5-டோர் Mahindra Thar Roxx ஆனது Mahindra XUV400 EV-லிருந்து பெறலாம் என எதிர்பார்க்கப்படும் 5 வசதிகளின் விவரங்கள் இங்கே
வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் நேர்த்தியான டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் உட்பட சமீபத்திய XUV400 EV -லிருந்து மஹிந்திரா தார் ரோக்ஸின் பிரீமியம் வசதிகளைப் பெற உள்ளது.
மஹிந்திரா தார் ரோக்ஸ் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது, மேலும் கார் தயாரிப்பாளர் எஸ்யூவி-யின் டீஸர்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர். அதிகாரப்பூர்வ விவரக்குறிப்புகள் மற்றும் வசதிகளுக்கான பட்டியலுக்காக நாங்கள் காத்திருக்கையில், சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட மஹிந்திரா XUV400 EV -இன் சில வசதிகளைப் பற்றிய பார்வை இங்கே வழங்கப்பட்டுள்ளது. இதே வசதிகள் தார் ரோக்ஸ்ஸிலும் வழங்கப்படலாம்.
ஒரு 10.25-இன்ச் டச்ஸ்கிரீன்
மிட்-ஸ்பெக் மஹிந்திரா தார் ரோக்ஸ்ஸின் கேபின் பற்றிய விவரங்கள் சமீபத்தில் வெளியான ஸ்பை ஷாட்கள் மூலம் தெரியவந்துள்ளது, இது தற்போதைய 3-டோர் தாரை விட பெரிய டச்ஸ்கிரீனை பெறுவதை காட்டுகிறது. XUV400 EV -லிருந்து அப்டேட் செய்யப்பட்ட 10.25-இன்ச் டச்ஸ்கிரீனுடன் தார் ரோக்ஸ் வரக்கூடும் என்று எதிர்பார்க்கலாம். XUV400 -யின் யூனிட்டில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இல்லாத நிலையில் தார் ரோக்ஸ் இந்த வசதிகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே
தார் ரோக்ஸ் டெஸ்ட் மியூல்களின் முந்தைய ஸ்பை ஷாட் ஆல் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே இருப்பதைக் காட்டுகிறது. இதன் விளைவாக தார் ரோக்ஸ்ஸின் ப்ரொடக்ஷன் ஸ்பெக் XUV400 போன்ற அதே 10.25-இன்ச் யூனிட்டைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது நேவிகேஷன் மற்றும் டயர் ப்ரெஷர் மானிட்டர் போன்ற முக்கியமான தகவல்களை வழங்குகிறது.
டூயல்-ஜோன் ஏசி
டூயல்-ஜோன் ஏசி முன்பக்க பயணிகள் அவர்கள் தங்களின் தனிப்பட்ட ஜோன்களுக்கு தங்களின் விருப்பமான வெப்பநிலையை அமைக்க அனுமதிக்கிறது. இந்த வசதி மஹிந்திரா XUV400-இல் அறிமுகமானதில் இருந்து பிரதானமாக உள்ளது மேலும் இது தார் ரோக்ஸ்ஸின் ஒரு பகுதியாகவும் இருக்கும். கூடுதலாக, தார் ரோக்ஸ் ரியர் சீட்டில் பயணிப்பவர்களுக்கு வசதியை அதிகரிக்க ரியர் ஏசி வென்ட்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள்
ரியர் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்ட தார் ரோக்ஸ் டெஸ்ட் மியூலின் ஒரு பார்வையை நாம் முன்பு பார்த்தோம். இது ப்ரொடக்ஷன் மாடலும் அவற்றைக் கொண்டிருக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. மஹிந்திரா XUV400 EV நான்கு டிஸ்க் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் தார் ரோக்ஸ் இந்த வசதிகளை EV-யிலும் இணைக்கலாம்.
மேலும் படிக்க: Mahindra Thar Roxx காரில் பனோரமிக் சன்ரூஃப் கிடைக்கும் என்பதை சமீபத்திய டீஸர் படம் உறுதி செய்துள்ளது
வயர்லெஸ் போன் சார்ஜர்
வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், கேபிள்களை பயணத்தின் போது கூடவே எடுத்துச் செல்லும் தேவையை நீக்குகிறது. பயணத்தின் போது உங்கள் மொபைலை சார்ஜ் செய்வதை இது எளிதாக்குகிறது. பல பட்ஜெட் சந்தை கார்கள் ஏற்கனவே இந்த வசதியை வழங்குகின்றன. மேலும் தார் ரோக்ஸ் அடுத்ததாக இந்த ஆப்ஷனைச் சேர்க்கலாம்.
மஹிந்திரா XUV400 EV -யிலிருந்து 5-டோர் மஹிந்திரா தார் ரோக்ஸ் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் சில முக்கிய வசதிகள் உங்களுக்காக இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. வரவிருக்கும் மஹிந்திரா எஸ்யூவி-யில் நீங்கள் பார்க்க விரும்பும் வேறு ஏதேனும் XUV400 வசதிகள் உள்ளதா என்பதை கீழே உள்ள கமென்ட் பகுதியில் உங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மஹிந்திரா தார் ஆட்டோமேட்டிக்