BMW i5 காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியது, விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது
published on ஏப்ரல் 05, 2024 05:40 pm by rohit for பிஎன்டபில்யூ i5
- 45 Views
- ஒரு கருத்தை எழுதுக
i5 எலக்ட்ரிக் செடான் 601 PS மற்றும் 500 கி.மீ ரேஞ்ச் க்ளைம் கொண்ட டாப்-ஸ்பெக் பெர்பாமன்ஸ் வேரியன்ட்டில் கிடைக்கும்.
-
இந்தியாவுக்கான i5 காரை தொடக்கத்தில் CBU (முழுமையாக கட்டமைக்கப்பட்ட இறக்குமதி கார்) ஆகவே BMW நிறுவனம் கொடுக்கும். அதுவும் டாப்-ஸ்பெக் M60 வேரியன்ட்டில் மட்டுமே விற்பனைக்கு வரும்.
-
டெலிவரி மே 2024 முதல் தொடங்கும்.
-
i5 M60 காரின் வழக்காமான i5 உடன் ஒப்பிடும் போது M-ஸ்பெசிஃபிக் கிரில், அலாய் வீல்கள் மற்றும் பேட்ஜ்கள் கொடுக்கப்படும்.
-
உட்புறத்தில் இது ஆல் பிளாக் கேபின் தீம் மற்றும் M-ஸ்பெசிஃபிக் ஸ்டீயரிங் வீலை கொண்டுள்ளது.
-
டூயல் டிஜிட்டல் டிஸ்பிளேக்கள், ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
81.2 kWh பேட்டரி பேக் மற்றும் ஆல்-வீல் டிரைவ் செட்டப்புடன் வருகின்றது.
-
இது இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. விலை ரூ.1.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம்.
BMW (பிஎம்டபிள்யூ) இந்தியாவில் அதன் ஐந்தாவது அனைத்து எலக்ட்ரிக் காரான i5 ஐ விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இப்போது அதற்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. BMW i5 ஆல் எலக்ட்ரிக் பதிப்பு நியூ ஜெனரேஷன் 5 சீரிஸ் ஒரே ஒரு ஃபுல்லி லோடட் வேரியன்ட்டில் M60 xDrive வரவுள்ளது. முதலில் இந்தியாவுக்கு இது இறக்குமதி செய்யப்பட்டு அறிமுகமாகும். i5 EV அறிமுகத்தை தொடர்ந்து புதிய 5 சீரிஸின் ICE எடிஷன் பிறகு விற்பனைக்கு கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. i5 M60 xDrive -ன் டெலிவரிகள் மே 2024 முதல் தொடங்கும்.
BMW -ன் இந்திய EV வரிசையில் i4 மற்றும் i7 -க்கு இடையில் i5 எலக்ட்ரிக் செடான் இருக்கும். i4 மற்றும் i7 தவிர BMW நிறுவனத்தின் iX1 மற்றும் iX ஆகியவை இந்திய சந்தையில் தற்போது உள்ள எலக்ட்ரிக் எஸ்யூவிகள் ஆகும்.
i5 M60 பவர்டிரெய்ன் விவரங்கள்
விவரங்கள் |
i5 M60 |
பேட்டரி அளவு |
81.2 kWh |
எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை |
2 (1 முன் + 1 பின்) |
பவர் |
601 PS |
டார்க் |
820 Nm |
WLTP கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் |
516 கி.மீ வரை |
i5 M60 ஆனது 0-100 kmph வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் முடிக்க முடியும் மற்றும் BMW இன் xDrive அமைப்பைப் பயன்படுத்தி நான்கு சக்கரங்களுக்கும் சக்தி அனுப்பப்படுகிறது.
மேலும் படிக்க: இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Lexus NX 350h Overtrail விலை ரூ.71.17 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
வெளிப்புற வடிவமைப்பு
2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் BMW புதிய-ஜென் 5 சீரிஸ் மற்றும் i5 இரண்டையும் உலகளவில் அறிமுகப்படுத்தியது. 5 சீரிஸின் EV கார் என்பதால் i5 ஆனது மூடிய கிரில் மற்றும் புதிய வடிவிலான 20-இன்ச் அலாய் வீல்கள் உட்பட சில வடிவமைப்பு வேறுபாடுகளுடன் வருகிறது. i5 M60 வேரியன்ட் வழக்கமான i5 -ல் இருந்து தனித்து தெரியும் வகையில் அலாய் வீல்களுக்கான புதிய வடிவமைப்புடன் வருகிறது. இது M-குறிப்பிட்ட பேட்ஜ்கள் மற்றும் கிரில், ORVMகள், சக்கரங்கள் மற்றும் கூரைக்கு ஒரு பிளாக்டு ரூஃப் ட்ரீட்மென்டையும் பெறுகிறது. i5 M60 ஒரு பிளாக் டிஃப்பியூசர் மற்றும் ஒரு கார்பன்-ஃபைபர் ஃபினிஷ் கொண்ட பூட் லிப் ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது.
கேபின் மற்றும் அம்சங்கள்
உட்புறத்தில் BMW ஆல் பிளாக் தீம் மற்றும் M-குறிப்பிட்ட ஸ்டீயரிங் வீலை வழங்கியுள்ளது. நவீன BMW ஆஃபர்களில் காணப்படுவது போல் இன்டெகிரேட்டட் கர்வ்வ்டு டிஸ்ப்ளே செட்டப்பை கொண்டுள்ளது (ஒன்று இன்ஸ்ட்ரூமென்டேஷனுக்காக மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்டுக்காக).
வசதிகளை பொறுத்தவரை இது 14.9-இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட், டிரைவருக்கான 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவற்றைப் பெறுகிறது. பாதுகாப்புக்காக லேன் சேஞ்ச் வார்னிங், ரியர் கிராஸ்-டிராஃபிக் வார்னிங் மற்றும் ரியர் கொலிஷன் வார்னிங் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அடங்கும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
BMW i5 M60 xDrive விரைவில் ரூ. 1.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்களாக எந்த கார்களும் இருக்காது. ஆடி இ-ட்ரான் GT மற்றும் என்ட்ரில் லெவல் வேரியன்ட்களான ஃபோர்ஷே டைகன் ஆகியவற்றுக்கு குறைவான விலை உடைய மாற்றாக இருக்கும்.
0 out of 0 found this helpful