Tata Curvv மற்றும் புதிய Nexon ஆகிய கார்களுக்கு இடையே உள்ள 3 பொதுவான விஷயங்கள்
டாடா கர்வ் க்காக பிப்ரவரி 19, 2024 07:16 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
நெக்ஸனுக்கு மேலே கர்வ்வ் நிலை நிறுத்தப்பட்டாலும் , அதன் சிறிய எஸ்யூவி உடன் பிறப்புகளுடன் சில பொதுவான ஒற்றுமையை கொண்டிருக்கும்.
இந்தியாவில் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவுக்கான அடுத்த அறிமுகமாக டாடா கர்வ்வ் இருக்கப்போகின்றது .டாடா நெக்ஸான் சப் காம்பாக்ட் எஸ்யூவி போலவே இதுவும் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) மற்றும் EV வெர்ஷன் ஆகிய இரண்டிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இரண்டு டாடா எஸ்யூவி -கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருந்தாலும், இரண்டு டாடா சலுகைகளுக்கு இடையே உள்ள ஒன்றுமைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்:
உள்ளேயும் வெளியேயும் உள்ள ஒரே மாதிரியான வடிவமைப்பு
புதிய ஸ்பிளிட்-ஹெட்லைட் மற்றும் LED DRL டிசைன் வடிவமைப்பை, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸானில் கர்வ்வ் கான்செப்ட்டில் இருந்து டாடா எடுத்திருப்பதை முதலில் பார்த்தோம். பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 -ல் காட்சிக்கு வைக்கப்பட்ட தயாரிப்புக்கு நெருக்கமான பதிப்பால் பரிந்துரைக்கப்பட்ட கர்வ்வ் ICE -யில் இதை பார்க்க முடியும். இதில் பம்பரின் கீழ் பகுதியில் கிரில், பக்கவாட்டில் உள்ள ஷார்ப்பான LED DRL -கள், LED ஹெட்லைட்டுகளுக்கான முக்கோண வடிவ ஹவுஸிங் மற்றும் குரோம் இன்செர்ட்களை கொண்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் EV -யில் வழங்கப்பட்டுள்ளபடி, கர்வ்வ் கனெக்டட் LED DRL அமைப்பையும் கொண்டிருக்கும்.
உட்புறத்தில் கூட, டாடாவின் எஸ்யூவி-கூபே நெக்ஸானைப் போலவே மினிமலிஸ்ட் டாஷ்போர்டு மற்றும் டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனலை கொண்டுள்ளது.
இரண்டு காருக்கும் இடையேயான பொதுவான வசதிகள்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸானில் உள்ளதை போலவே, கர்வ்வ் காரிலும் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்களுடன் வரும், ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று டிரைவருக்கான கிளஸ்டருக்காகவும். இதுவும் அதே 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றாலும், இது நெக்ஸான் EV -யிலிருந்து பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீனை பெறலாம். மற்ற பகிரப்பட்ட அம்சங்களில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான முன் இருக்கைகள் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்காக, 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நெக்ஸானின் பாதுகாப்புத் தொகுப்பைப் அப்படியே பெறும் என எதிர்பார்க்கிறோம். டாடா சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் கர்வ்வ் காரை வழங்கும், இதில் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க: ஜனவரி 2024 மாத சப்-4m SUV விற்பனையில் Maruti Brezza மற்றும் Hyundai Venue -வை முந்தியது Tata Nexon
பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் ஒரே மாதிரியானவை
கர்வ்வ் மற்றும் நெக்ஸான் இரண்டின் ICE பதிப்புகள் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனை பெறும்.
விவரங்கள் |
டாடா கர்வ்வ்/ நெக்ஸான் பெட்ரோல் |
டாடா கர்வ்வ்/ நெக்ஸான் டீசல் |
இன்ஜின் |
1.2 லிட்டர் டர்போ |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
125 PS/ 120 PS |
115 PS |
டார்க் |
225 Nm/ 170 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT (எதிர்பார்க்கப்படுகிறது)/ 5-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT, 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT |
கர்வ்வ் காரில் உள்ள டர்போ-பெட்ரோல் இன்ஜின் டாடாவால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய இன்ஜின் ஆகும் இது கடைசியாக ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது..
கர்வ்வ் காரின் அறிமுகம்
டாடா நிறுவனம் வரும் ஜூலை-செப்டம்பர் மாத காலகட்டத்துக்குள் Curvv EV காரை அறிமுகப்படுத்தும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கர்வ்வ் ICE அதன் பிறகு வெளிவரலாம். ஆரம்ப விலை ரூ 10.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது மாருதி கிராண்ட் விட்டாரா கியா செல்டோஸ்,ஹூண்டாய் கிரெட்டா, ஹோண்டா எலிவேட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், எம்ஜி ஆஸ்டர் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
மேலும் படிக்க: டாடா நெக்ஸான் AMT