புண்டோவிற்காக “ஹூ ஆம் ஐ” பிரச்சாரத்தை அபார்த் அறிமுகம் செய்துள்ளது
ஃபியட் புண்டோ அபார்த் க்காக செப் 23, 2015 08:25 pm அன்று cardekho ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: அபார்த் என்ற தனது கம்பெனியின் மூலம் ஃபியட் நிறுவனம், புண்டோ காரை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. கடந்த மாதம் சர்வதேச பூத் சர்க்கியூட்டில் முதல் முறையாக காண கிடைத்த இந்த கார், 1.4 லிட்டர் டர்போஜெட் என்ஜின் மூலம் 145 bhp மற்றும் 200 Nm ஆற்றலை வெளியிட்டு, பிரிமியம் அல்லாத பிரிவில் ஆதிக்கம் செலுத்த தயாராக உள்ளது. சர்வதேச சந்தையில் இந்த ஃபியட்டின் என்ஜின் 135 PS மற்றும் 200 Nm ஆற்றலை அளிப்பதாக மதிப்பிடப்பட்டாலும், தங்களின் சிறந்த செயல்பாடுகளின் மூலம் நகர்புற டிரைவர்களுக்கு இன்னும் அதிக ஆற்றலை அளிக்கும் என்று இந்நிறுவனம் பறைச்சாற்றுகிறது. மேலும், அதிக ஆற்றலை வழங்கும் வகையில், சஸ்பென்ஸன் சிஸ்டம் கூட விறைப்புள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது.
ஃபியட் கார்களின் செயலாக்கம் மிகுந்த தயாரிப்புகளை, தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் அபார்த், தனது தலைமை நிறுவனத்தின் பெயர் எந்த இடத்திலும் வெளிப்படாத வகையில் செயல்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு, இந்த தயாரிப்பு ஃபியட் உடையது அல்ல, அபார்த்தின் உடையது என்றே தெரியும். இதற்காக “ஹூ ஆம் ஐ” (நான் யார்?) என்ற ஒரு பிரச்சாரத்தையும் அந்நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
ஸ்கார்பியன் லோகோ, ஸ்போர்ட்டி டிகல்ஸ், புதிய நிற திட்டம், 16 இன்ச் அலாய்களில் 195/55 டயர்கள் சூழ்ந்த நிலையில், அதனோடு இணைந்த அபார்த் பேட்ஜ் ஆகியவை சேர்ந்து இந்த காருக்கு ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தை அளிக்கிறது.
எந்த மாற்றமும் இல்லாமல், பெரும்பாலும் எல்லா உபகரணங்களும் அமைய பெற்ற அபார்த் புண்டோ, இந்த பிரிவில் உள்ள மற்ற செயல்திறன் மிகுந்த ஹேட்ச்பேக்களை கட்டுப்படுத்தும் வகையில், ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய முழு கவனத்தையும் ஆற்றலில் செலுத்தியுள்ள நிலையில், இந்த காருக்கு அதுவே தனிப்பட்ட விற்பனை கூற்றாகவும் அமையலாம். நாடெங்கிலும் உள்ள ஃபியட் டீலர்ஷிப்கள் ஒன்றில் ரூ.50,000 முன்பணம் செலுத்தி, இந்த காருக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம்.