV -கள் ஆகும். இருப்பினும் சீல் அதன் பெரிய பேட்டரி பேக்குடன் அதிக பெர்ஃபாமன்ஸை வழங்குகிறது.
50 லட்சத்திற்கும் குறைவான விலையில் பிரீமியம் EV -யை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட BYD சீல் மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 ஆகிய கார்களில் ஒன்றைத் தேர்வுசெய்ய உங்களுக்கு இப்போது இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. BYD சீல் ஒரு பிரீமியம் மின்சார செடான் ஆகும், அதே சமயம் அயோனிக் 5 ஒரு பிரீமியம் மின்சார எஸ்யூவி க்ராஸ்ஓவர் ஆகும். சீல் காரின் மிட்-ஸ்பெக் பிரீமியம் ரேஞ்ச் வேரியன்ட் ஹூண்டாயின் EV -க்கு நெருக்கமான விலையில் உள்ளது. விவரங்கள் மற்றும் வசதிகளின் அடிப்படையில் அவற்றை இங்கே ஒப்பிட்டுள்ளோம், ஆனால் முதலில் அவை எவ்வாறு விலை விவரங்களை பார்ப்போம்.
விலை
BYD சீல் பிரீமியம் ரேஞ்ச் |
ஹூண்டாய் அயோனிக் 5 |
ரூ.45.55 லட்சம் |
ரூ.46.05 லட்சம் |
-
ஹூண்டாய் அயோனிக் 5 காரை விட BYD சீலின் பிரீமியம் ரேஞ்ச் வேரியன்ட் ரூ. 50,000 குறைவாக கிடைக்கும்.
அளவீடுகள்
மாடல்கள் |
BYD சீல் |
ஹூண்டாய் அயோனிக் 5 |
நீளம் |
4800 மி.மீ |
4635 மி.மீ |
அகலம் |
1875 மி.மீ |
1890 மி.மீ |
உயரம் |
1460 மி.மீ |
1625 மி.மீ |
வீல்பேஸ் |
2920 மி.மீ |
3000 மி.மீ |
-
ஒரு செடானாக இருப்பதால் ஹூண்டாய் அயோனிக் 5 ஐ விட BYD சீல் 165 மிமீ நீளமானது. இருப்பினும், அயோனிக் 5 இன்னும் 15 மிமீ அகலமும், சீல் எலக்ட்ரிக் செடானை விட 165 மிமீ உயரமும் கொண்டது.
-
நீளமாக இருந்தாலும், ஹூண்டாய் அயோனிக் 5-ஐ விட BYD சீலின் வீல்பேஸ் 80 மிமீ குறைவாக உள்ளது.
-
கேபினை பொறுத்தவரை ஹூண்டாய் EV BYD எலக்ட்ரிக் செடானை விட கூடுதல் பலனை கொண்டிருக்கலாம் என்று ஒருவர் கருதலாம்.
பேட்டரி பேக் & எலக்ட்ரிக் மோட்டார்
விவரங்கள் |
BYD சீல் பிரீமியம் ரேஞ்ச் |
ஹூண்டாய் அயோனிக் 5 |
பேட்டரி பேக் |
82.56 kWh |
72.6 kWh |
டிரைவ் டைப் |
RWD |
RWD |
பவர் |
313 PS |
217 PS |
டார்க் |
360 Nm |
350 Nm |
கிளைம் செய்யப்பட்டுள்ள ரேஞ்ச் |
650 கி.மீ |
631 கி.மீ |
-
மிட்-ஸ்பெக் BYD சீல் ஹூண்டாய் அயோனிக் 5 -ஐ விட பெரிய பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது, ஆனால் 19 கி.மீ கூடுதலாக கிடைக்கின்றது.
-
சீல் எலக்ட்ரிக் செடான் அயோனிக் 5 ஐ விட 96 PS கூடுதல் ஆற்றலை வழங்குகிறது. இருப்பினும் இரண்டு EV -களின் டார்க் அவுட்புட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் வெறும் 10 Nm ஆகும், மேலும் சீல் அதிக டார்க் அவுட்புட்டை கொண்டுள்ளது.
-
இங்குள்ள இரண்டு EV -களிலும் பின் சக்கரங்களை இயக்கும் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது.
மேலும் பார்க்க: Mercedes-Benz EQG காரின் விவரங்கள் வெளியாகியுள்ளன! இந்த ஆல் எலக்ட்ரிக் ஜி-கிளாஸ் 1,000 Nm டார்க் மற்றும் 4 கியர்பாக்ஸ்களுடன் வருகிறது
சார்ஜிங் விவரங்கள்
விவரங்கள் |
BYD சீல் |
ஹூண்டாய் அயோனிக் 5 |
பேட்டரி பேக் |
82.56 kWh |
72.6 kWh |
ஏசி சார்ஜர் |
7 kW |
11 கி.வா |
DC ஃபாஸ்ட் சார்ஜர் |
150 கி.வா |
150 kW, 350 kW |
-
BYD சீல் உடன் ஒப்பிடுகையில், ஹூண்டாய் அயோனிக் 5 ஆனது 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் உட்பட வேகமான சார்ஜிங் ஆப்ஷன்களை சப்போர்ட் செய்கின்றது.
-
ஏசி ஃபாஸ்ட் சார்ஜிங்கின் அடிப்படையில் கூட அயோனிக் 5 சீலை விட குறைவான நேரத்தில் சார்ஜ் ஆகும். ஹூண்டாய் EV ஒரு சிறிய பேட்டரியை கொண்டுள்ளது. எனவே 0-100 சதவீதம் ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்க வேண்டும்.
-
இங்குள்ள இரண்டு EV -களும் 150 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை ஆதரிக்கின்றன.
வசதிகள்
மாடல்கள் |
BYD சீல் |
ஹூண்டாய் அயோனிக் 5 |
வெளிப்புறம் |
|
|
உட்புறம் |
|
|
கம்ஃபோர்ட் & வசதி |
|
|
இன்ஃபோடெயின்மென்ட் |
|
|
பாதுகாப்பு |
|
|
-
BYD சீல் மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 ஆகிய இரண்டும் பிரீமியம் கார்கள் என்பதால் நிறைய வசதிகளுடன் வருகின்றன. இருப்பினும் சீல் ஒரு பெரிய 15.6-இன்ச் ரொட்டேடபிள் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறுகிறது, இது 12-ஸ்பீக்கர் டைனாடியோ சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
ஒப்பிடுகையில் அயோனிக் 5 ஒரு இன்டெகிரேட்டட் 12.3-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று டிரைவருக்காகவும்). அயோனிக் 5 போஸ் சவுண்ட் சிஸ்டத்தைப பெறுகிறது ஆனால் 8 ஸ்பீக்கர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.
-
சீல் மற்றும் அயோனிக் 5 இரண்டும் ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளுடன் வருகின்றன. ஆனால் பிந்தையது ஸ்லைடு மற்றும் ரிக்ளைன் செய்து கொள்ளக்கூடிய ஹீட்டட் பின்புற இருக்கைகளையும் வழங்குகிறது.
-
ஹூண்டாய் EV -க்கான மற்றொரு கேபின் முன்பக்கத்தில் ஸ்லைடிங் சென்டர் கன்சோல் ஆகும்.
-
இருப்பினும் இங்குள்ள இரண்டு EV -களும் V2L (வெஹிகிள் டூ வெஹிகிள்) ஃபங்ஷனை கொண்டுள்ளன. இதன் மூலம் காரின் பேட்டரியை பயன்படுத்தி உங்கள் வெளிப்புற சாதனங்களை இயக்க அனுமதிக்கிறது.
-
பாதுகாப்பைப் பொறுத்தவரை BYD சீல் 9 ஏர்பேக்குகளை வழங்குகிறது அதேசமயம் ஹூண்டாய் அயோனிக் 5 கார் 6 ஏர்பேக்குகளை மட்டுமே பெறுகிறது. 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இரண்டு EV -களிலும் கிடைக்கின்றன.
முக்கிய விவரங்கள்
BYD சீல் மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 ஆகிய இரண்டும் ஃபுல்லி லோடட் மற்றும் 600 கி.மீ -க்கும் அதிகமான டிரைவிங் ரேஞ்சை வழங்குகின்றன. இருப்பினும் சீல் பெரிய பேட்டரி பேக்கை கொண்டுள்ளது மற்றும் அயோனிக் 5 காரை விட பவர் வாய்ந்தது.
எனவே நீங்கள் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிப்பவராகவும், குறைந்த ஸ்லாங் செடானை கண்டுகொள்ளதவராகவும் இருந்தால் BYD சீல் உங்களுக்கானது. மறுபுறம் நீங்கள் ஒரு எஸ்யூவி பாடி ஸ்டைலை விரும்பினால், கேபின் மற்றும் பூட்டில் அதிக இடம், மற்றும் மோசமாக வடிவமைக்கப்பட்ட வேகத்தடை மேல் செல்லும் ஒவ்வொரு முறையும் யோசிக்க விரும்பவில்லை என்றால், ஹூண்டாய் அயோனிக் 5 உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம்.
இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? கமெண்ட் பாக்ஸில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க: சீல் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful