சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவில் BMW 220i M ஸ்போர்ட் ஷேடோ எடிஷன் ரூ.46.90 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது

published on மே 23, 2024 08:00 pm by dipan for பிஎன்டபில்யூ 2 சீரிஸ்

ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்காக வெளிப்புறத்தில் பிளாக்-அவுட் ஸ்டைலிங் டீடெயில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான 220i M ஸ்போர்ட் போன்ற இன்ஜினை பெறுகிறது.

  • 220i M ஸ்போர்ட் ஷேடோ எடிஷன் விலை ரூ. 46.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

  • பிளாக்-அவுட் கிரில் மற்றும் பிளாக் ஸ்பாய்லர் மற்றும் டார்கெண்ட் LED ஹெட்லைட்களை பெறுகிறது.

  • மெமரி ஃபங்ஷன் மற்றும் ஆம்பியன்ட் லைட்களுடன் எலக்ட்ரிக்கலி-அட்ஜஸ்ட்டபிள் ஸ்போர்ட் சீட்களை கொண்டுள்ளது.

  • டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஜெஸ்டர் கன்ட்ரோலுடன் கூடிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ரியர்வியூ கேமரா ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • BMW 2 சீரிஸின் வழக்கமான பெட்ரோல் வேரியன்ட்களில் உள்ள அதே 190 PS மற்றும் 280 Nm அவுட்புட் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் BMW 220i M ஸ்போர்ட் ஷேடு எடிஷன் ரூ.46.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டான 2 சீரிஸ் செடான் உடன் ஒப்பிடுகையில் ஷேடு எடிஷன் சில வடிவமைப்பு அப்டேட்களை பெறுகிறது. இதில் பிளாக்-அவுட் எலமென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் நுட்பமான வடிவமைப்பு மாற்றங்களுக்கு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பவர்டிரெய்ன் வழக்கமான 220i M ஸ்போர்ட் போலவே உள்ளது.

வெளிப்புறம்

மற்ற பிஎம்டபிள்யூ ஷேடோ எடிஷன் மாடல்களை போலவ 220i M ஸ்போர்ட்டிற்கான அதே ட்ரீட்மென்ட் உடன் சில பிளாக்-அவுட் எலமென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பின்புற ஸ்பாய்லரை போலவே கிட்னி கிரில் முற்றிலும் பிளாக்டு அவுட் செய்யப்பட்டுள்ளது. இது அடாப்டிவ் LED ஹெட்லைட்களை கொண்டுள்ளது. ஆனால் டார்க்எண்ட் இன்லேஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஃபுளோட்டிங் ஹப்கேப்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது தவிர மற்ற அனைத்து வடிவமைப்பு எலமென்ட்களும் அப்படியே இருக்கும்.

இன்ட்ரீரியர் மற்றும் வசதிகள்

ஷேடு பதிப்பில் உள்ளே மெமரி ஃபங்ஷன் கொண்ட ஸ்போர்ட் இருக்கைகள், கார்பன்-ஃபினிஷ்ட் கியர் செலக்டர், ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பிரத்யேகமாக இல்லுமினேட் செய்யப்பட்ட பெர்லின் உட்புற டிரிம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஆம்பியன்ட் லைட்களை 6 மங்கலான ஷேடுகளில் வைக்க முடியும். இந்த காரில் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் BMW இன் விர்ச்சுவல் அசிஸ்டன்ட் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப்பை கன்ட்ரோல் செய்ய முன் வரையறுக்கப்பட்ட 6 ஹேண்ட் ஜெஸ்டர்களையும் பெறுகிறது.

பவர்டிரெய்ன்

ஸ்டான்டர்ட் 2 சீரிஸ் M ஸ்போர்ட்டின் அதே 2.0-லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இந்த செடான் இயக்கப்படுகிறது. இது 190 PS மற்றும் 280 Nm அவுட்புட்டை கொடுக்கின்றது. இந்த இன்ஜின் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 7.1 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும். இகோ புரோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவ் மோட்கள் உள்ளன.

பாதுகாப்பு

பாதுகாப்பைப் பொறுத்தவரை 2 சீரிஸ் ஷேடோ எடிஷனில் 6 ஏர்பேக்குகள் மற்றும் பிரேக் அசிஸ்ட் உடன் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) உடன் ஸ்டாண்டர்டாக வருகிறது. ரியர்வியூ கேமராவுடன் பார்க் அசிஸ்ட், அட்டென்ஷன் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோலுடன் கூடிய டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (டிஎஸ்சி) மற்றும் எலக்ட்ரானிக் டிஃபெரென்ஷியல் லாக் கன்ட்ரோல் (ஈடிஎல்சி) ஆகியவை மற்ற பாதுகாப்பு வசதிகளாகும்.

போட்டியாளர்கள்

BMW 220i M ஸ்போர்ட் ஷேடோ எடிஷன் ஆடி ஏ4 -க்கு போட்டியாக உள்ளது. மேலும் டொயோட்டா கேம்ரி -க்கு ஒரு ஆடம்பர மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: BMW 2 சீரிஸ் ஆட்டோமெட்டிக்

d
வெளியிட்டவர்

dipan

  • 127 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது பிஎன்டபில்யூ 2 Series

Read Full News

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.10.69 - 18.69 லட்சம்*
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்
Rs.2.03 - 2.50 சிஆர்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை