Hyundai Venue -வை விட Mahindra XUV 3XO காரில் உள்ள முக்கியமான 7 வசதிகள் என்ன தெரியுமா ?
published on மே 17, 2024 08:09 pm by dipan for மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
- 80 Views
- ஒரு கருத்தை எழுதுக
3XO கார் ஆனது இந்த செக்மென்ட்டில் உள்ள மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றான வென்யூ உடன் போட்டியிடும் வகையில் அசத்தலான வசதிகளுடன் வந்துள்ளது.
மஹிந்திரா XUV 3XO காரின் அறிமுகம் சப்-4m எஸ்யூவி பிரிவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலே உள்ள பிரிவுடன் போட்டியிட இந்த கார் போதுமானது என்று மஹிந்திரா கூறுகின்றது. மேலும் அது ஹூண்டாய் வென்யூ போன்ற பிரபலமான கார்களுடன் போராட எப்படி திட்டமிட்டுள்ளது? XUV 3XO -யின் சில முக்கிய வசதிகளின் விவரங்கள் இங்கே உள்ளன. அவற்றை பார்க்கும் போது நாட்டின் இரண்டாவது அதிக விற்பனையான ஹீண்டாய் மாடலை காட்டிலும் 3XO முன்னணியில் இருப்பது தெரிய வருகிறது:
சிறந்த பவர்டிரெய்ன்
மஹிந்திரா XUV 3XO மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகிய மூன்று இன்ஜின் ஆப்ஷன்களில் வருகின்றன. விவரக்குறிப்புகள் பின்வருமாறு:
விவரங்கள் |
மஹிந்திரா XUV 3XO |
ஹூண்டாய் வென்யூ |
||||
இன்ஜின் |
1.2-லிட்டர் (டேரக்ட் இன்ஜெக்ஷன்) டர்போ-பெட்ரோல் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.2 லிட்டர் பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
130 PS |
112 PS |
117 PS |
120 PS |
83 PS |
116 PS |
டார்க் |
230 Nm |
200 Nm |
300 Nm |
172 Nm |
115 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6MT, 6AT |
6MT, 6AT |
6MT, 6AMT |
6MT, 7DCT |
5MT |
6MT |
செயல்திறன் புள்ளிவிவரங்களில் XUV 3XO கார் வென்யூ -வை விட முன்னிலை பெறுவதை நாம் பார்க்க முடிகின்றது.
மேலும் பார்க்க: Kia Sonet காரை விட Mahindra XUV 3XO காரில் கிடைக்கும் முக்கியமான 5 வசதிகள்
டூயல் ஜோன் ஏசி
இந்த பிரீமியம் வசதி ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் XUV300 -யிலிருந்து புதிய XUV 3XO வரை எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த வசதி தற்காலத்தில் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் ஒரு பொதுவானதாக இருந்தாலும் கூட சப்-4m பிரிவில் இதை வழங்கும் ஒரே நிறுவனம் மஹிந்திரா மட்டுமே.
பனோரமிக் சன்ரூஃப்
இந்திய வாகன சந்தையில் விற்பனை என்று வரும்போது கார்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு வசதியாக சன்ரூஃப் கருதப்படுகிறது. சப்-4 மீ பிரிவில் உள்ள அனைத்து கார்களும் சன்ரூஃபை பெறும் போது, XUV 3XO கார் ஒரு படி மேலே சென்று ஒரு பனோரமிக் சன்ரூஃப் உடன் வருகின்றது..
டிரைவருக்கான ஆல் டிஜிட்டல் டிஸ்பிளே
முன்பு ஆடம்பரப் பிரிவு கார்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த சில தொழில்நுட்பங்கள் வெகுஜன சந்தை கார்களில் கிடைக்ககூடிய ஒன்றாக தற்போது மாறியுள்ளன. அதற்கு ஒரு உதாரணம் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகும். இதை இப்போது சப்-4m எஸ்யூவி பிரிவிலும் பார்க்க முடிகின்றது. இது இந்த பிரிவில் முதலாவதாக கொடுக்கப்பட்டது இல்லை என்றாலும் கூட XUV 3XO 10.25-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதே நேரத்தில் ஹூண்டாய் வென்யூவில் இன்னும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மட்டுமே உள்ளது.
360 டிகிரி கேமரா
சப்-4m எஸ்யூவி -கள் இரண்டும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வந்தாலும், மஹிந்திரா XUV 3XO ஆனது ஹூண்டாய் வென்யூவில் 360 டிகிரி கேமராவை கொண்டுள்ளது. தற்செயலான மோதல் மற்றும் கீறல்களின் அபாயங்களைக் குறைக்க இந்தியாவின் நெரிசலான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் சூழல்களில் இந்த வசதி அவசியமான ஒன்றாகும்
மேலும் பார்க்க: டாடா நெக்ஸானை விட மஹிந்திரா XUV 3XO கொடுக்கும் 7 வசதிகள்
பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
2022 ஃபேஸ்லிஃப்ட்டிற்கு பிறகும் ஹூண்டாய் வென்யூ காரில் கனெக்டட் கார் டெக்னாலஜி கொண்ட 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மட்டுமே உள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் மஹிந்திரா XUV 3XO ஆனது 10.25-இன்ச் யூனிட் உடன் வருகிறது, எனவே இது மற்றொரு பாயிண்டை பெற்றுள்ளது. மேலும் வென்யூ வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை. இந்த வசதிகள் இரண்டும் XUV 3XO காரில் உள்ளன.
எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்
ஒரு மெக்கானிக்கல் ஹேண்ட்பிரேக் அதன் வேலையை நன்றாகச் செய்யக்கூடியதுதான் என்றாலும் கூட, இது பிரீமியம் கேபின் தோற்றத்தை நோக்கமாகக் கொண்ட மாடல்களில் அதை பார்க்க நீங்கள் விரும்பமாட்டீர்கள். ஆகவே அதை XUV 3XO கார் வழங்குவது மற்றொரு நன்மையாகும். அத்தகைய ஹேண்ட்பிரேக்கை ஒரு பட்டனை தொடும்போது செயல்படுத்தலாம் மற்றும் துண்டிக்கலாம், இது வழக்கமான பார்க்கிங் பிரேக் லீவரை விட பயன்படுத்த எளிமையாக இருக்கும்.
மஹிந்திரா XUV 3XO புதிய காராக இருப்பதால் ஹூண்டாய் வென்யூவுடனான அம்சங்களின் போட்டியில் சிறப்பானதாக உள்ளது. இருப்பினும், இந்த வென்யூ அடுத்த ஆண்டு ஒரு ஜெனரேஷன் அப்டேட்டை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அப்டேட் மேலே குறிப்பிட்டுள்ள பல விடுபட்ட அல்லது காலாவதியான பல வசதிகளை சரி செய்யலாம்.
விலையை பொறுத்தவரை மஹிந்திரா XUV 3XO தற்போது அறிமுக விலையாக ரூ. 7.49 லட்சம் முதல் ரூ. 15.49 லட்சம் வரை உள்ளது. அதே சமயம் ஹூண்டாய் வென்யூ ரூ. 7.94 லட்சம் முதல் ரூ. 13.48 லட்சம் வரை விலையில் உள்ளது (விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை ஆகும்). மேலே பட்டியலிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் ஹூண்டாய் சப்-4எம் எஸ்யூவி -யில் மஹிந்திராவை தேர்ந்தெடுப்பீர்களா, இல்லையா? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க: XUV 3XO AMT